Published:Updated:

உற்சாகம் பொங்கிய ஒரு நால் விழா !

-சுட்டி ஸ்டார்ஸ் கேம்ப் ஆ.முத்துக்குமார், பா.கார்த்தி

உற்சாகம் பொங்கிய ஒரு நால் விழா !

-சுட்டி ஸ்டார்ஸ் கேம்ப் ஆ.முத்துக்குமார், பா.கார்த்தி

Published:Updated:

சுட்டி ஸ்டார் டீம்

##~##

'ஹாய் சுட்டி ஸ்டார்... உங்களுக்காக ஒரு நாள் பயிற்சி முகாமை சென்னையில் நடத்தப்போகிறோம். அவசியம் வரவும்’ என்று சுட்டி விகடனில் இருந்து கடிதம் வந்த நாளில் இருந்தே எங்களுக்கு வண்ணக் கனவுகள். நண்பர்களைச் சந்திக்கப்போகும் மகிழ்ச்சி. பயிற்சி முகாமில் என்ன சொல்லித் தரப்போகிறார்கள் என்ற சஸ்பென்ஸ் எனக் கலவையான மனதுடன் காத்திருந்து, அந்த நாளில் கிளம்பினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உங்களுக்கு முட்டை போடுறது சுலபமான விஷயம்தானே? ஒரு பேப்பரை எடுத்து, ஒரே மாதிரி 50 முட்டைகளைப் போடுங்க பார்க்கலாம்'' என்று ஜாலியாக ஆரம்பித்தார், ஹெலிக்ஸ் மனித வள மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனர், செந்தில்குமார்.

நம்புவீங்களா? நாங்கள் போட்ட முட்டைகளைவைத்தே ஒரு மணி நேரம் பாடம் நடத்திவிட்டார். இலக்கை நிர்ணயிப்பது, சவால்களைச் சந்திப்பது, பதற்றம் இல்லாமல் ஜெயிப்பது எனப் பல விஷயங்களை எங்களுக்கு சுவாரசியம் குறையாத வகையில் சுவையாகச் சொல்லித்தந்தார்.

''இதோடு முடியலை. இப்போ, நீங்க எல்லோரும் கொலாஜ் ஆர்ட் பண்ணப்போறீங்க. அதில் உங்கள் வருங்கால லட்சியத்தை ஓவியம் மூலமாக வெளிப்படுத்துங்க. அதோடு உங்கள் பெயரையும் எழுத்தில் எழுதாமல் ஓவியமாகவோ, படங்கள் மூலமாகவோ புரியவைக்க வேண்டும். முயற்சி பண்ணுங்க'' என்றார் செந்தில்குமார் அங்கிள்.

உற்சாகம் பொங்கிய ஒரு நால் விழா !

சவால் என்றால் சும்மா விடுவோமா? புகுந்து விளையாடினோம். ஒரு மணி நேரத்தில், நாங்கள் வரைந்த ஓவியங்கள் எல்லாம் நிகழ்ச்சி நடந்த ஹாலில் கண்காட்சியாக அலங்கரித்தன. ''இந்தப் படைப்புகளைப் பற்றி கடைசியில் சொல்றேன். இப்போ உங்களுக்காக உணவும் அதற்குப் பிறகு ஜாலியான

உற்சாகம் பொங்கிய ஒரு நால் விழா !

நிகழ்ச்சிகளும் காத்திருக்கு. எல்லாவற்றையும் என்ஜாய் பண்ணுங்க'' என்றார் செந்தில்குமார் அங்கிள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆரம்பித்தது, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த சேதுராமனின் 'மந்திரமா... தந்திரமா?’ மேஜிக் நிகழ்ச்சி. ''ஹாய் சுட்டி ஸ்டார்ஸ்... அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆளுக்கும் மேஜிக்குக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கிறீங்கதானே? இந்த நிகழ்ச்சியின் முடிவில் அதைத் தெரிஞ்சுக்குவீங்க'' என்று சொல்லிவிட்டு ஆரம்பித்தார்.

வெறும் கையில் விபூதியை வரவைத்தார். குளிர்பானத்தைக் காதுவழியே குடித்தார். கற்பூரத்தை தன் வாய்க்குள் எரியவிட்டு டெரர் கிளப்பினார். இதுபோல் இன்னும் பல வித்தைகளைச் செய்து வியக்கவைத்தார். முடிவில், இதை எல்லாம் எப்படிச் செய்ய முடிந்தது என்பதை அறிவியல்பூர்வமாக விளக்கினார். ''இதில் மந்திரம் எதுவும் இல்லை. எல்லாமே அறிவியல் சார்ந்த தந்திரங்களே. இது புரியாமல்தான் பலரும் சாமியார்களிடம் ஏமாறுகிறார்கள். நீங்கள் அப்படி இருக்காதீர்கள். எந்த விஷயத்தையும் ஏன்? எப்படி? என்ற கேள்வியுடன் அணுகுங்கள்'' என்று முடித்தார் சேதுராமன் அங்கிள்.

இந்த இன்டோர் சந்தோஷம் முடிந்ததும் அடுத்து ஆரம்பித்தது அவுட்டோர் ஆச்சரியம். தமிழ்நாடு அரசு நடத்தும் ஜவஹர் சிறுவர் மன்றத்தைச் சேர்ந்த சுட்டிகளின் அற்புதமான கிராமியக் கலை நிகழ்ச்சிகள் எங்களை வியப்பின் உச்சிக்கு அழைத்துச் சென்றன.

ரமணன் என்ற குட்டிப் பையன் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடி, அனைவரையும் கவர்ந்தான். எல்.கே.ஜி படிக்கும் ஏமஸ்ரீ, 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்ற பாடலுக்கு அழகான அபிநயத்துடன் பரத நாட்டியம் ஆடினாள். ரோஷன், பூஜா, ரஞ்சனி போன்ற குட்டிக் கலைஞர்களின் ஒயிலாட்டம், காவடி மற்றும் சிலம்பு ஆட்டங்கள் மனதைக் கொள்ளை அடித்தன. குறிப்பாக, 4-ம் வகுப்பு படிக்கும் ரமணன், பொய்க்கால் குதிரையில் தொடங்கி எல்லாவற்றிலும் பங்கேற்று ஆல்ரவுண்ட் ஹீரோவாக அசத்தினான்.

உற்சாகம் பொங்கிய ஒரு நால் விழா !

''அழிந்துவரும் கிராமியக் கலைகளை வளர்க்கும் நோக்கத்துடன் நம் தமிழக அரசு, இந்த ஜவஹர் சிறுவர் மன்றத்தைத் தமிழகம் முழுவதும் நடத்துகிறது. இதில் பயிற்சி பெரும் சுட்டிகள், பல்வேறு நிகச்சிகளில் பங்கேற்றுத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். இந்த மன்றங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான சுட்டிகள், 'பாலஸ்ரீ’ விருதுக்கான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுவார்கள். இது பெரியவர்களுக்கான பத்மஸ்ரீ போல் மதிப்பு வாய்ந்தது. நீங்களும் இதுபோன்ற கலைகளைக் கற்க வேண்டும். நமது பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும்'' என்று சொல்லி விடைபெற்றார்கள்.

அதற்குள் ஒரு நாள் முடியப் போகிறதா என நினைக்கும் வகையில் நிகழ்ச்சியின் இறுதிப் பகுதிக்கு வந்தோம். செந்தில்குமார் அங்கிள் மீண்டும் வந்தார். நாங்கள் வரைந்த ஓவியங்களைப் பார்த்தார்.

உற்சாகம் பொங்கிய ஒரு நால் விழா !

''எல்லோருமே அசத்தி இருக்கிறீர்கள். உங்கள் பெயர்களைப் படங்களாக வெளிப்படுத்தி இருக்கும் விதம் வெகு அருமை. தீப லஷ்மி என்ற பெயரை ஒரு தீபம் வரைந்து, பக்கத்தில் லட்சுமி படம். கௌசிக் என்ற பெயருக்கு, பசுவின் படத்துடன் சிக் ஷாம்பூ எனக் கலக்கி இருக்கிறீர்கள்.  போட்டிகள் நிறைந்த இந்த உலகில் ஜெயிக்க வேண்டும் என்றால், இதுபோன்ற வித்தியாசமான சிந்தனை அவசியம். நாம் சொல்ல நினைக்கும் விஷயத்தைப் புதிய பாணியில் சொல்லும்போது அது விரைவில் சென்றடையும். அனைவரும் நம்மைக் கவனிக்க ஆரம்பிப்பார்கள். வெற்றி எளிதில் வசமாகும்'' என்றார்.

உற்சாகம் பொங்கிய ஒரு நால் விழா !

மனம் நிறைந்த தன்னம்பிக்கையுடனும்  சுட்டி விகடன் அளித்த பரிசுகளுடனும் கிளம்பினோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism