Published:Updated:

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

சுட்டிகளுக்கு எக்ஸாம் டிப்ஸ் !

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

சுட்டிகளுக்கு எக்ஸாம் டிப்ஸ் !

Published:Updated:

தமிழ்

##~##

தமிழ்ப் பாடத்தில் பொருள் எழுதுதல், பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல், கோடிட்ட இடம் நிரப்புதல், உரிய விடை தேர்ந்தெடுத்து எழுதுதல் மற்றும் பொருத்துக ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக விடை எழுதாமல், வினாவுடன் சேர்த்து விடை அளியுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறுவினா, சிறுவினா மற்றும் நெடுவினாக்களுக்கான விடைகளுக்குக் காவி (பிரவுன்) நிறத்தில் மையத் தலைப்பு இடுங்கள். முக்கியமான சொற்களைக் கறுப்பு மையினால் எழுதுங்கள். இதனால் விடைக் குறிப்புகள் தெளிவாகத் தெரியும்.

மனப்பாடப் பகுதி எழுதும்போது, ஆசிரியரின் பெயர், அந்தச் செய்யுள் பகுதியின் பெயர் முதலானவற்றைக் குறிப்பிடுவது நல்லது.

கட்டுரை எழுதும்போது, குறிப்புச் சட்டகம் மற்றும் உட்தலைப்பு ஆகியவற்றை இடுங்கள். முக்கியமான வார்த்தைகளைக் கறுப்பு மையில் எழுதுங்கள். இடையிடையே பழமொழி, மேற்கோள், சின்னஞ்சிறு கவிதை எழுதுவது விடைத்தாள் திருத்துபவரைக் கவரும். குறிப்புச் சட்டகம், முன்னுரை, பொருளுரை, கருத்துரை, முடிவுரை என்ற வகையில் கட்டுரை எழுதினால், சிறப்பாக இருக்கும்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

கடிதம் எழுதும்போது அனுப்புநர், பெறுநர், நாள், பொருள், விளி மற்றும் இப்படிக்கு ஆகிய வார்த்தைகளைக் கறுப்பு மையில் எழுதுங்கள்.

தவறான எழுத்தை, வார்த்தையை மையால் அழிக்காமல், அவற்றின் மீது பென்சிலால் சிறுகோடு

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

இடுங்கள். அதன் அருகில் சரியான வார்த்தையை எழுதுங்கள். அப்போதுதான் விடைத்தாள் அழகாகத் தெரியும்.

அனைத்து விடைகளையும் 15 நிமிடங்களுக்கு முன்பாகவே முடித்துவிடுங்கள். பிறகு, ஒவ்வொரு பக்கத்தையும் பார்வையிடுங்கள். வினா எண், கருத்து, எழுத்துப் பிழை மற்றும் வாக்கியப் பிழைகள் இருந்தால் சரிசெய்யலாம்.

முக்கியமான விஷயம், வினாத்தாளை வாங்கியதுமே வாசிக்காமல், கண்களை மூடி ''இந்த வினாக்களுக்கான விடைகள் எனக்கு நன்றாகத் தெரியும்; தேர்வை நன்றாக எழுதுவேன்'' என்று மனதுக்குள் சொல்லுங்கள். இது உங்களுக்கு மனதைரியம் தரும். வெற்றி நிச்சயம்!

- ரா.தாமோதரன், ஆசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
மெலட்டூர் - தஞ்சாவூர்.

இரண்டு பருவத் தேர்வுகள் முடிந்து, மூன்றாம் பருவத் தேர்வை எழுதப்போகும் எட்டாம் வகுப்பு வரையிலான சுட்டிகளுக்காகவே இந்த இணைப்பு.

தேர்வுக்குத் தயாராவதில் தொடங்கி விடைத்தாளை நூலால் கட்டுவது வரை... S.A.,(தொகுத்தறி மதிப்பீடு) எழுத்துத் தேர்வுக்கு உரிய A to Z டிப்ஸ் அனைத்தையும் படித்துப் பின்பற்றிப் பரீட்சையில் அசத்துங்கள். கிரேடுகளை அள்ளுங்கள்...

ஆங்கிலம்

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

ஒவ்வொரு பாட இறுதியிலும் உள்ள பயிற்சிகளை நன்கு ஆழ்ந்து வாசியுங்கள். பின்னர், அவற்றை ஓய்வாக அமர்ந்து நினைவுபடுத்திப்பாருங்கள்.

சக மாணவர்களோடு கேள்வி கேட்டு, 'பதில் கூறுங்கள் பார்ப்போம்’ விளையாட்டை விளையாடுங்கள். இந்தப் பயிற்சி நல்ல பலனைத் தரும்.

ஒவ்வொரு பாடத்துக்கும் இடையே உள்ள வண்ணம் இடப்பட்ட வார்த்தைகளை எழுதிப் பார்த்துப் பழகுங்கள்.

பாடங்களுக்கு இடையே உள்ள வினாக்களுக்கான விடையை, நீங்களே தேடிக் குறிப்பதன் மூலம், தேர்வின்போது எளிமையாக நினைவு கொள்ளலாம்.

மனப்பாடப் பகுதியை ராகமாகப் பாடுவதன் மூலம் வரிகளையும் ஸ்பெல்ங்கையும் மறக்காமல் எழுதலாம். அதேபோல், மனப்பாடப் பாடலை எழுதும்போது, அதன் ஆசிரியர் பெயரையும் குறிப்பிட வேண்டும்.

அனைத்தையும் படித்து முடித்த பிறகு, நீங்களாகவே சுயதேர்வு ஒன்றை எழுதி, நீங்களே பிழைகளைத் திருத்திப் பழகினால், இறுதித் தேர்வை பிழைகள் இன்றி எழுதலாம்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

நெடுவினாக்களை மனவரைபடமாக மனதில் நிறுத்திக்கொள்ளலாம். இதன் மூலம், தேர்வில் நல்ல பாயின்ட்டுகளைத் தவறவிடாமல் முழுமையாக எழுத முடியும்.

ஆங்கிலம் மொழிப் பாடம் என்பதால், கையெழுத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இயன்ற வரையில் சொற்களுக்கு இடையே போதிய இடம்விட்டு எழுதினால் அழகாக இருக்கும்.

சில வினாக்களுக்கான பதில் தெரிந்து இருந்தாலும், அதைப் புத்தகத்தில் உள்ள வாக்கியங் களைப் போல் எழுத முடியாமல் போகலாம். அத்தகைய சூழல், உங்களது சொந்த நடையிலேயே எழுதுங்கள். நிச்சயமாக அந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

-ஸ்ரீ.திலீப், ஆசிரியர்,

அரசு மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம் மாவட்டம்.

கணக்கு

கணக்கில் வரும் முக்கியமான சூத்திரங்களை ஒரு 'ஏ4’ தாளில் அழகாகவும் தெளிவாகவும் எழுதி, கண்ணில் அடிக்கடி படக்கூடிய இடங்களான படிக்கும் அறை, பீரோ கதவு மற்றும் சுவர்களில் ஒட்டுங்கள். தினமும் அந்தச் சூத்திரங்களைப் பார்ப்பதால், உங்கள் மனதில் அவை ஆழமாகப் பதிந்துவிடும்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

எப்பொழுதும் ஒரு 'சிலேட்டுப் பலகை’யைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கடினமான கணக்குகளை அதில் செய்து பார்க்கலாம்.

பொதுவாகக் காலை நேரத்தைப் புது கணக்குகள் செய்து பார்க்கவும், மாலை நேரத்தை, காலையில் செய்த கணக்குகளைத் திருப்பிப் பார்க்கவும் ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

தேர்வு அறையில் கேள்வித்தாள் பெற்றவுடன், அதை 5 முதல் 10 நிமிடங்கள் வரை வாசித்த பின்னரே தேர்வு எழுத வேண்டும். மிகத் தெளிவாக விடை தெரியும் கணக்குகளை முதலாவதாகவும்  ஐயங்கள் உடைய கணக்குகளை இறுதியிலும் செய்யுங்கள். இது உங்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

கேள்வித்தாளில் உள்ள கேள்விகளுள் சில கேள்விகளை நீங்கள் 'சாய்ஸ்’-ல் விட்டுவிட்டு, அடுத்ததற்குச் செல்ல நேரிடலாம். அப்போது, கேள்வித்தாளில் உள்ள வினா எண்ணையே எழுதவும். நீங்களாக புதிய வரிசை எண்களை அளிக்கக் கூடாது.

ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்கள் எனக் கேள்வித்தாளில் அமைந்து இருக்கும் வரிசை முறைப்படியே விடைகளை எழுதுங்கள். ஒவ்வொரு பகுதி முடிந்த பின்னரும்

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துவிட்டோமா எனச் சரிபார்த்துவிட்டு, அடுத்த பகுதிக்குச் செல்லுங்கள்.

இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு விடை எழுதும்போது 'தீர்வு’ (Solution) எனத் தலைப்பிட்டுத் தொடங்கவும். சூத்திரங்கள் பயன்படுத்திச் செய்யும் கணக்குகள் எனில், அந்தச் சூத்திரங் களைக் கறுப்பு மையால் எழுதித் தனியாகக் 'கட்டம்’ வரைந்து காண்பிக்கவும். அதேபோல், இறுதி விடையையும் வேறு வண்ண 'மை’யால் (சிவப்பு, பச்சையைத் தவிர்க்கவும்) கட்டமிட்டுக் காண்பிப்பதும் நல்லது.

ஒவ்வொரு பகுதி முடிந்த பின்னரும் மறவாமல் அடிக்கோடிட்டுக் காட்டுங்கள். கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரை இது மிகவும் அவசியம்.

கணக்குப் பாடத்தில் தெளிவும் அழகும் மிக முக்கியம். எனவே, கணக்கின் ஒவ்வொரு படியும் தெளிவாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால், முழு மதிப்பெண்களும் உங்களுக்கே.

 - ஜெ.திருமுருகன்,
கணித ஆசிரியர், ஊ.ஒ.ந.நி. பள்ளி, மூலத்துறை,
கோவை மாவட்டம்.

அறிவியல்

'ஓரிரு வார்த்தைகளில் விடையளி’ பகுதியில் முழுக் கவனம் செலுத்தி நன்கு பயிற்சி எடுங்கள். கடைசி மூன்று நாட்களில் இதற்காக சிரத்தையுடன் படிப்பது நல்ல பலனைத் தரும்.

சிறு வினாக்களுக்கு தினமும் ஐந்து பதில்களை எடுத்துக்கொண்டு படிக்கலாம். ஆசிரியர் ரிவிஷன் செய்யும்போது பல முக்கிய வினாக்களைக் குறித்துக் கொடுத்து இருப்பார். அவற்றைப் படித்தால் மதிப்பெண்களை அள்ளலாம்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

ஆசிரியர், பாடவாரியாக ரிவிஷன் செய்யும்போது, பெரிய வினாக்களில் முக்கியமானவற்றைக் குறிப்பிட்டு இருப்பார். அவற்றில் ஒவ்வொரு வினாவுக்கும் குறிப்புகளைக்கொண்டு படித்தால்  சிறப்பாக எழுத முடியும்.

படம் வரைந்து பாகங்களைக் குறித்து விளக்கும் பகுதிகளில் மதிப்பெண்களை அள்ளுவதற்கு, அவற்றை மீண்டும் மீண்டும் வரைந்து பார்ப்பதே சிறந்த வழி. ஏதாவது ஒரு கேள்விக்கான விடை நினைவுக்கு வரவில்லை எனில், அதற்கு உரிய படத்தை வரைந்து பாகங்களைக் குறிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும்.

அறிவியல் பாடங்களில் வரும் பரிசோதனைகளை ஆசிரியர் உதவியுடன் செய்து பாருங்கள். நீங்களே செய்து கற்றுக்கொள்கிற ஒரு விஷயம், படித்தும் கேட்டும் கற்றுக்கொள்வதைவிட ஆழமாக மனதில் பதியும். பரிசோதனைக்கு உரிய படங்களைத் தெளிவாக வரைந்து பழகுங்கள். இப்படிச் செய்தாலே அதன் செய்முறையைத்  தேர்வில் எழுதிவிட முடியும்.

அறிவியல் பாடத்தைப் பொறுத்தவரை, படம் வரைந்து பாகங்களைக் குறிக்கும் வினாக்களுக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. அதேவேளையில், படம் வரைவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாத வினாக்களைத் தேர்வு செய்யவேண்டும்.

நீங்கள் படம் வரையும்போது, ஒவ்வொரு பகுதியையும் அதற்கு ஏற்ற வகையில் தனித்தனி

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

வண்ணங்களில் வரைந்து ஆசிரியரின் கவனத்தை ஈர்க்கலாம். சில படங்களுக்குப் பென்சிலை மட்டுமே பயன்படுத்துவது திருத்துபவரைக் கவர்ந்து இழுக்கும்.

அறிவியல் வேறுபாடுகள் பற்றிய வினாக்களைக் கேட்கும்போது, கச்சிதமான கட்டங்கள் இட்டு எழுதுங்கள். உங்களுடைய சொந்த அனுபவத்தில் கற்றதையும் எழுதலாம். உங்கள் புரிதலை அறிந்து ஆசிரியர் நல்ல மதிப்பெண் இடுவார்.

சில கேள்விகளுக்குப் படம் வரையவேண்டும் எனக் கேட்காவிட்டாலும், அந்த விடைகளுக்கு உரிய எளிமையான படங்களை வரைந்து விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

இயற்கை வளங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் எழுதும்போது, பாடத்தில் படித்தவற்றை மட்டும் எழுதாமல், உங்களுக்குத் தெரிந்த விழிப்பு உணர்வு வாசகங்களையும் எழுவது சிறப்பு.

- எஸ்.ஜெயமாலா, ஆசிரியை,
சிவில் ஏவியேஷன் நடுநிலைப் பள்ளி,
மீனம்பாக்கம், சென்னை.

சமூக அறிவியல்

ஒவ்வொரு பாட இறுதியிலும் பயிற்சிப் பகுதி இருக்கும். அதில் உள்ளவற்றை நன்கு புரிந்துகொண்டு படியுங்கள். முக்கியமான கேள்வி களைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

பாடத்துக்கு இடையே உள்ள தலைப்பு, உட்தலைப்பு போன்றவற்றை வினாக்களாக மாற்றி, அவற்றுக்கான விடைகளை எழுதிப் பாருங்கள்.

இந்தப் பருவத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து ஆண்டுகள் மற்றும் அதற்கு உரிய நிகழ்வுகளை வரிசையாக நோட்டில் எழுதுங்கள்.

ஆண்டுகளையும் நிகழ்வுகளையும் வரிசையாகச் சார்ட்டில் வரைந்து, நீங்கள் தினமும் அமர்ந்து படிக்கும் இடத்தில் ஒட்டுங்கள். அதைப் பார்க்கும்போது ஆண்டுகள் எளிதில் மனதில் பதியும்.

சமூக அறிவியல் தொடர்ச்சியாக உள்ள தகவல்களை எளிதில் நினைவில்கொள்ள,  அவற்றைச் சுருக்கி ஒரு வார்த்தையாக மாற்றிப் படிக்கலாம்.

உதாரணமாக, BROWN, PSC, GUJKHTAM, CDLAP இந்தச் சொற்களில் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களின் பெயர்களும் உள்ளன.

உலகம், இந்தியா, தமிழ்நாடு ஆகிய மேப்களை பெரிய சார்ட்டுகள் வாங்கி, நீங்கள் படிக்கும் அறையில் ஒட்டுங்கள். அந்த வரைபடத்தில் தினம் ஒரு இடத்தைக் குறித்து வர, எந்த இடத்தில் எந்தப் பெயரை

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

எழுதுவது என்பது எளிதில் புரிந்துவிடும்.

ஒரு மதிப்பெண் கேள்வி - பதில்களில் துல்யமாக இருப்பதற்கு, நண்பர்களுடன் இணைந்து வினாடி - வினாப் போட்டி நடத்தலாம்.

சிறுவினாக்களுக்குக் கேட்கப்பட்டு இருக்கும் அளவில் மட்டும் எழுதுங்கள். நமக்கு நன்றாகத் தெரியும் என்பதற்காக அதிகம் எழுதினால், நேரம்தான் வீணாகும்.

அனைத்து வினாக்களுக்கான விடைகளையும் புரிந்து படித்தால், நம் சொந்த நடையில் எளிதில் எழுதலாம். சமூக அறிவியலைப் பொறுத்தவரையில், சொந்த நடையில் எழுதினால், மதிப்பெண்களைக் குவிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

- ஸ்ரீ.திலீப், ஆசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
சத்தியமங்கலம், விழுப்புரம் மாவட்டம்.

நேரத்தை நிர்வகிப்போம் !

பரீட்சைக்கு ரிவிஷன் செய்வது, எழுதிப் பார்ப்பது மற்றும் தேர்வுக்கு முந்தைய தினம் படிப்பது ஆகியவற்றுக்கு டைம்டேபிள் போட்டு, அதனைச் சரியாகப் பின்பற்றுவது புத்திசாத்தனம்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

எளிதான பாடங்களுக்குக் குறைவான நேரத்தை ஒதுக்குங்கள். கடினமான அல்லது முந்தையத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் கிடைத்த பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.

நண்பர்கள் குழுவாகச் சேர்ந்து மாதிரித் தேர்வை, அதற்கான காலக்கெடுவுக்குள் எழுதிப் பழகலாம். இந்த முயற்சியைக் கடைப்பிடித்தால், பலன் நிச்சயம்.

ஒரு மதிப்பெண் வினா, சிறுவினா, விரிவான வினா ஆகியவற்றுக்கு விடை அளிப்பதிலும்கூடத் தனித்தனியாக ஒரு சில நிமிடங்களை ஒதுக்கித் திட்டமிட்டுப் பழக வேண்டும்.

தேர்வு அறையில் வினாத்தாளை வாங்கி நிதானமாகப் பாருங்கள். ஒவ்வொரு பகுதிக்கும் முன்பே வரையறுத்த நேரத்திற்குள் எழுதிவிட முயற்சி செய்யுங்கள். உதாரணத்துக்கு, ஏதாவது ஒரு கணக்கு விடை சரியாக வராமல் நேரத்தை விழுங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது சுதாரித்துக்கொண்டு, அந்தக் கேள்விக்கான இடத்தை ஒதுக்கிவிட்டு, அடுத்த கேள்விக்குப் பதில் அளிக்கச் சென்றுவிடலாம். கடைசியில், அந்த வினாவுக்கு விடை அளிக்க முயற்சி செய்யலாம்.

ஒரு சிலர் எளிதான கேள்விகளுக்கு, நேரம் போவதே தெரியாமல் உற்சாகமாக எழுதுவார்கள். இது தவறு. மதிப்பெண்களின் அடிப்படையில் நேரத்தை ஒதுக்கி அளவோடு எழுத வேண்டும்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

இதேபோல, சிலருக்குப் படம் வரைவதில் நேரம் இழுக்கும். அவர்கள் முன் யோசனையோடு, படம் இல்லாத கேள்விகளைத் தேர்ந்து எடுக்கவும்.

சரியான நேரத்தில் தேர்வு எழுதுவதுடன், எழுதியதைத் திருப்பிப் பார்க்கவும், தேவையான நேரத்தை ஒதுக்கவேண்டும்.

தேர்வு எழுதி முடித்த பின், எழுதியவற்றை மீண்டும் படித்துப் பார்ப்பதால் எழுத்துப் பிழை, சிறு சிறு தவறுகளைத் திருத்தலாம். அடிக்கோடு இடுவதையும், கேள்வி எண்களை சரிபார்ப்பதையும் இந்த நேரத்தில்தான் செய்யவேண்டும்.

கடைசி நேரம் வரை அடிஷனல் பேப்பர்களை வாங்குவதும், எழுதுவதுமாய் நேரத்தை இழுக்கக் கூடாது. அப்படியே எழுதியாக வேண்டும் என்றால், முன்னதாகவே அடிஷனல் பேப்பரை வாங்கிக் கட்டிக்கொண்டு தொடரலாம்.

அடிஷனல் பேப்பர்களை வரிசையாக அடுக்கி இருக்கிறோமா, மேப், கிராஃப் போன்றவற்றைச் சரியானபடி இணைத்து இருக்கிறோமா என்பதை சரிபார்ப்பதற்கும் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கவேண்டும்.

- எஸ்.ஜானவிகா

குழுவாகப் படிப்போம் மகிழ்வாக் !

 ஒரு குறிப்பிட்ட பாடத்தில், நண்பர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக 'மன வரைபடம்’ வரைந்து பின்னர், தங்களுக்குள் ஒப்பிட்டுப் பார்த்து, யார் வரைபடத்தில் பாடத்தின் முக்கியக் குறிப்புகள் உள்ளதோ, அதை பின்பற்றிப் பழகலாம்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

அறிவியல் பாடத்தில் உள்ள படங்களை வரைந்து பார்த்து வண்ணம் தீட்டிப் பழகலாம். அதேபோல், சோதனைப் பயிற்சிகளை மனப்பாடம் செய்யாமல் நண்பர்கள் முன்னிலையில் சோதனையின் நோக்கம், சோதனைக்குத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகளைச் செய்துகாட்டியும், தெளிவாகக் கூறியும் பயிற்சி எடுக்கலாம்.

நண்பர்கள் பாடங்களைத் தங்களுக்குள் பிரித்துக்கொண்டு, வினாப் பட்டியல் ஒன்றைத் தயார்செய்து 'வினாடி வினா’ நிகழ்ச்சி நடத்தலாம்.

பாடத்தில் வரும் முக்கிய நிகழ்வுகள், ஆண்டுகள், தலைவர்கள், விஞ்ஞானிகள், சிறப்புகள் பற்றி நினைவில் தக்கவைக்க அடிக்கடி தங்களுக்குள் சொல்ப் பழகலாம்.

பெரிய கேள்விக்குரிய பதில்களை, நண்பர்கள் தங்களுக்குள் சிறுதேர்வு போல எழுதிப் பார்ப்பது நல்லது. அப்படி எழுதிப் பார்க்கும் போது, எவ்வாறு உள்தலைப்புகள் எழுதலாம், எந்தெந்தக் குறிப்புகளுக்கு அடிக்கோடு இடலாம், எந்த வண்ண ஸ்கெட்ச்சைப் பயன்படுத்தினால் அழகாக இருக்கும் எனத் தெரிந்து கொள்ளலாம்.

பயிற்சித் தேர்வில் கேள்விகளுக்கான விடைகளை எழுதி முடித்த பின், குறிப்பிட்ட நேரத்தில் எழுத முடிந்ததா என்றும், எழுதும்போது மறந்துபோனவை எவை என்றும் குழுவில் கலந்துரையாடலாம்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

தேர்வுக்கு முந்தைய தினத்தில் விடைத்தாளில் கையெழுத்து எழுதும் முறை பற்றியும், இடைவெளிவிட்டு எழுதும் முறை பற்றியும், பதற்றப்படாமல் எழுதுவது பற்றியும் நண்பர்கள் குழுவாக உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம்.

தேர்வில் செய்திகள், அன்றாட நிகழ்வுகள் குறித்து சொந்தக் கருத்தில் எழுதச் சொல்வதால், தினமும் செய்தித்தாள்கள், பத்திரிகை இதழ்களைப் படித்து, அதில் உள்ள முக்கிய நிகழ்வுகளை ஒவ்வொருவரும் தன் சொந்த வாக்கியங்களில் பேசியும் எழுதியும் பழகலாம்.

வாழ்க்கைக் கணக்குகள், மனக் கணக்குகள் போன்றவற்றை ஒருவர் கேட்க, மற்றவர் பதில் கூறலாம். அவ்வாறு கேட்கும்போது, இந்த வகைக் கணக்குகள் வாழ்க்கையில் எந்த வழிகளில், எந்த இடங்களில் எப்படிப் பயன்படுகின்றனஎன்றும் கலந்துரையாடலாம்.

ஆங்கிலத்தில் கடினமான வார்த்தைகளை அடிக்கோடு இட்டு, தங்களுக்குள் 'சொல்லக்கேட்டு எழுதுதல்’ (டிக்டேஷன்) பயிற்சியை வைத்துக்கொள்ளலாம்.

- மூ.சங்கீதா, ஆசிரியை,
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி,
புதுப்பேட்டை, ஆரணி.

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!

'நாங்க நல்லாத்தான் படிக்கிறோம். ஆனா, பரீட்சை எழுதும்போது எல்லாம் மறந்துடுது’ என்று சிலர் வருத்தப்படலாம். மனசுக்குப் பிடித்தமாதிரி படித்தீர்கள் என்றால், நிச்சயமாக மறக்கவே மறக்காது.

உதாரணமாக, ஒன்றாம் வகுப்பில் கிழமைகளை வரிசை மாறாமல் கற்றுக்கொள்ள இந்தப் பாடல்.

'ஞாயிற்றுக்கிழமை நகையைக் காணோம்... திங்கட்கிழமை திருடன் கிடைத்தான்... செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்குப் போனான்... புதன்கிழமை புத்தி வந்தது...வியாழக்கிழமை விடுதலை ஆனான்... வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தான்... சனிக்கிழமை சாப்பிட்டுப் படுத்தான்’ இப்படி, வரிசையான நிகழ்ச்சிகளை  பாடல் வடிவில் நினைவில் வைக்கலாம்.

படிப்பதை படக்காட்சிகளாக மாற்றி, அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளலாம். இதன்மூலம் நம் நினைவாற்றல் மேம்படும்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

உதாரணமாக, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றுக்கு உரிய நிலங்களை நினைவில் வைத்துக்கொள்ள 'மலையில் தோன்றும் ஆறு, காட்டு வழியாக இறங்கி, வயல் பாய்ந்து, கடல் கலக்கிற காட்சி’யை கற்பனை செய்யுங்கள். இப்போது மலை - குறிஞ்சி, காடு - முல்லை, வயல் - மருதம், கடல் - நெய்தல், ஆறு பாயாத சுரம் - பாலை என்பதை வரிசைப்படுத்தலாம்.

நீங்கள் படிக்கும் கடினமான பகுதிகளை, எழுத்துக் குறியீடுகளாக மாற்றிக்கொள்வதால் எளிதில் நினைவில் இருக்கும். உங்களில் பலருக்குத் தெரிந்த உதாரணம் இது: வானவில்ன் நிறங்களை VIBGYOR என நினைவில் வைத்துக்கொண்டால், Violet, Indico, Blue, Green, Yellow, Orange and Red என ஏழு நிறங்களும் நம் நினைவுக்கு வரும்.

வரலாற்று நிகழ்வுகள், அவை நடந்த ஆண்டுகளின் வரிசையில் காலக்கோடு வரைந்து படிக்கும்போது  நினைவில் நீங்காமல் நிற்கும்.

கணக்குப் பாடத்தில், 'லாபம் = விற்ற விலை - வாங்கிய விலை. நட்டம் = வாங்கிய விலை - விற்ற விலை’ என்பதை நினவில் கொள்ள, 'விற்று வாங்கினால் லாபம்; வாங்கி விற்றால் நட்டம்’ என்ற ஒரு ஸ்லோகன் மூலம் நினைவில் கொள்ளலாம். இதைப்போல நீங்களே ஸ்லோகன்களைத் தயார்செய்து சமன்பாடுகளை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என்பதை 'எட்டி (8) எட்டி (8) நடந்தா நாலே (4) எட்டுல(8) எவரெஸ்ட்’ என்று நினைவில் ஏற்றினால், எவரெஸ்ட்டின் உயரம் எளிதாக நம் நினைவுக்கு வரும். இதைப்போல் எண்களை நினைவில் கொள்ள எளிய வரிகளை உருவாக்கலாம்.

ஆங்கிலப் பாடத்தில் வார்த்தை களை ஒப்பு முறைக்கு ஏற்பப் பிரித்துப் படித்தால் ஸ்பெல்ங் தகராறு வராது.

மனப்பாடப் பாடல்கள் போன்ற வற்றை மீண்டும் மீண்டும் சொல்யும் எழுதியும் பார்க்க வேண்டும். முக்கியமான ஃபார்முலாக்களை உங்கள் பார்வையில் அடிக்கடி படும் வகையில் எழுதித் தொங்கவிடுங்கள்.

நாம் விருப்பத்தோடும் ஆர்வத்துடனும் கவனத்துடன் பார்க்கின்ற திரைப்படக் காட்சிகள் எளிதில் நம் நினைவைவிட்டு நீங்குவது இல்லை. அதுபோலவே, ஆசிரியர் கற்பிக்கும்போது ஆர்வத் துடன் கவனித்துக் குறிப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதனைப் பொருள் அறிந்து மனதில் பதியவைத்துத் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தால் எல்லா தேர்வுகளும் நம் வசப்படும்.

- த.சிங்காரவேலன், தர்மபுரி.

தேர்வை எதிர்கொள்வது எப்படி?

ஒரு பருவம் முழுவதும் விழுந்து விழுந்து படித்தாலும், அதைத் தேர்வு அறையில் சிறப்பாக எழுதினால்தான் முழுப் பலன் கிடைக்கும். ஆகவே, தேர்வுக்குச் சில தினங்கள் முன்பு இருந்தே தயாராக வேண்டும்.

விளையாட்டு, டிவி பார்ப்பது போன்றவை சோர்வு தரும் என்பதால், அவற்றை வெகுவாகக் குறைத்துக் கொள்ளுங்கள்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

சிலர் தேர்வு சமயத்தில்தான் அதிக நேரம் கண்விழித்துப் படிப்பார்கள். அதிலும், முந்தைய நாள் அதிகம் கண்விழித்துப் படிப்பது, தேர்வு அறையில் மிகுந்த சோர்வைக் கொடுக்கும். எனவே, தேர்வுக்கு முந்தைய இரவு போதுமான உறக்கம் அவசியம்.

தேர்வு சமயத்தில் அவசியம் இன்றிப் புதிதாக எதையும் படிக்கக் கூடாது. தேர்வு சமயம் என்பது ரிவிஷனுக்கே ஆனது. குறிப்பாக, முக்கிய வினாக்களைக் குறிவைத்துத் திருப்புதல் செய்ய வேண்டும்.

தூக்கம் போலவே உணவு விஷயத்திலும் எச்சரிக்கை தேவை. எண்ணெய் மிகுந்த பண்டங்கள், செரிமானத்துக்கு அதிக நேரம் ஆகும் உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. சத்துடன் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று வயிறு முட்டச் சாப்பிட்டுச் சென்றால், பரீட்சை அறையில் தூக்கம்தான் முட்டும். அளவுடன் சாப்பிடுவதே சிறப்பு.

தேர்வு எழுதப்போவது நமது பள்ளியில்தான் என்றபோதும், வேறு வகுப்பறைகளைத் தேர்வு அறையாக ஒதுக்கி இருப்பார்கள். தேர்வுக்கு முந்தைய தினமே நமக்கான அறையையும் இருக்கையையும் பார்த்துவிட்டு வருவது பதற்றத்தைக் குறைக்கும்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

தேர்வு நாளில் வழக்கமாகக் கிளம்புவதைவிடச் சற்று முன்பாகவே புறப்பட்டால்தான் டென்ஷன் இருக்காது. கூடுதலாக ஒரு பேனா மற்றும் பென்சில் எடுத்து வைத்துக்கொள்வதோடு, பிற உபகரணங்களையும் ஒரு முறைக்கு இரு முறை முந்தைய இரவே சரியாக எடுத்துவைத்துக் கொள்ளுங்கள்.

தேர்வு அறைக்குச் செல்வதற்கு முன்பாகவே பாத்ரூம் செல்ல வேண்டி இருப்பின், அதை அலட்சியப்படுத்தாதீர்கள். எல்லா இயற்கை உபாதைகளையும் முடித்துவிட்டுத் தேவை எனில், ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுத் தேர்வு அறைக்குள் நுழைய வேண்டும்.

தேர்வு அறையில் அமர்ந்த்தும் ஒரு நிமிடம் பிரார்த்தனைபோல ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள். தேர்வு எழுதுவதற்கு முன்பாக வினாத்தாளைப் படிப்பதற்கு ஐந்து நிமிடம் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நிதானமாகக் கேள்விகளை வாசித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு, நன்கு தெரிந்த கேள்விகளை மட்டும் தேர்ந்து எடுத்து விடைகளை எழுதுவதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்தலாம்.

   - எஸ்.ஜானவிகா

உபகரணங்களைக் கையாளுதல்!

எல்லாத் தேர்வுகளுக்கும் முக்கியமான உபகரணம் பேனாதான்.  தேர்வுக்காகப் புது பேனா வாங்கக் கூடாது. எழுதிப் பழகிய பேனாவே சிறந்தது. அதைத் தேர்வுக்கு முதல் நாள் நன்றாகக் கழுவி முழுதும் மை நிரப்பவும். மை கசியாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

பேனா முள் நன்றாக உள்ளதா என்பதை ஒரு வாரத்துக்கு முன்பே சோதியுங்கள். சரியில்லை என்றால் முன்பே மாற்றி, ஏழெட்டு நாட்கள் எழுதிப் பழகவேண்டும். ஜெல் பேனா எனில், புதிதாகக்கூட வாங்கிக்கொள்ளலாம். ரீஃபில் பேனாவைத் தவிர்ப்பது நல்லது.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

பென்சிலைப் பொறுத்தவரை பழையதைவிட புதியதே நல்லது. புதிதாக வாங்கிக் கூராகச் சீவி வைத்துக்கொள்ள வேண்டும். பென்சிலைச் சீவுவதற்கு பிளேடைத் தவிர்த்து. ஷார்ப்னரைப் பயன்படுத்த வேண்டும். பென்சில் கூராக இல்லை என்றால், வடிவியல் அளவுகள் சரியாக வராது.

பரீட்சையில் கூடுமானவரை ரப்பரைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. தவிர்க்க இயாலாத சூழல் பயன்படுத்த நேர்ந்தால், நாசுக்காகப் பயன்படுத்த வேண்டும். பழைய ரப்பரில் ஏற்கெனவே அழித்த அழுக்குகள் ஒட்டி இருக்கும். எனவே தேர்வுக்காகவே புது ரப்பரை வாங்கிச்செல்வது நல்லது.

விடைத்தாள்களில் முக்கிய சொற்றொடர்களை அடிக்கோடு இடுவதற்கு, உறுத்தாத நிறங்களில் பேனாக்களைத் தேர்வு செய்யலாம். ஊதா, பழுப்பு நிறங்கள் சிறந்தவை.

சிலருக்குக் கைகளில் எப்போதும் வியர்வை சுரந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் விடைத்தாளுக்கு மேல் வினாத்தாளையோ அல்லது கைக்குட்டையையோ வைத்துக்கொண்டு எழுதலாம். வியர்வையால் விடைத்தாள் சேதமாகாமல் இருக்கும். விடைத்தாள் அழுக்கு ஆகாமலும் கசங்காமலும் ஒப்படைக்க வேண்டும்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

வடிவியல் பெட்டியில் உள்ள கருவிகளை லாவகமாகக் கையாளப் பழகவேண்டும். சிலர் வட்டம் வரையும்போது வட்டத்தின் மையப்புள்ளியில், கவராயத்தின் கூர்முனையைப் பயன்படுத்தத் தெரியாமல் தாளைக் கிழித்துவிடுவார்கள். அவ்வாறு செய்யாமல், மென்மையாகப் பயன்படுத்தவேண்டும். சிலர் வரைகின்ற வட்டம், கவராயத்தைப் பயன்படுத்தாமல் கையால் வரைந்ததுபோருக்கும். வரைந்த கோட்டின் மேலேயே திரும்பவும் வரைவதைத் தவிர்த்து, ஒரே முறையில் தெளிவாக வரைய வேண்டும்.  

அளவுகோல் (ஸ்கேல்) அளவுகள் தெளிவாக உள்ளதா என்பதை முன்னரே சோதித்துக்கொள்ள வேண்டும். முனை மழுங்கிய அளவுக்கோலைத் தவிர்க்கவும்.

மூலைமட்டம், பாகைமானி ஆகியவற்றைப் பயன்படுத்தும் முறைகளைச் சந்தேகம் இல்லாமல் கற்றுக்கொள்ளவேண்டும். சிறு சிறு வட்டங்கள் வரைவதற்கு ப்ரோ சர்க்கிள் என்ற வட்டவடிவக் கருவியைப் பயன்படுத்தலாம்.

விடைத்தாள்களை இணைத்துக் கட்டும்போது, நூன் நுனியில் முடிச்சு போடவேண்டும். அப்போதுதான் திருத்தும்போது எளிதாகத் தாள்களைத் திருப்பமுடியும்.

- இரத்தின. புகழேந்தி,
ஆசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.

படிக்காமலேயே அள்ளலாம் மார்க்!

'படிக்காமலேயே’ என்பதற்கு அர்த்தம், எதையுமே படிக்காமல் பரீட்சைக்குச் செல்வது அல்ல. குறிப்பிட்ட சில கேள்விகளுக்கான பதிலைத் தனியாக படிக்காது போனாலும், சமாளித்து எழுதுவதையே இது குறிக்கும்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

நாம் ஏற்கெனவே எஃப்.ஏ. மதிப்பெண்ணுக்கான செயல்பாடுகள் பலவற்றை மேற்கொண்டு இருப்போம். அவற்றை நினைவுபடுத்தியும் எஸ்.ஏ. வில் மார்க்குகளை அள்ளமுடியும்.

உதாரணமாக, எஃப்.ஏ. படத்தொகுப்புக்காக 'கிராமத்து விளையாட்டுகள்’ என்ற தலைப்பில் படங்களைச் சேகரித்து இருப்பீர்கள். எஸ்.ஏ.வில் 'கிராமத்து விளையாட்டுகளைக் கூறுக’ என்ற கேள்வி வருகிறது. உங்களில் சிலர், ''அச்சோ... படிக்காத கேள்வி ஆச்சே!'' என்று ஒதுக்கிவிட வேண்டாம். அந்தப் படத்தயாரிப்பை நினைவுபடுத்தினால் நிச்சயம் சரியான விடையை எழுத முடியும்.

அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண்கள், பெரிய கேள்விகள் அனைத்துமே சிலசமயம் ஒன்றுக்கு ஒன்று உதவக்கூடியன.

உதாரணத்துக்கு, நீங்கள் படிக்காத பெரிய வினா ஒன்றைக் கேள்வித்தாளில் பார்த்தால் பதற்றம் அடைய வேண்டாம். அந்தக் கேள்வியை உன்னிப்பாகக் கவனியுங்கள். அது தொடர்பான ஒரு மார்க், இரண்டு மார்க் கேள்விகளுக்கான பதில்களைத் தொகுத்து எழுதினால் போதும், குறைந்தது பாதி மார்க் உத்தரவாதம்.

சில பெரிய வினாக்களுக்குப் பதில் உதைக்கும். ஆனால், அதற்கு உரிய படம் மிகச் சரியாக நினைவில் இருக்கும். அப்படிப்பட்ட கேள்விகளை விட்டுவிடக் கூடாது. படம் அருமையாக வரைந்து பாகங்களை குறித்துவிட்டு, இந்த பாகங்களை அடிப்படையாக வைத்தே பாயின்ட்டுகளை எழுதினால் போதும். அந்த விடைக்கு விழும் மார்க்குகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

நீங்கள் எழுதும் விடைகளில் முத்துக்கள் போல் ஒரு சில பாயின்ட்டுகளை ஹைலைட் செய்வது அவசியம். அந்தக் கருத்துக்கள் சட்டென விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் கண்களை ஈர்த்து, மதிப்பெண்களைப் பெற உதவும்.

அடித்தல் திருத்தல் இல்லாமல் போதிய இடம் விட்டு எழுதுதல், முடிந்த வரை அழகான கையெழுத்தைப் பழகுதல் போன்றவை கூடுதல் மதிப்பெண் சேர்க்க உதவும்.

மறந்தும்கூட ஒரே கேள்விக்கான பதிலை வெவ்வேறு பக்கங்களில் எழுதக் கூடாது. அதனால், ஆசிரியருக்கு நம் மீதான நல்ல எண்ணம் குறைந்துவிடும். அது மார்க்குகளிலும் பிரதிபக்கும்.

தற்போதைய கல்வி முறையில் மாணவர்களின் படைப்புத் திறனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே, பாடத்தில் அல்லாத அல்லது அதை ஒட்டிய பொதுவான கேள்விகளும் வினாத்தாளில் வரலாம். இதற்கு, தினசரி செய்தித்தாள், பத்திரிகைகள் வாசிப்பது கைகொடுக்கும். எனவே, பாடத்துக்கு அப்பாற்பட்ட கேள்விகள் வந்தால், பதற்றப்படாமல் உங்கள் கிரியேட்டிவிட்டியைப் பயன்படுத்திப் பதில் எழுதுங்கள். வெற்றி உங்களுக்கே!

- எஸ்.ஜானவிகா

வசீகரிக்கும் விடைத்தாள்!

'ஒருவர் விடைத்தாளைப் கையாண்டு இருக்கும் விதத்தைப் பார்த்தே, அவர் எப்படிப்பட்டவர் என்பதை (அதாவது, நம்முடைய பெர்சனாட்டியை) கணிக்கலாம்’ என்று உளவியல் அறிஞர்கள் சொல்வார்கள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது எழுத்துத் தேர்வு. ஆகவே, விடைத்தாளை எப்படி திறமையாகப் பயன்படுத்துவது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.

முதல் விடைத்தாளின் இரு பக்கங்களில் ஓர் அளவுகோல் அளவுக்கோ அல்லது நான்கு புறமும் அரை இன்ச் அளவு விட்டு கோடு போடுங்கள். இது, கேள்வி எண்களை குறிப்பதற்குப் பயன்படும்.

தேர்வு எண் / பெயர், வகுப்பு, பள்ளி, ஊர் ஆகியவற்றை விடைத்தாளின் வலது ஓரத்தில் அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுங்கள்.

வினாத்தாளை முழுவதுமாகப் படித்துவிட்டு, ஒவ்வொரு பகுதியாக சரியாக எண்கள் இட்டுப் பதில்களை எழுத வேண்டும். எல்லாப் பகுதிகளில் இருந்தும் மாற்றி மாற்றிப் பதில் எழுதி, ஆசிரியர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

சில நேரங்களில் சில கேள்வி எண்களைப் போட்ட பிறகு, அதற்கான பதில் நினைவுக்கு வராமல் போகும். அதை விட்டுவிட்டு அடுத்த கேள்விக்கு பதில் எழுத ஆரம்பிக்கும்போது, ஏற்கெனவே போட்ட கேள்வி எண்ணுக்கு நேராக இந்தக் கேள்விக்கு உரிய பதிலை எழுத ஆரம்பித்துவிடுவீர்கள். அப்படி எழுதுவது தவறு.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

அந்தந்தக் கேள்விக்குரிய விடைகளை அந்தந்த எண்களுக்கு நேராக எழுத வேண்டும். இல்லை என்றால் 'தவறான பதில்’ என்று ஆசிரியர் அடித்துவிடக்கூடும். நீங்கள் போடும் எந்த எண்ணையும் அல்லது குறிகளையும் மார்ஜினுக்கு உட்புறம்தான் போடவேண்டும். வினாத்தாளில் கொடுக்கப்பட்டு உள்ள வினா எண்களை மட்டுமே மார்ஜினுக்கு வெளிப்புறம் போடவேண்டும்.

விடைத்தாளில் பதில்களை எழுதும்போது எந்தெந்த வார்த்தைகளை ஆசிரியரின் கவனத்துக்கு வைக்க நினைக்கிர்களோ, அவற்றின் கீழ் பென்சிலால் அடிக்கோடு இட்டுக் காண்பிக்கலாம் அல்லது கறுப்பு மையால் எழுதலாம்.

நீங்கள் விடைகளைத் தெளிவாகவும் நேராகவும் எழுதிப் பழகினால், அதைத் திருத்தும் ஆசிரியர்களைக் கவரலாம். சொற்கள், வரிகள், விடைகள் ஆகியவற்றுக்கு இடையே போதிய இடைவெளி விடுதல் நல்லது.

மிக முக்கியமான மற்றொரு விஷயம், விடைத்தாளை அழுக்கு படாமலும், முனைகள் மடங்காமலும் சீராப் பயன்படுத்தல்.

தேர்வு எழுதி முடித்தவுடன் சரியான அளவில் தாளின் இடது மூலையில் துளையிட்டு போதிய இடைவெளி விட்டு நூலை கட்ட வேண்டும். இப்படிச் செய்வதால் ஆசிரியர் திருத்தும்போது முழுவதுமாகத் தாளை விரித்துவைத்து திருத்த வசதியாக இருக்கும். இல்லையெனில், தாளைப் பிரிக்கும்போதே இடதுமுனை கிழிந்து விடக்கூடும்.

- டி.விஜயலட்சுமி, ஆசிரியை,
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்.

தேர்வு காலம் : செய்யக் கூடியவை...செய்யக் கூடாதவை !

செய்யக் கூடியவை...

தேர்வுக்கு மட்டும் இன்றி எப்போதுமே படிப்பதற்கு ஏற்ற சூழல் அமர்ந்து படிக்கவேண்டும். தேர்வுக்குப் படிக்கும்போது, இடையிடையே ரிலாக்ஸ் ஆக சிறிது நேரம் இசை கேட்பது, பெற்றோருடன் பேசுவது போன்ற செயல்களைச் செய்யலாம்.

பாடங்களைப் புரிந்துகொண்டு படியுங்கள். புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்து எழுதவேண்டும் என நினைக்காமல், உங்கள் சொந்த நடையில் எழுதுங்கள். ஆனால் முக்கியமான பாயின்ட்டுகளை விட்டுவிடாமல் எழுதவேண்டும்.

ரிவிஷன் எல்லாம் முடிந்த பிறகும் சந்தேகம் எழுகிறதா? தயக்கமே வேண்டாம். உங்கள் ஆசிரியரைக் கேளுங்கள். அவர், உங்கள் சந்தேகத்தைப் போக்குவது நிச்சயம்.

குழுவாகப் படிக்கும்போது, உங்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் படிக்கவைப்பதும் உங்கள் கடமை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

பாடங்களை மனம் விரும்பிப் படியுங்கள். அடுத்தவர் கட்டாயத்தினால் படிக்கும்போது அந்தப் பாடமே பிடிக்காமல் போய்விடக் கூடும். படிப்பது எதுவும் மனதில் பதியாது.

கடைசி நேரத் தீவிர வாசிப்பின்போது சோர்வு ஏற்படுவதுபோல் உணர்கிர்களா? உடனே, உங்கள் ஆசிரியரிடம் ஒரு கதை சொல்லச் சொல்க் கேட்டு மகிழுங்கள். அல்லது, உங்களில் ஒருவர் கதை சொல்லுங்கள். மீண்டும் புத்துணர்வு பிறந்துவிடும்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

தேர்வுக் காலம் என்பதால், விளையாட்டைக் கைவிடவேண்டாம். அதற்கான நேரத்தை வேண்டுமானால் குறைத்துக்கொள்ளலாம். ஒரு நாளில் அரை மணி நேரமாவது விளையாடுங்கள். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

சத்தான உணவுகளைச் சாப்பிடுங்கள். மூன்று வேளையுமே உணவைத் தவறாமல் சாப்பிட வேண்டும். வீட்டில் செய்யும் உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுவது நல்லது.

விடைத்தாளில் ஒரு வரிக்கு 8 சொற்கள் மட்டுமே எழுதலாம். ஒரு பக்கத்துக்கு 20 முதல் 25 வரிகள் எழுதலாம். நிறையப் பக்கங்கள் எழுதினால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்ற எண்ணம் வேண்டாம்.

செய்யக்கூடாதவை...

தேர்வு என்றவுடன் நம்மில் சிலருக்கு அச்சம் தொற்றிக் கொள்ளும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அச்சம் கொள்ளக் கூடாது. இதுவும் மற்றொரு நாள்தான் என்று எண்ணுங்கள். இதுவரை நீங்கள் படித்ததைத்தான் தேர்வாக எழுதப்போகிர்கள் என்று நினைத்து அச்சத்தை விட்டொழியுங்கள்.  

கடைசி நேரத்தில் படிக்கும் சமயத்தில் மற்றவர்களின் பேச்சைக் கேட்டோ அல்லது நீங்களாகவோ புதிய பாடப்பகுதியைப் படித்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். ஏற்கெனவே நன்கு படித்ததைத்தான் ரிவிஷன் செய்யவேண்டும்.

தேர்வு அறையில் இடையிடையே திரும்பிப் பார்ப்பது, பிறருடன் பேசுவது போன்ற செயல்களைச் செய்யாதீர். இது, ஆசிரியர்களிடம் உங்களைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தலாம்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

எந்தக் காரணத்தைக் கொண்டும் எழுதிப் பார்த்த பேப்பரையோ, பிட்’ பேப்பரையோ தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லாதீர்கள். உங்களுக்குத் தெரிந்ததை எழுதினாலே போதும்.

முதல் நாள் எழுதிய தேர்வைப் பற்றி யோசித்துக் குழம்பாதீர்கள். நாம் எழுதியது சரியா? தவறா? என்று எல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டாம்.

விடைத்தாளில் கடவுளின் பெயரையோ, குறியீடுகளையோ எழுதாதீர்கள். எந்த நம்பிக்கையையும் நம் மனத்துக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

எஃப்.ஏ. மதிப்பெண்களை வைத்தே தேர்ச்சி அடைந்துவிடலாம் என்று அலட்சியமாக இருக்காதீர்கள். பெரிய வகுப்புகளுக்குச் செல்லும்போது எழுத்துத் தேர்வு உறுதுணை புரியும் என்பதை மனதில் வைத்துக் கவனத்துடன் செயல்படுங்கள்.

- இரா.இராணி,
ந.கிருஷ்ணவேணி

வாசிப்புத் திறனை மேம்படுத்த 10 கட்டளைகள்!

பாடப் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் இருக்கிறது. ஆனால், வாசிப்பதில்தான் சிரமமாக இருக்கிறது என்று கவலைப்படும் சுட்டிகளா நீங்கள்?

இன்றோடு கவலையை விட்டுவிடுங்கள். இதோ உங்கள் வாசிப்புத் திறனை நீங்களே மேம்படுத்திக்கொள்ள எளிதான 10 வழிகள்...

உங்கள் ஆசிரியரை சக நண்பராகக் கருதுங்கள். உங்கள் பெற்றோரைப் போன்றவர்தான் அவர். எனவே, அவருடன் நெருக்கமாகப் பேசிப் பழகுங்கள். கல்வியின் மீது நம்பிக்கையை வளர்ப்பதற்கு இதுவே முதல் படி.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

எந்தப் பாடத்தைப் படிப்பதில் கஷ்டமாக இருக்கிறது என்று நினைக்கிர்களோ, அந்தப் பாட ஆசிரியரிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை கேளுங்கள். நிச்சயமாக, உங்களுக்கு அவர் வழிகாட்டுவார்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

சீருடையில் கவனம் செலுத்துங்கள். அழகாகவும் தூய்மையாக உடை அணியும்போது, உங்கள் தோற்றம் பொவுபெறும். தன்னம்பிக்கை மிகுதியாகும். விரைவில் மாற்றத்தை உணர்வீர்கள்.

வகுப்பில் முதல் அல்லது இரண்டாவது வரிசையில் உட்காருங்கள். உங்கள் மீதான ஆசிரியர்களின் கவனத்தையும் நட்பையும் அதிகமாக்குவதற்கு இதுவே சிறந்த வழி.

தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிப் பாடத்தில் தடுமாற்றம் ஏற்படுகிறதா? முதல், ஆசிரியர் அல்லது நண்பர்கள் உதவியுடன் மூன்று அல்லது நான்கு எழுத்துகள் கொண்ட சொற்களைப் பிழையின்றி வாசிக்கப் பயிற்சி எடுங்கள். தொடர்ந்து அப்படிச் செய்துவந்தால், வெறும் 15 நாட்களில் 150 சொற்களைச் சிறப்பாக வாசித்திட முடியும்.

கணக்குப் பாடம் சுவாரசியமானது. முதல் எண்களை எழுதவும், சொல்லவும் பழகுங்கள். பிறகு, அடிப்படைச் செயல்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள்... ஆசிரியர் நடத்துவதை ஆர்வத்தோடு கவனிக்க கவனிக்க, நீங்களும் கணக்குப் பு ஆவீர்கள்.

எஸ்.ஏ.விலும் அசத்தலாம்...சூப்பர் கிரேடு வாங்கலாம் !

நீங்கள் மனப்பாடம் செய்ய விரும்பும் பகுதிகளை, உங்களது கற்பனையில் ராகத்தோடு இசைத்துப் பாடிப் படியுங்கள். இது நிச்சயம் பலன் தரும்.

வாசிப்பில் தன்னம்பிக்கை பிறக்க, நமது கையெழுத்து நமக்கே திருப்தி தரும் வகையில் இருந்திட வேண்டும். நோட்டுப் புத்தகத்தில் எழுதும்போது சொற்களுக்கு இடையில் இடம் கொடுத்து எழுதத் தொடங்குங்கள். சீக்கிரமே மாற்றத்தை உணர்வீர்கள்.

நல்ல மதிப்பெண் வாங்க முடியவில்லை எனில், பெற்றோருக்கு வருத்தமாக இருக்கும். சிலர் கோபம் அடைவதும் உண்டு. அவர்களிடம் நேரடியாகப் பேசுங்கள். 'நான் தொடர்ந்து முயற்சி செய்கிறேன். நிச்சயம் அடுத்தடுத்த தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவேன். நீங்கள் ஊக்கப்படுத்தினால் போதும்'' என்று சொல்லுங்கள். உங்கள் தோளைத் தட்டிப் பாராட்டுவார்கள்.

தேர்வு எழுதும்போது அச்சங்களைத் தகர்த்து எறிந்துவிடுங்கள். 'என்னால் முடியும்’ என்ற மந்திரச் சொல்லை மனதில் சொல்க்கொண்டே தெரிந்ததைத் தெளிவாக எழுதுங்கள்.

வெற்றி உங்களுக்கே!

- முழுமதி மணியன், ஆசிரியை.
குருமூர்த்தி நடுநிலைப் பள்ளி,
மயிலாடுதுறை.

தொகுப்பு: சரா,  படங்கள்: க.ரமேஷ்,  ஓவியங்கள்: சூர்யா
மாடல்கள்: அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், நீதிபுரம் - மேட்டூர்.