Published:Updated:

பெற்றோர்களுக்கு ஒரு பாடம் !

பெற்றோர்களுக்கு ஒரு பாடம் !

பெற்றோர்களுக்கு ஒரு பாடம் !

பெற்றோர்களுக்கு ஒரு பாடம் !

Published:Updated:
##~##

'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்பதுபோல நடிகர் நாசரின் கடைக்குட்டி மகன் அபிஹாசன், 'சுன்சுன் தாத்தா’ என்ற குறும்படத்தில் நடிப்பு அவதாரம் எடுத்து இருக்கிறார்.

''ஆறாம் வகுப்பு லீவில் மலேசியாவுக்குப் போனபோது தோன்றிய ஒரு சின்னக் கதை. பெரிதாக வளர்ந்து முழுப் படத்தையும் அங்கேயே எடுத்தோம்'' என்கிற அபி, இப்போது படிப்பது விருகம்பாக்கம் பாலலோக் மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன் மகனின் மனநிலையை அறியாது, பணத்துக்காக காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அலையும் பெற்றோர்கள் பற்றிய கதை. பாசத்துக்கு ஏங்கும் பள்ளிச் சிறுவனாக வாழ்ந்து இருக்கிறார் அபி. படத்தை இயக்கி, அப்பா வேடத்தில் நடித்து இருக்கிறார் நாசர். சுன்சுன் தாத்தா வேடத்தில் நடித்து இருக்கும் ஜமால், நம்ம ஊர் நாகேஷ் மாதிரி மலேசியாவில் பெரிய நடிகர்.

பெற்றோர்களுக்கு ஒரு பாடம் !

''பாசத்துக்காக ஏங்கும் குழந்தைகளின் மனநிலையைப் பெற்றோர்களுக்கு உணர்த்துவதற்காக எடுத்த படம். மலேசியாவின் ஓர் அடுக்குமாடியில் வசிக்கும் சிறுவனிடம் வெளியூரில் இருக்கும் அம்மா, அப்பா எப்போதாவது போனில் பேசுவார்கள். தனியாக இருக்கும் அவனுக்கு ஆறுதலாக இருதய நோயாளியான தாத்தா ஒருவர் வருகிறார். அவர்தான் சுன்சுன் தாத்தா. அவர் வந்த பிறகு சிறுவனின் தனிமை நீங்கி அவருடன் சந்தோஷமாகப் பல இடங்களுக்குச் செல்கிறான். ஆனால், அந்த சந்தோஷம் நிலைக்கவில்லை. வயதானவருக்கு இருக்கும் நோய் தன் மகனையும் தாக்கும் என்று நினைத்து, பெரியவரை வீட்டைவிட்டு அனுப்பிவிடுகிறார் சிறுவனின் அம்மா. கடைசியில் சிறுவன் ஒரு பட்டாம்பூச்சியுடன் நண்பனாகிறான். மலேசியாவின் தமிழ்ச் சேனல்களில் ஒளிபரப்பாகிப் பாராட்டுகளைப் பெற்று இருக்கிறது சுன்சுன் தாத்தா.  சமீபத்தில் சென்னையிலும் திரையரங்கில் வெளியானது.'' என்கிறார் அபிஹாசன்.

பெற்றோர்களுக்கு ஒரு பாடம் !

''இன்றைய காலகட்டத்தில் பல வீடுகளில் தந்தை, தாய் இருவருமே வேலைக்குச் செல்வது கட்டாயம் ஆகிவிட்டது. தேவைக்காகச் செல்வது தவிர்க்க முடியாது. அதே சமயம் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் அவர்களிடம் சக மனிதர்களை நேசிக்கும் குணம் வளரும்'' என்கிறார் அபி அக்கறையாக.

பெற்றோர்களுக்கு ஒரு பாடம் !