Published:Updated:

கடற்கரையில் கின்னஸ் காந்திகள் !

சரா,கே.கார்த்திகேயன்

கடற்கரையில் கின்னஸ் காந்திகள் !

சரா,கே.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

ஜனவரி 30 - மகாத்மாவின் நினைவு தினத்தில், சென்னை  மெரினா கடற்கரையில்... 1,029 சுட்டிகள் காந்தியடிகளாகவே வலம்வந்து, புதிய சாதனை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

காந்தி வேர்ல்டு ஃபவுண்டேஷன் அமைப்பு நடத்திய இந்த நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி மற்றும் அதைச் சுற்றி உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், காந்திகளாக உருமாறினார்கள். விவேகானந்தர் இல்லம் தொடங்கி, காந்தி சிலை வரை பிரமாண்ட ஊர்வலம் சென்றனர். அவர்களின் கரங்களில் 'நடை... நோய்க்குத் தடை’ போன்ற வாசகங்கள் இருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிகழ்ச்சி இந்தியா மற்றும் தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்டு, ஆசிய புக் ஆஃப் ரெக்கார்டு ஆகியவற்றில்  பதிவாகின. கின்னஸ் மற்றும் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டுகளில் பதிவாக உள்ளது.

கடற்கரையில் கின்னஸ் காந்திகள் !

இதுவரை நிகழ்த்தப்பட்ட சாதனைகள் அனைத்திலுமே சுட்டிகள், காந்தியைப் போல் மாறுவேடமிட்டும், மொட்டைக்கான 'விக்’ வைத்துமே வலம்வந்து இருக்கிறார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியில் நிஜமாகவே அனைவரும் மொட்டை அடித்துக் கொண்டார்கள்.   மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்தச் சாதனை ஊர்வல நிகழ்ச்சிக்காக, முந்தைய தினத்தில் கும்மிடிப்பூண்டியில் 1,029 சுட்டிகளுக்கு 40 நிமிடங்களில் மொட்டை அடிக்கப்பட்டது. இதுவும் ஒரு சாதனைதான்.

உலக அளவில் கவனத்தை ஈர்த்த இந்தச் சாதனைகுறித்து காந்தி வேர்ல்டுஃபவுண்டேஷனின் நிறுவனர் ராஜேஷ் கூறும்போது, ''நம் இளம் தலைமுறையினரிடையே காந்தியின் கொள்கைகளைக் கொண்டு செல்வதுதான் எங்கள் அமைப்பின் நோக்கம். இதற்காக, காந்தியடிகளின் தத்துவங்களைப் பறைசாற்றும் வகையில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்திவருகிறோம். அதன் ஒரு பகுதியாக, ஒரே நேரத்தில் 1,029 சுட்டிகளைக் காந்திகளாக வலம் வரச்செய்து புதிய சாதனை படைத்து இருக்கிறோம். இதை நிறைவேற்ற மூன்று மாதங்களாக, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுடன் களம் இறங்கினோம்'' என்கிறார்.

கடற்கரையில் கின்னஸ் காந்திகள் !

பல்வேறு பள்ளிகளில் இருந்தும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்புத் தந்து இருக்கிறார்கள். ''டெல்வின் ஃபார்முலேஷன் என்ற மருந்து நிறுவனத்தின் உறுதுணையுடன், இந்தச் சாதனையை வெற்றிகரமாக அரங்கேற்றினோம். காந்தியின் கொள்கைகள் மீதான நம்பிக்கை நம் மக்களிடம் இன்னும் நிலைத்து இருக்கிறது என்பதை, இந்த முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பின் மூலம் உணர முடிந்தது. கின்னஸ் சாதனை ஒரு பக்கம் இருந்தாலும், இளம் தலைமுறையினர் அகிம்சையின் மேன்மையைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பாகவே இதைப் பார்க்கிறோம்'' என்றார் ராஜேஷ்.

உண்மைதான்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism