Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

Published:Updated:
பென் டிரைவ் !
பென் டிரைவ் !
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகிலேயே மிக நீளமான யோகா சங்கிலியை உருவாக்கிக் கின்னஸ் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள் கடலூர் சுட்டிகள். சிகே ஸ்கூல் ஆஃப் நாலெட்ஜ் பள்ளியின் 10 முதல் 14 வயது வரையிலான 696 சுட்டிகள், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்கள். ஒன்றரை மாதமாக இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு சாதித்து இருக்கிறார்கள். அர்த்தபத்மாசனம், பாலாசனம், சுகாசனம், கோமுகாசனம், மக்ராசனம் போன்ற ஆசனங்களை யோகா மாஸ்டர் பாலமுருகன் ஒவ்வொன்றாகச் செய்ய, அதை முதல் சுட்டியில் இருந்து கடைசிச் சுட்டி வரைத் தொடர்ந்து வரிசையாக ஒரு சங்கிலித் தொடர் போலச் செய்தது பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தது.

பென் டிரைவ் !

 சமீபத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தந்தை பெரியார் ஹாலில் அந்த நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கான சிறப்புக் குழந்தைகள்தான் விருந்தினர்கள். பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கதைப் போட்டி, வினாடி-வினா, மாறுவேடம் என அனைத்துவிதமான போட்டிகளிலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தன் பெற்றோர், பாதுகாவலர்கள் உடன் வந்த சிறப்புச் சுட்டிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சிறப்புக் குழந்தைகளை ஒரு நாள் முழுவதும் மகிழ்விப்பதற்காக, சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.

பென் டிரைவ் !

 எந்தப் பொருளையும் அப்படியே காப்பி அடித்துத் தயாரிப்பதில் சீனர்கள் கெட்டிக்காரர்கள். பொருட்களில் மட்டும் அல்ல, இப்போது கட்டடங்கள் கட்டுவதிலும் காப்பி அடிக்கிறார்கள். அதற்கு உதாரணம், சீனாவில் உள்ள செங்டூ என்ற இடத்தில் நகர் முழுக்க ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன் ஆகிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற கட்டடங்களைக் காப்பி அடித்துக் கட்டி உள்ளனர். அவற்றில் ஒன்றுதான், இந்த ஈஃபிள் டவர். உண்மையான ஈஃபிள் டவரின் உயரம் 320 மீட்டர்.  சீனாவில் உள்ள டவரின் உயரம் 108 மீட்டர்.  

பென் டிரைவ் !

விமானம், ஹெலிகாப்டர்கள்தான் ரிமோட் கன்ட்ரோல் மூலம் வானில் பறக்குமா? சுட்டிகளின் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட சூப்பர்மேனும் இப்போது ரிமோட் மூலம் பறக்கிறார்.

கலிஃபோர்னியா கடற்கரையில், இந்த சூப்பர்மேன் பொம்மை ரிமோட் கன்ட்ரோல் மூலம் பறக்கவிடப்பட்டது. அதைப் பார்த்து 'நிஜமாகவே சூப்பர்மேன் வந்துவிட்டாரோ?’ என்று சாலையில் செல்லும் வாகனங்கள் அப்படியே நின்றுவிட்டன.தங்களின் கேமராக்கள் மூலம் சூப்பர்மேனைப் படம் பிடிக்க போட்டிபோட்டனர். இதனால் கடற்கரைச் சாலை டிராஃபிக்ஜாம் ஆகிவிட்டது.

பென் டிரைவ் !

 மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பு, 'சில்ரன்’ஸ் ஃபிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியா.’ சுட்டிகளிடம் தரமான சினிமாவைக் கொண்டுசெல்வதை நோக்கமாகக்கொண்டு இருக்கும் இந்த அமைப்புக்குப் புதிதாக தலைமை ஏற்று இருக்கிறார், அமோல் குப்தே. இவர், அமீர் கானின் 'தாரே ஜமீன் பர்’ படத்தின் திரைக்கதை ஆசிரியர். இந்தியாவில் குழந்தைகளுக்காக நல்ல சினிமா படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை உள்ளவர். இவர், தனக்குக் கிடைத்துள்ள பொறுப்பின் மூலம் புதிய முயற்சிகளில் ஈடுபடத் திட்டமிட்டு உள்ளார். அதன்படி, இந்தியா மட்டும் இன்றி, உலக அளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற குழந்தைகளுக்கான சிறந்த படங்களை நேரடியாகவே பள்ளிகள் மூலம் மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். ஆல் தி பெஸ்ட் அங்கிள்!

பென் டிரைவ் !

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் தேசிய அளவிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கு நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்ட 8-ம் வகுப்புப் படிக்கும் திருச்சி மாணவன் நித்தியானந்தா 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றார்.

இதுவரை மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகளில் 73 தங்கம், 45 வெள்ளி, 32 வெண்கலம் பெற்று இருக்கும் நித்தியானந்த், தொடர்ந்து ஐந்து முறை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism