Published:Updated:

சுட்டி நியூஸ்

சுட்டி நியூஸ்

சுட்டி நியூஸ்

சுட்டி நியூஸ்

Published:Updated:
சுட்டி நியூஸ்

செக்கிங் ப்ளீஸ்!

சுட்டி நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
எறும்பு
கள் கூட்டுக்குச் செல்லும்போது, ஓர் எறும்பு அங்கே நின்றவாறு, உள்ளே வருகிற ஒவ்வோர் எறும்பையும் தொடும். அந்தக் கூட்டின் பாதுகாவலர் எறும்பான அது, தனது உணர்கொம்புகள் மூலம் இப்படி கூட்டுக்குள் நுழையும் ஒவ்வோர் எறும்பையும் தொட்டு இவர் நம்மவர்தானா, வெளிக்கூட்டினரா எனப் பரிசோதித்த பின்னரே, கூட்டுக்குள் அனுமதிக்கும். வருகின்ற எறும்புகலிவீன் உடம்பில் இருந்து வெளியேறும் வேதிப்பொருள் மூலம் தன் கூட்டு எறும்புகளின் வாசனையை அந்தக் காவலாளி எறும்பு உறுதி செய்கிறது.

தமிழ்த் தண்ணீர்!

நீர்நிலைகள் இருக்கும் இடங்களுக்குக் குளம், ஊற்று, நதி, குட்டை, ஆறு, அருவி, சமுத்திரம் என எத்தனையோ பெயர்கள். ஆனால், நீங்கள் அதிகம் கேள்விப்படாத தமிழ்ப் பெயர்களும் தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு உண்டு. அவை...

சுட்டி நியூஸ்

சுனை = ஊற்று  
தீர்த்திகை =  நதி
கலுழி = காட்டாறு
கிண்ணகம் = வெள்ளம்
கூவம், கேணி = கிணறு
ஊருணி = குளம்

ஏபெல் விருது!

சுட்டி நியூஸ்

நோபல் பரிசு கணிதத் துறைக்கு இல்லாத குறையைப் போக்குவதற்காக வந்ததே ஏபெல்   விருது (Abel Prize.) நீல்ஸ் ஹென்ரிக் ஏபெல் (Niels Henric Abel)எனும் கணிதவியல் அறிஞரின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு, 2003-ல் இருந்து நார்வே அரசால் வழங்கப்படுகிறது. விருது அறிவித்த ஆண்டில் அதன் மதிப்பு, நார்வே நாணய மதிப்பில் 20 கோடி குரோனர். டாலர் மதிப்பில் 23 லட்சம். 2007ல் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த சீனிவாச வரதன் என்பவரும் இந்த விருதைப் பெற்று இருக்கிறார்.

நம்பர் பிளேட்!

சுட்டி நியூஸ்

வாகனங்களில் 'நம்பர் பிளேட்’ பொருத்துகிறோம். உலகில் முதன் முதலில் இப்படிப் 'பதிவு எண்’ கொடுத்து சாலையில் வாகனங்களை ஓடவிட்டவர்கள் ஃப்ரான்ஸ் நாட்டினர்தான். நான்கு சக்கர வாகனங்களுக்குத்தான் முதலில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டன. 1893ம் ஆண்டில் இந்த நடைமுறை பரவலாகியது.  கதவுகளுக்கு எண் இடும் வழக்கத்தையும் ஃப்ரான்ஸ் நாட்டினர்தான் கொண்டுவந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 அணுகுண்டைவிடப் பெரிய ஆயுதம்!

அமெரிக்கா முதன் முதலாக அணுகுண்டு தயாரித்து இருந்தது. அதன் முதல் அணுகுண்டுத் தயாரிப்பை ராபர்ட் ஒப்பன் ஹீமர் என்ற விஞ்ஞானி மேற்பார்வை செய்துவந்தார். அவர் அணுகுண்டு தொடர்பான நுணுக்கத் தகவல்களை அளிப்பதற்காக விஞ்ஞானிகள் மாநாடு ஒன்றைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் ஒரு விஞ்ஞானி எழுந்து, ''இந்த அணுகுண்டைவிட சக்தி வாய்ந்த வேறு ஆயுதம் உண்டா?'' என்று கேட்டார்.

சுட்டி நியூஸ்

''நிச்சயமாக இருக்கிறது. அந்த ஆயுதம் மட்டும் பிரயோகிக்கப்பட்டால், அணுகுண்டு இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்'' என்றார் ஹீமர்.

''அது என்ன ஆயுதம்?'' என்று எல்லா விஞ்ஞானிகளும் பரபரப்புடன் கேட்டனர்.

அதற்கு ஹீமர் சிரித்தவாறே ''சமாதானம். உலக நாடுகள் எல்லாம் சமாதானமான வாழ்வை மேற்கொள்ள முடிவுசெய்துவிட்டால், இந்த அணுகுண்டைக் குப்பையில்தான் வீசி எறியவேண்டும்'' என்றார்.

 உலகப் பொன்மொழி!

விவேகானந்தரின் பொன்மொழிகள் உலகம் முழுவதும் சிறப்புப் பெற்றவை. அதில் ஒன்று Arise! Awake! and stop not Till the goal is reached (எழுமின்! விழுமின்! இலக்கை அடையும் வரை ஓயாதே)

சுட்டி நியூஸ்

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று ஆன்மிகச் சிந்தனையைப் பரப்பிவிட்டு, சுவாமி விவேகானந்தர் 1897 ஜனவரி 26-ல் ராமேஸ்வரத்திற்குக் கப்பலில் வந்து இறங்கினார். ரயிலில் மதுரை, திருச்சி, கும்பகோணம் வழியாகப் பயணம் செய்து 1897 பிப்ரவரி 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு மயிலாடுதுறைக்கு வந்தார். பிறகு கும்பகோணம் சென்றவர், இந்த வாசகத்தைப் அங்கே பேசினார். உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் ஒரு பொன்மொழி எங்கள் பகுதியில்  பிறந்தது என்பதில் மிகவும் பெருமை.