Published:Updated:

நெட்டிஸம் !

சைபர்சிம்மன்

நெட்டிஸம் !

சைபர்சிம்மன்

Published:Updated:
##~##

'மத்திய ஆசியாவில் உள்ள ஆப்கானிஸ்தானில், கரடுமுரடான மலைகள் அதிகம். பெரும்பாலும் பாலைவனப் பரப்பைக்கொண்டு இருந்தாலும் மலைச் சிகரங்களில் எப்போதும் பனிப்பொழிவு இருக்கும். மலைகளுக்கு இடையே உள்ள செழிப்பான சமவெளிகளில் மக்கள் வாழ்கின்றனர். அங்கு 20 சதவிகித நிலப்பகுதிதான் பயிர் செய்யப் பயன்படுத்தப் படுகிறது.’

இது, ஆப்கானிஸ்தான் நாட்டைப் பற்றிய அடிப்படைத் தகவல். இதே போல் பல்வேறு தகவல்களை எளிமையாகச் சொல்கிறது நேஷனல் ஜியாக்ரஃபிக் அறிவியல் இதழின் வலைத்தளம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேஷனல் ஜியாக்ரஃபிக் இணைய இதழ், சிறுவர்களுக்கு என்றே தனிப் பகுதியை உருவாக்கி உள்ளது. சிறுவர் களுக்கான செய்திகள், விளையாட்டு, புகைப்படங்கள் எனப் பல்வேறு தனித் தலைப்புகளில் தகவல்கள் இடம்பெறுகின்றன. இவற்றில், நாடுகள் என்னும் தலைப்பில் கிளிக் செய்தால், உலகில் உள்ள நாடுகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

இப்படித்தான் ஆப்கானிஸ்தான் பற்றி அறிய முடிகிறது. இது போல் எந்த நாடுபற்றி அறியவேண்டும் என்றாலும் சரி, இந்தப் பகுதி உங்களுக்கு கைகொடுக்கும்.

நெட்டிஸம் !

சொல்லும் தகவல்கள் போரடிக்காத வகையில், அழகான புகைப்படங்களின் துணையோடு படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது.

நாடுகள் பக்கத்துக்குச் சென்றவுடன், நான்கைந்து வரிகள்கொண்ட ஸ்லைடுகளாக நாடுகள் பற்றிய குறிப்புகள் திரையில் தோன்றும். அவற்றை வரிசையாக க்ளிக் செய்து படித்தால், குறிப்பிட்ட நாட்டின் அடிப்படை விவரங்கள் அத்துப்படியாகிவிடும். அவற்றின் முடிவில் நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர், தலைநகரம், மக்கள்தொகை, பேசப்படும் மொழிகள் ஆகிய விவரங்களும் புள்ளிவிவரங்களாக உள்ளன. அருகிலேயே புகைப்படம் சார்ந்த குறிப்புகளும் உண்டு. அப்படியே அந்தப் புகைப்படங்களை நண்பர்களுக்கு இணைய வாழ்த்து அட்டைகளாகவும் அனுப்பலாம். இந்தத் தகவல்களையும் இ-மெயில் வாயிலாகப் பரிமாறிக்கொள்ளலாம். விரும்பினால், அவற்றை அச்சிட்டும் சேகரிக்கலாம்.

நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளும் நாட்டின் இருப்பிடத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதற்காக, வரைபட வசதியும் உள்ளது. அதில் க்ளிக் செய்தால், வரைபடத்தின் மீது அந்த நாடு எங்கே இருக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

நெட்டிஸம் !

நாடுகள் பட்டியலும், அவற்றுக்கான புகைப்படத்துடனேயே தரப்பட்டு உள்ளது. அந்தப் படத்தின் மீது க்ளிக் செய்தால் போதும், நாடுகளின் விவரம் வந்துவிடும். தனித்தனியே நாடுகள் பற்றிய விவரங்களைத் தேடுவதைவிட, இப்படி ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள முடிவது நல்ல விஷயம்தானே?

உலக நாடுகள் பற்றிய விவரங்களுக்கு இந்தத் தளத்தைப் பயன்படுத்திப் பாருங்கள். வீட்டுப்பாடத்துக்காக மட்டும் இல்லாமல், பொதுஅறிவை வளர்த்துக்கொள்ளவும் இது உதவும்.

சுவிட்ஸர்லாந்து நாட்டில் அதிகாரப்பூர்வ மொழி கிடையாது.

நெட்டிஸம் !

ஃப்ரான்ஸில் 25 சதவிகித நிலப்பரப்பு காடுகளைக்கொண்டது, பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்காகவே 10 சதவிகிதப் பரப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது.

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் 'எரிமலைகளின் பூமி’ என்று அழைக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் எந்தப் பகுதியும் கடற்கரையில் இருந்து 30 மைல் தொலைவுக்கு மேல் கிடையாது.

இதுபோன்ற சுவாரசியமான விவரங்களைத் தெரிந்துகொள்ள நீங்கள் உலவவேண்டிய தளம்...

http://kids.nationalgeographic.co.in/kids/places/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism