Published:Updated:

சுட்டி நியூஸ் !

சுட்டி நியூஸ் !

சுட்டி நியூஸ் !

சுட்டி நியூஸ் !

Published:Updated:
சுட்டி நியூஸ் !

வா... வாவ்... வாழைப் பழமே!

சுட்டி நியூஸ் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

கான்பூரில் உள்ள சந்திரசேகர் ஆசாத் வேளாண் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்,  வாழையில் புது ரகம் ஒன்றை உருவாக்கி உள்ளது. பொதுவாகப் பழங்களில் ஸ்டார்ச் அதிகம். சாப்பிட்ட உடன் ஸ்டார்ச்  குளுகோஸாக மாறி, ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும். சாதாரணமாக 100 கிராம் வாழைப் பழத்தில் 650 கலோரி உண்டு. ஆனால், இந்த வாழைப் பழத்தில் 400-க்கும் குறைவாகவே இருக்கும். மேலும், இந்தப் பழத்தில் வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ்,  இரும்பு, கால்சியம் சத்துகளும் அதிகம் இருக்குமாம்.  

 கூ...கூ... ரயிலே!

டெல்லியின் புகழ்பெற்ற விஷயங்களில் ஒன்று, ரயில் மியூஸியம். 1975-ல் தொடங்கப்பட்ட இது, ஆசியாவின் முக்கியமான ரயில் மியூஸியம் ஆகும். இங்கே வலம்வந்தால், ரயில்களின் வரலாறு மற்றும் தொழில்நுட்பம்குறித்து பல விஷயங்களை அறிந்துகொள்ளலாம்.

சுட்டி நியூஸ் !

உலகின் மிகப் பழமையான மற்றும் இயங்கும் நிலையில் உள்ள நீராவி இன்ஜின் ஃபேரி க்வீன்(Fairy Queen) இது இந்திய ரயில்வேக்கு சொந்தமானது.  

சூப்பர் பாட்டி!

சுட்டி நியூஸ் !

அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அருகில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் வசித்தவர், மேரி மெக்கோனல் (88). இவர் சமீபத்தில் இறந்துவிட்டார். இவர் இறந்து சில நாட்களில் நியூயார்க்கில் உள்ள ஒரு நூலகத்துக்கும் ஒரு பூங்காவுக்கும் தபால் மூலம் காசோலைகள் வந்தன. அதனைத் திறந்து பார்த்தவர்கள் வியந்தனர். அந்தப் பாட்டியின் சொத்தான 100 கோடி ரூபாயையும்  அந்த இரு இடங்களுக்கும் எழுதப்பட்டு இருந்து. பாட்டி அந்தப் பூங்காவுக்கும் நூலகத்துக்கும் வழக்கமாகச் செல்வாராம். அவர் இவ்வளவு பெரிய செல்வந்தர் என்று யாருக்கும் தெரியாதாம். அந்த அளவுக்கு எளிமையாகவே வாழ்ந்து இருக்கிறார் சூப்பர் பாட்டி!

உஷார் செல்போன்!

சுட்டி நியூஸ் !

இன்று உலகமே செல்போனுக்குள்ளேயே அடங்கிவிட்டது. இதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அபாயம்குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கின்றன. 'குழந்தைகளின் மூளையை அதிகம் பாதிப்பது செல்போன்’ என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த எட்வர்ட் ரிக்கார்ட் (Edward Reccord).'குழந்தைகள் தலைக்கு அருகில் செல்போனை வைப்பதால், வளரும் சின்னச் சின்ன நரம்புகள் பெரிதும் பாதிக்கின்றன. மேலும் செல்போனில் அதிக நேரம் கேம்ஸ் விளையாடுவதால், ஞாபக மறதி உண்டாகிறது.’ என்று தனது ஆய்வில் சொல்லி இருக்கிறார். ஆகவே, நண்பர்களே... செல்போன் உபயோகிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

ஏஜூநசெ !

எந்தெந்த மாதங்களில் 30 நாட்கள் என்பதைச் சொல்ல, கையைக் குவித்து விரல்களின் வரிசையில் மேடான பகுதிகள் 31 என்றும், பள்ளமான பகுதிகள் 30 என்றும் கணக்கிடுகிறோம். இதைவிட, சுலபமாகக் கண்டுபிடிக்க டிப்ஸ் கொடுத்தார் எங்களது ஆசிரியர்.

சுட்டி நியூஸ் !

'ஏஜூநசெ’ என்ற வார்த்தையை ஞாபகம் வைத்துக்கொண்டால் போதும். அதாவது, ஏ-ஏப்ரல், ஜூ-ஜூன், ந-நவம்பர், செ-செப்டம்பர் இந்த நான்கு மாதங்களுக்கும் 30 தேதிகள் மட்டுமே இருக்கும்.

போஸ்பொரஸ் பாலம்!

சுட்டி நியூஸ் !

உலகிலேயே மிக நீளமான இரும்புத் தொங்குபாலம் போஸ்பொரஸ் (Bosphorus Bridge). இந்தப் பாலத்தைத் தாங்கி நிற்கும் இரும்புக் கயிறின் நீளம் 1,560 மீட்டர், அகலம் 39 மீட்டர். கடல் மட்டத்தில் இருந்து 64 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த போஸ்பொரஸ் தொங்குபாலம். இந்தப் பாலம் முழுமையாகக்  கட்டி முடிக்கபட்ட ஆண்டு 1973. இரவில் மின்விளக்கில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism