Published:Updated:

விஞ்ஞானிகளில் ஒரு நேரு மாமா!

படிப்பாளி

விஞ்ஞானிகளில் ஒரு நேரு மாமா!

படிப்பாளி

Published:Updated:
 ##~##

''அறிவியல் மேதைகளின் பெயர்களைச் சொல்லுங்கள்.''

இப்படிக் கேட்டதும் 90 சதவிகிதம் பேர் சொல்லும் முதல் மூன்று பெயர்களுக்குள் கண்டிப்பாக வந்துவிடுவார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அந்த அளவுக்கு அறிவியல் துறையில் பல்வேறு புரட்சிகளைச் செய்தவர். மேலும், வேறு எந்த விஞ்ஞானிகளுக்கும் இல்லாத ஒரு சிறப்பு ஐன்ஸ்டீனுக்கு உண்டு.   விஞ்ஞானி என்றாலே படு சீரியஸான முகத்துடன் விறைப்பாக கேமராவைப் பார்க்கும் புகைப்படங்களே நினைவுக்கு வரும். ஆனால், ஐன்ஸ்டீன் முகத்தில் குழந்தைத்தனமும் குறும்பும் ஒளிரும். சுட்டிகளுடன் அதிகமாகப் பழகியவரும் இவரே. விஞ்ஞானிகளில் ஒரு நேரு மாமா என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விஞ்ஞானிகளில் ஒரு நேரு மாமா!

சிலரைப் பற்றி எத்தனை முறை எத்தனை புத்தகங்களில் படித்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தகவல்  கிடைக்கும். அதற்கு இந்தப் புத்தகம் ஓர் உதாரணம். இதில் 48 தலைப்புகளில் ஐன்ஸ்டீனைப் பதிவுசெய்து இருக்கிறார் ஆசிரியர் கமலநாதன். கண்டுபிடிப்புகள், சந்தித்த சவால்கள், புரிந்த சாதனைகள் என விஞ்ஞானி ஐன்ஸ்டீன் பற்றி மட்டும் இல்லாமல், தெரியாத பல விஷயங்களையும் அறிய முடிகிறது. குறிப்பாக, அவரது மனித நேயம், இசை ஆர்வம், இலக்கிய அறிவு, நமது தேசியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் உடனான நட்பு எனப் பல விஷயங்கள் மிகவும் எளிய நடையில் அழகாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன.

நமது வீட்டு நூலகத்தில் வைப்பதற்கும் நண்பர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதற்கும் ஏற்ற புத்தகம்.

அறிவியல் புரட்சியாளர் ஐன்ஸ்டீன்  

-கமலநாதன்

வெளியீடு: ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்

106/4 ஜானி ஜான்கான் சாலை,

இராயப்பேட்டை, சென்னை-14.

விலை:

விஞ்ஞானிகளில் ஒரு நேரு மாமா!

100/-      

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism