Published:Updated:

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

Published:Updated:
##~##

''டியர் ஜீபா... சிங்கத்தைவிட புலிதான் பலசாலி என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்புறம் எப்படி சிங்கம் காட்டுக்கு ராஜா ஆனது?''

-எஸ்.சி.பிரகாஷ், திருப்பூர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இரண்டுமே பூனைப் பேரினத்தைச் சேர்ந்த வலிமையான விலங்குகள். பலத்தில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. புலிகளின் சராசரி எடை 300 கிலோ என்றால், சிங்கத்தின் எடை 250 கிலோ. சுறுசுறுப்பு, இரையைப் பிடிப்பதில் காட்டும் வேகம் எனப் பல விஷயங்களில் சிங்கத்தைவிடப் புலி 'கிங்’தான். ராஜா என்றால் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்பது மனிதர்களின் நினைப்பு. சினிமாவில்கூட ஹீரோ  அழகாக இருப்பார். அப்படித்தான் சிங்கத்தின் அழகான பிடரியில் சொக்கிப்போய், மனிதர்கள் அதைக் காட்டு ராஜாவாக கதைகளில் சொல்கிறார்கள். மற்றபடி எந்தக் காட்டு விலங்கும் ஓட்டுப்போட்டு சிங்கத்தை ராஜா ஆக்கவில்லை பிரகாஷ்.''     

மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... ஆதி மனிதன் இலை, தழையை ஆடையாக அணிந்து இருந்தான் என்கிறார்களே, அப்படி என்றால் இலையுதிர் காலத்தில் என்ன செய்து இருப்பான்?''

-கே.எம்.வேந்தன் அரசு, திருவண்ணாமலை.

''வாவ்... உன் பெயரைப் போலவே கேள்வியும் வித்தியாசமாக இருக்கிறது வேந்தன். பூமியின் பருவநிலை மாறும்போது ஏற்படுவதுதான் இலையுதிர் காலம். அப்போது எல்லா மரங்களுமே இலைகளை உதிர்த்துவிடாது. பல மரங்களில் எல்லாப் பருவங்களிலும் இலைகள் இருக்கும். இவற்றைப் பசுமைமாறாத் தாவரங்கள் என்பார்கள். எனவே, இலையுதிர் காலத்தில் காடு முழுவதுமே

மை டியர் ஜீபா !

மொட்டை ஆகிவிடாது. அதனால், ஆதி மனிதனுக்கு என்றுமே ஆடைப் பிரச்னை இருந்தது கிடையாது. பொங்கல், தீபாவளி போல தினம் தினம் அவன் புது ஆடையில் குஷியாகவே இருந்தான்.''

''ஹலோ ஜீபா... 'பழத்தைவிடத் தோலில் சத்து அதிகம். ஆப்பிள் மாதிரியான பழங்களைத் தோலுடன் சாப்பிட வேண்டும்’ என்று பாட்டி சொல்றாங்க. இது சரியா?

-எஸ்.பிரதிஷா, கோபி.

''பழங்களின் தோலிலும் சத்து இருப்பது உண்மைதான் பிரதிஷா. ஆனால், இன்றைய நிலையில் தோலைத் தவிர்த்துவிடுவதே நல்லது என்பேன். ஏனெனில், பாட்டியின் சிறுவயதுக் காலத்தில் பெரும்பாலும் பழம், காய்கறிகள் போன்றவற்றை இயற்கை முறையிலேயே விளைவித்து விற்பனை செய்தார்கள். இப்போது அப்படி அல்ல. பழங்களை வியாபார நோக்குடன் விரைவில் பழுக்கவைக்க ரசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள். விளைந்த பழங்களை நீண்ட நாட்கள் பாதுகாக்கவும் ரசாயனங்களைத் தோலின் மீது பூசுகிறார்கள். என்னதான் நன்றாகக் கழுவினாலும் இந்த ரசாயனங்கள் முழுமையாக நீங்குவது இல்லை. அதனால், தோலை நீக்கிவிட்டுப் பழத்தை மட்டும் சாப்பிடுவதே நல்லது''

''ஹலோ ஜீபா... சிறிய உயிர்களான புழு, பூச்சிகள்கூட நம்மைப் போல் தூங்குமா?''

   -வி.முத்துக்குமார், போளூர்.

''எல்லா உயிர்களுக்குமே உறக்கமும் ஓய்வும் மிக முக்கியமாக இருக்கிறது முத்து. ஓய்வுதான் அடுத்து செய்யவேண்டிய வேலைக்கான சக்தியைக் கொடுக்கிறது. ஓய்வு எடுக்கும் முறையும் நேரமும் மட்டுமே மாறுபடும். உதாரணமாக, குதிரை மற்றும் யானைகள், நாள் ஒன்றுக்குச் சராசரியாக மூன்று மணி நேரம் தூங்குகின்றன. காவலுக்குக் கெட்டிக்காரன் என்று சொல்கிற நாய், 10 மணி நேரம் உறங்கும். இருட்டு ராஜாவான வெளவால் 20 மணி நேரத்தை உறக்கத்தில் கழிக்கும். பூச்சிகளின் உறக்கம் என்பதும் அப்படியே. இரவில் நம்மைச் சுற்றிவந்து தூக்கத்தைக் கெடுக்கும் கொசுக்களும் பகலில் நிம்மதியாகத் தூங்கப்போய்விடும்.''

மை டியர் ஜீபா !

''ஹாய் ஜீபா... உன்னை மாதிரியான யானைகளுக்கு தும்பிக்கை இருப்பது எதற்கு?''

   -சி.நந்திதா, சென்னை-53.

''அது இயற்கை கொடுத்த சிறப்பு அமைப்பு நந்திதா. இயற்கை காரணத்துடனே எதையும் கொடுக்கும். நீ சாப்பிடும்போது என்ன செய்கிறாய்? கையால் அல்லது ஸ்பூனால் உணவை எடுத்துச் சற்றே தலையைக் குனிந்து வாய்க்குள்போட்டுச் சாப்பிடுகிறாய். எங்களுக்கோ கைகள் கிடையாது. கை என்ற உறுப்பு இல்லாத ஒட்டகச்சிவிங்கி சாப்பிட நினைத்தால், நீளமான கழுத்தைத் தூக்கி உயரத்தில் இருக்கும் இலையை வாய்க்குள் இழுத்துச் சாப்பிடும். எங்கள் கழுத்தோ தலையோடு ஒட்டியது. மான், சிங்கம் போல் குனிந்து தரையில் இருப்பதைச் சாப்பிடலாம் என்றால், 6,000 கிலோ எடைகொண்ட உடலுடன் குனிய முடியாது. அதனால், இயற்கை கொடுத்த ஸ்பூன்தான் இந்தத் தும்பிக்கை. அந்த ஸ்பூனைச் சாப்பிடுவதற்கு மட்டும் இல்லாமல், பாரங்களைத் தூக்கவும் பயன்படுத்துகிறோம்.