Published:Updated:

பரீட்டை வந்தாச்சி... வாள் வீசுங்கள் வீரர்களே !

பரீட்டை வந்தாச்சி... வாள் வீசுங்கள் வீரர்களே !

பரீட்டை வந்தாச்சி... வாள் வீசுங்கள் வீரர்களே !

பரீட்டை வந்தாச்சி... வாள் வீசுங்கள் வீரர்களே !

Published:Updated:
##~##

'அதோ வருது... இதோ வருது... பக்கத்தில் வருது’ என்று சொல்லிக் கொண்டு இருந்த எக்ஸாம், நம்ம டேபிளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துடுச்சு. முன்னாடியே எதிர்பார்த்து பிளான் பண்ணின விஷயம்தான். ஆனாலும், இந்த நேரத்தில் என்ன செய்யலாம்?

நிலவு நாயகன் மயில்சாமி அண்ணாதுரை தரும் ராக்கெட் டிப்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஐந்தே ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்தினால் தேர்வுகளில் சாதிக்கலாம்.'' என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

மனம் மற்றும் உடல் இரண்டையும் தேர்வுக்குத் தயாராக்குங்கள்.

திரைப்படங்கள், தொலைக்காட்சி, ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு நோ சொல்லுங்கள்.

தொடர்ந்து படிப்பதும் சலிப்பை உண்டுபண்ணும். அதனால், சின்னச் சின்ன இடைவெளிகளில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

பரீட்டை வந்தாச்சி... வாள் வீசுங்கள் வீரர்களே !

எந்தவிதத் தடுமாற்றமோ, பயமோ இல்லாமல், மிகவும் இயல்பாகத் தேர்வுகளைச் சந்தியுங்கள்.

ஒரு தேர்வு முடிந்ததும் அதைப் பற்றிய கவலைகளை அப்படியே விட்டுவிட்டு, அடுத்தத் தேர்வுக்குத் தயாராகுங்கள். முடிந்தவை மாறப்போவது இல்லை. நாளைய பொழுதை நமதாக்கலாம். வாழ்த்துகள்.

மனநல மருத்துவர் திருநாவுக்கரசு கொடுக்கும் தைரிய டிப்ஸ்!

''தவறான புரிதலே பல சமயங்களில் தேர்வு பற்றிய பயத்தை உண்டு பண்ணுகிறது'' என்கிறார் மனநல மருத்துவர் திருநாவுக்கரசு.

பரீட்டை வந்தாச்சி... வாள் வீசுங்கள் வீரர்களே !

''பயத்தைத் தூக்கிப்போடுங்கள். படிப்பு என்பது பாஸ் செய்வதற்கோ, சம்பாதிப்பதற்கோ அல்ல; அது அறிவைச் சேகரித்துக்கொள்ள அற்புதமான ஒரு கருவி. ஏற்கெனவே பல பேரின் கடும் உழைப்பில் உருவான விஷயங்களை நாம் புத்தகங்களில் படிக்கப்போகிறோம் அவ்வளவுதான். இதை உள்வாங்கிக்கொள்ள உங்களிடம் ஆர்வம் மற்றும் தேடல் இருந்தால்போதும். அறிவுக்கான தேடல் நிச்சயமாகப் பாரமானது இல்லை. பிறருக்காகப் படிக்காதீர்கள். உங்களை மேலும் மேலும் அறிவாளி ஆக்கிக்கொள்ளப் படியுங்கள். முழுமையாக, தெளிவாக ஆர்வத்தோடு படிக்கும்போது, தேர்வுகள் பெரிய சிக்கல் இல்லை.

உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதை ,தேர்வு நடத்தும் கல்வித் துறைக்கு ஜாலியாக சொல்லப்போகிறீர்கள். வாழ்க்கை அற்புதமானது. அது தண்டனைக்குரியது இல்லை. அனுபவித்துப் படியுங்கள். உங்கள் ஆற்றலை, தன்னம்பிக்கையை லென்ஸில் வெளிச்சத்தை ஒரே புள்ளியில் குவிப்பதைப் போல குவியுங்கள். கவலைகளைத் தூர எறியுங்கள். உங்களைவிடச் சிறந்த சாதனையாளர் யாரும் இல்லை என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள். விடாது ஆர்வத்தோடு உழையுங்கள். கட்டாயம் ஜெயிப்பீர்கள்'' என்கிறார்.

டயட்டீஷியன்  கிருஷ்ணமூர்த்தி தரும் சுவையான டிப்ஸ்!

பரீட்டை வந்தாச்சி... வாள் வீசுங்கள் வீரர்களே !

''நீங்கள் சாதிக்க நினைக்கும் விஷயங்களுக்குத் தேவையான ஆற்றலைத் தருவது உணவு. அதற்கு என்ன செய்யலாம்?

''தேர்வு சமயத்தில் எதைச் சாப்பிடுகிறோம்... எப்படிச் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். எளிதில் ஜீரணமாகும் இட்லி, இடியாப்பம், தோசை, பழங்கள், காய்கறிகள், பால் ஆகியவற்றைச் சாப்பிடுங்கள். அதிக மசாலா, காரம், எண்ணெய் நிறைந்த உணவுப் பொருள்களுக்குத் தடா சொல்லுங்கள்'' என்கிறார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி.

''அதிகாலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடியுங்கள். எந்தக் காரணத்தைக்கொண்டும் இதைத் தவிர்க்காதீர்கள். மலச்சிக்கல் உண்டானால், இரண்டு கிளாஸ் தண்ணீரைக் குடித்துவிட்டு நன்றாக நடந்தால், சரியாகிவிடும். பெரும்பாலும் அருகில் கிடைக்கும் ஏதேனும் ஒரு பழத்தைக் காலையில் எடுத்துக்கொள்ளுங்கள். முடிந்த வரை பிரெட்டைத் தவிர்க்கப் பாருங்கள். அது மைதா மாவினால் செய்யப்படுவதால், சீக்கிரம் செரிமானம் ஆகாது. முழு முட்டையைத் தாராளமாகச் சாப்பிடலாம். காலையில் இட்லி சாப்பிட முடியவில்லை என்கிற பிள்ளைகள், தேர்வு மையத்தில் சோர்வடைய

பரீட்டை வந்தாச்சி... வாள் வீசுங்கள் வீரர்களே !

வாய்ப்பு அதிகம். ஆகவே, வாழைப் பழம், சப்போட்டா, ஆப்பிள் மற்றும் சத்து பானங்களை பருகலாம். சோர்வாக உணரும்போது, இளநீர், எலுமிச்சை அல்லது சாத்துக்குடி ஜூஸ் (உப்பு, சர்க்கரை சேர்த்தது) பருகுங்கள். முக்கியமான விஷயம்... தேர்வு சமயம் எனத் தூங்கும் விஷயத்தில் அசட்டை வேண்டாம். நிச்சயமாக இரவில் ஐந்து மணி நேரம் உறங்க வேண்டும்.'' என்கிறார்.

முனைவர் பர்வீன் சுல்தானா அளிக்கும் தெம்பான டிப்ஸ்!

''தேர்வு என்பது அழகான விஷயம். அதற்கு அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை கண்மணிகளே'' என்கிறார் தமிழ்ப் பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர் பர்வீன் சுல்தானா.

''சிறந்தவாள்வீரன்எப்போதும் சிரித்துக்கொண்டேதான் வாள் வீசுவான். அப்படி நீங்களும் சிரித்த முகத்தோடு இருங்கள். தெரியாத விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் சக்தியைத் திட்டமிட்டு செலவிடுங்கள். வேலையை அதிகப் படுத்திக்கொள்ளாதீர்கள். வேகமாக ஓடுகிற குதிரை எது தெரியுமா? குறைவான சுமையைச் சுமக்கிற குதிரைதான். ஒரு சமயத்தில் எண்ணற்ற கவலைகளை மண்டைக்குள் ஏற்றிக்கொள்ளவேண்டாம். மனக்கட்டுப்பாட்டையும் நேரக்கட்டுப் பாட்டையும் கட்டாயம் கடைபிடியுங்கள்..

ஆங்கிலத்தில் சொல்வதைப் போல ‘You Seize Your Day !’   உங்களின் நேரத்தைப் பிறர் கொள்ளை அடிக்கவிடாதீர்கள். இந்த வயதில் உங்களுக்கு இருக்கும் எனர்ஜி யாருக்கும் இல்லாதது. நீங்கள் முயற்சிசெய்து தோற்றால் ஒழிய, இந்த வினாத்தாள்களில் நீங்கள் தோற்க முடியாது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பிறந்தநாள் ஆகிய தினங்களில் ஆடை அணிந்து மகிழ்ச்சியோடு புத்துணர்வு பொங்க இருப்பதைப் போல தேர்வுகளையும் கொண்டாடுங்கள்'' என்கிறார்.

அப்புறம் என்ன? பக்கத்தில் அமர்ந்து இருக்கும் தேர்வைப் பார்த்து உற்சாகமாக ஒரு ஹாய் சொல்லுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்.

சாதிக்கப் பிறந்தவர் கள் ஆயிற்றே நீங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism