Published:Updated:

உருவாகிறார் ஓர் உலக நாயகி !

கா.பெனாகிர்,படங்கள் : வீ.சிவக்குமார்

உருவாகிறார் ஓர் உலக நாயகி !

கா.பெனாகிர்,படங்கள் : வீ.சிவக்குமார்

Published:Updated:
##~##

கேரம் விளையாட்டில் இன்னொரு இளவழகி உருவாகி வருகிறார்.

வத்தலக்குண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்புப் படிக்கும் சோபிகா, தேசிய அளவிலான கேரம் சாம்பியன் பட்டம் வென்றவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உருவாகிறார் ஓர் உலக நாயகி !

கேரம், அதலெடிக்ஸ், வாலிபால், ஃபுட்பால் ஆகிய போட்டிகளில் வென்ற பதக்கங்கள் மற்றும் பரிசுகள் என சோபிகாவின் வீடு முழுக்க அலங்கரிக்கின்றன.

''என் தாத்தா, அம்மா, மாமா எல்லாரும் கேரம் விளையாட்டில் கலக்குவாங்க. நான் அவர்கள் விளையாடுவதைக் கவனிச்சுட்டே இருப்பேன். எனக்கும் ஆர்வம் வந்துச்சு. 'நீ கேரமில் பெரிய ஆளா வருவே’னு தாத்தா உற்சாகப்படுத்தினார். அவருக்குத்தான் முதல்ல தேங்ஸ் சொல்லணும்'' என்கிறார் சோபிகா.

முதன் முதலில் திண்டுக்கலில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் முதல் பரிசு வாங்கி இருக்கிறார் ''முதன் முதலில் கலந்துகொண்டபோது கைவிரல் எல்லாம் நடுங்கியது. என்னை மீறி விரல்கள் எங்கோ போகிற மாதிரி ஒரு ஃபீலிங். 'நான் கண்டிப்பா ஜெயிப்பேன்’னு மனசுல சொல்லிட்டே ஆடினேன். இப்போ என்னோட விரல்கள் நான் சொல்ற பேச்சைக் கேட்குது'' என்று சிரிக்கும் சோபிகா, தனது வெற்றிக்கான வழிகளையும் சொன்னார்.

''பயிற்சி எடுக்கும்போது மெதுவாக அடித்துதான் விளையாடுவேன். அப்போதுதான் விரலால் நன்கு அடிக்க முடியும். அதற்காக அக்குபஞ்சர் பாலால் கையில் அழுத்திப் பயிற்சி எடுப்பேன். அந்தப் பந்தால் அழுத்தும்போது, விரலுக்கு நன்கு பயிற்சி கிடைக்கும்.'' என்கிறார்.

உருவாகிறார் ஓர் உலக நாயகி !

கடந்த ஆண்டு தேசிய அளவில் டெல்லி ஃபரிதா பாத்தில் நடந்த கேரம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சோபிகா கேரம் காய்களை அடிக்கும் அதே விரல்களால் அபிநயம் பிடித்து பரதம் ஆடுகிறார். தூரிகையைப் பிடித்து ஓவியம் வரைந்து அசத்து கிறார்.

''வாலிபால், அத்லெட்டிக்ஸ் என எல்லாவற்றிலும் ரவுண்ட் வந்துட்டு இருந்தேன். கேரமில் வந்த பிறகு முழுக் கவனமும் இதில்தான் இருக்கு. என் தாத்தாவின் கனவை நிஜம் ஆக்க வேண்டும். உலகச் சாம்பியன் பட்டம் வெல்லவேண்டும்'' என்று சொல்லும் சோபிகாவின் கண்களில் தன்னம்பிக்கை ஒளிர்கிறது.