Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

Published:Updated:
பென் டிரைவ் !
##~##

ஜார்ஜியா நாட்டில் ருஸ்டாவி (Rustavi) நகரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம், நிஜமான விமானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இது குழந்தைகளின் விளையாட்டுப் பள்ளி (kindergarden school). பள்ளியின் தலைமை ஆசிரியை காரி சாப்பிட்ஜ் (Gari Chapidze),  ஜார்ஜியா ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்து Yak-42 என்கிற  விமானத்தை வாங்கி, அதையே பள்ளியாக மாற்றி உள்ளார். கல்வி உபகரணங்கள், பொம்மைகள் என அனைத்தும் அதில் உள்ளன. ஓட்டுனர் அறையில் மாற்றம் செய்யாமல், குழந்தைகள் விளையாட உபயோகப்படுத்தப்படுகிறது. அப்போது, நிஜமாகவே விமானத்தை ஓட்டும் உணர்வு குழந்தைகளுக்கு ஏற்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பென் டிரைவ் !

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் ஸ்பெல் மாஸ்டர் 2013 (SUPER SPELL MASTER 2013) போட்டிகளில் வென்று இருக்கிறார் அனன்யா. வாசன் ஐ கேர் நிறுவனம் நடத்திய ஆங்கில ஸ்பெல்லிங் போட்டிகளில் 30 பள்ளிகளைச் சேர்ந்த 150 பேர் கலந்துகொண்டனர். இறுதிச் சுற்றில் பங்கேற்ற ஆறு பேர்களில் முதல் இடத்தைப் பெற்றார் அனன்யா. சென்னை - கோபாலபுரத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் 8-ம் வகுப்புப் படிக்கும் அனன்யாவுக்கு போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் கிடைத்த பரிசு, பெற்றோருடன் கொழும்புவுக்கு ஜாலி சுற்றுலா.

பென் டிரைவ் !

தொழில்நுட்ப உலகில் மிகவும் கடினமானதாகக் கருதப்படும் மைக்ரோசாஃப்ட் சர்ட்டிஃபைடு டெக்னாலஜி ஸ்பெஷலிஸ்ட் (Microsoft Certified Technology Specialist - MCTS)தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்து இருக்கிறார், ஒன்பது வயது பிரணவ். உலகின் இளம் மைக்ரோசாஃப்ட் வல்லுநர் என்ற பெருமையுடன் வலம் வரும் இவரது பூர்வீகம் தமிழ்நாடு. தந்தை கல்யாண்குமார், மதுரை பாலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிகிறார். மூன்று வயதில் கம்ப்யூட்டரில் புகுந்து விளையாடத் தொடங்கிய பிரணவ், தன் தந்தையின் உதவியுடன் தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். மைக்கோராசாஃப்ட் அளித்த அங்கீகாரத்தின் பலனாக, இணையக் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா, 'கணினி அறிவியல்’ துறை, சுட்டி மேதைகள் (Child Prodigies)பட்டியலில் இவரை இணைத்துக் கௌரவப்படுத்தி உள்ளது.

பென் டிரைவ் !

நாகாலாந்தில், எலெக்ட்ரிக் கிதார் இசை நிகழ்ச்சியில் புதிய சாதனை ஒன்று சமீபத்தில் நிகழ்த்தப்பட்டது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 368 இசை ஆர்வலர்கள் பங்கேற்றனர். அஸ்ஸாம், மணிப்பூர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். இதில் கலக்கியவர்களில் சிறுவர்களும் அடங்குவர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற எலக்ட்ரிக் கிதார் இசை நிகழ்ச்சியில், 250 பேர் ஒன்றுசேர்ந்து நடத்தியதே கின்னஸ் சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில்தான் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் ஒன்று திரண்டு இந்த இசை விருந்தைப் படைத்தனர்.