Published:Updated:

சுட்டி நியூஸ்

இது எங்க ஏரியா

சுட்டி நியூஸ்

இது எங்க ஏரியா

Published:Updated:

கடல் வண்ணத்துப்பூச்சி!

சுட்டி நியூஸ்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோட்டத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச் சியைத் தெரியும். கடல் வண்ணத்துப்பூச் சியைத் தெரியுமா? அண்டார்டிகா போன்ற குளிர்ப் பிரதேசங்களில் காணப்படும். இவற்றின் இறக்கைகள் கண்ணாடிபோல் பளபளப்புடனும், நரம்புகள் இளம் சிவப்பு நிறத்திலும் இருக்கும். இவை கடல் நத்தைகள் குடும்பத்தைச் சேர்ந்தவை. தண்ணீருக்குள் மிகவும் சீரான வேகத்தில் அழகாகச் செல்லும்.

 பேரீச்சம்பழ லட்டு!

சுட்டி நியூஸ்

நண்பர்களே... ஒரு நாள் பள்ளியைவிட்டு வந்ததும், சாப்பிட நொறுக்குத் தீனி எதுவும் இல்லை.  கொஞ்சம் பேரீச்சம்பழங்களை எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டேன். அதோடு வாழைப்பழத்தில் ஒரு சிறிய துண்டைப் பிசைந்து போட்டேன். (மீதியைச் சாப்பிட்டுட்டேன்!) நெய், பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றையும் சேர்த்து, நல்லாப் பிசைந்து ஒரு உருண்டையாக உருட்டினேன். இதைப் பார்த்த பாட்டி, ''என்னடி பண்றே?''னு கேட்டாங்க. ''பேரீச்சை லட்டு சாப்பிடுறீங்களா?''னு சொல்லி அவங்களுக்கும் கொடுத்தேன். புதுசா ஒரு ரெசிப்பியைக் கண்டுபிடிச்ச பெருமிதத்துடன் சாப்பிட்டேன். நீங்களும் ட்ரை பண்ணுங்களேன்!

இடியே இடியே வா வா!

சுட்டி நியூஸ்

என்ன எல்லாரும் மழை வரத்தானே பாடுவார்கள். இவன் இடியைக் கூப்பிடுகிறானே என்று நினைக்கிறீர்களா? காரணம் இருக்கிறது. மழை பெய்யும்போது உண்டாகும் இடியால், மிக அதிகமாகப் பயிர்கள் விளைச்சலைத் தரும். கோதுமை, பார்லி போன்றவை வளர்ச்சி அடைந்து, சுமார் 25 நாட்களுக்கு முன்னதாகவே அறுவடைக்கான பக்குவத்தை அடைகின்றனவாம். இதற்கு எல்லாம் காரணம் இடியில் இருக்கும் மின்காந்தமே. என்ன ஒண்ணு, இடி வரும்போது நாம் பாதுகாப்பான இடத்தில் இருக்கவேண்டும்.

 செங்கோட்டை!

சுட்டி நியூஸ்

சுதந்திரப் போராட்ட சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ''நாம் சுதந்திரம் பெற்றால் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவோம்'' என்றார். சுதந்திரம் அடையும் முன்பே 1943-ல் ''நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம்'' என்று அறிவித்து, இந்திய அரசை உருவாக்கினார். இந்தக் காரணத்திற்காகவே இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். அன்று முதல் ஒவ்வொரு பிரதமரும் இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகிறார்கள்.

தமிழ் விஞ்ஞானிகள்!

சுட்டி நியூஸ்

விஞ்ஞானம் இன்று சொல்லும் விஷயங்களைப் பல நூற்றாண்டு களுக்கு முன்பே நமது புலவர்கள் தம் கவிதைகளில் சொல்லி இருக்கிறார்கள்.  உதாரணமாக, திருவள்ளுவர் தன் குறட்பா ஒன்றில்...

'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை’ என்ற குறள் மூலம் உலகம் சுழல்கிறது என்று கூறுகிறார். இதற்குப் பின்புதான் உலகம் தட்டை அல்ல, உருண்டை என்பது கண்டறியப்பட்டது. நிக்கோலோ கிராப்ஸ் 'உருளையான பொருள் சுழலும் என்பது அறிவியல் நியதி.’ என்றார்.

சிரிங்க நண்பர்களே!

சுட்டி நியூஸ்

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். இதை நிரூபிக்க, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோஜி என்னும் மனோ தத்துவப் பேராசிரியர்  டிஜிட்டல் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து இருக்கிறார். 'ஹா ஹா’ சத்தம் வெளிப்படும்போது ஏற்படும் மின் அதிர்வுகளை இந்த டிஜிட்டல் கருவி அளவிடுகிறது.இப்படிச் சிரிக்கும்போது மின் அதிர்வுகள் உடலில் பரவி, சுரப்பிகள் இயங்கும் திறன் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் சீராகும். இதயத்துக்கும் வயிறுக்கும் இடையே உள்ள தசைகள் முழு வேகத்தில் புத்துணர்ச்சி பெறும்'' என்கிறார் யோஜி. அதனால் நண்பர்களே வாய்விட்டுச் சிரிங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism