Published:Updated:

மந்திர நகரில் தந்திரவாதி !

யுவா,படங்கள் : ஆ.முத்துக்குமார்

மந்திர நகரில் தந்திரவாதி !

யுவா,படங்கள் : ஆ.முத்துக்குமார்

Published:Updated:
##~##

சுட்டிகளின் ஃபேவரைட் நிறுவனமான வால்ட் டிஸ்னியிடம் இருந்து மீண்டும் ஓர் அசத்தல் திரைப்படம், 'ஓஸ் தி கிரேட் அண்ட் பவர்ஃபுல்’ (OZ: THE GREAT AND POWERFUL). இந்தத் திரைப்படத்தைப் பார்த்த நமது சுட்டி விமர்சகர்களின் வியப்பு, குதூகலிப்பு வரிகள்...

விஷ்வா: ''பிரபல நாவலாசிரியர் ஃபிராங்க் பவும் (Frank Baum)  எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். முதல் 15 நிமிடங்கள் பிளாக் அண்ட் ஒயிட், பிறகு மந்திர உலகத்துக்குப் போனதும் கலர்னு படம் வித்தியாசமா இருக்கு. 3D படத்தை பிளாக் அண்ட் ஒயிட்லயும் மிரட்ட முடியும்னு நிரூபிச்சு இருக்காங்க.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீபிகா: கதையின் நாயகன் ஆஸ்கர் டிக்ஸ், ஒரு மேஜிக்மேன். மந்திரவாதி ஓஸ்னு சொல்லிப்பார். இவரைப் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும். இதனால் ஏற்படும் பிரச்னையில் ஒருத்தன் சண்டைக்கு வர்றான். அவனிடம் இருந்து தப்பிக்க ராட்சச பலூனில் ஏறி மேலே போகும் ஆஸ்கர், ஒரு மாய உலகத்தில் வந்து விழுந்துடறார். அந்த இடத்தின் பெயரும் ஓஸ். அங்கே பல நகரங்கள், அவற்றை வெவ்வேறு மந்திரவாதிகள், சூனியக்காரிகள் ஆட்சி செய்யறாங்க. அடிக்கடி சண்டை போட்டுக்குவாங்க. அதில் தியோடோரா சகோதரிகளில் ஒருத்தியை ஆஸ்கர் சந்திக்கிறார். பந்தாவாகத் தன்னை ஒரு மந்திரவாதி என்கிறார்.''

மந்திர நகரில் தந்திரவாதி !

துர்கா: ''அவரின் தோற்றத்தையும் மேஜிக்கையும் பார்த்து நம்புகிற தியோடோரா, தன் இடத்துக்குக் கூட்டிப் போகிறாள். 'எமரால்ட் நகரத்தை ஆளும் எவனோரா என்ற சூனியக்காரி எங்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறாள். அவளை அழிக்க உதவினால் உனக்கு நிறைய தங்கங்களைப் பரிசாகத் தருவோம்’னு சகோதரிகள் சொல்றாங்க. எவனோராவிடம் இருக்கும் மந்திரக்கோலை எடுக்கப் போகும்போதுதான் அவள் நல்ல சூனியக்காரி, அவளுடைய அப்பாவைக் கொன்றதுதியோடோரா சூனியக்காரிகள்தான்னு தெரியுது.''

ரிஷி: ''தியோடோரா சகோதரிகளிடம் இருந்து எமரால்ட் நகர மக்களைக் காப்பாற்ற ஆஸ்கர் செய்யும் சாகசம்தான் க்ளைமேக்ஸ். அவர் தந்திரம் செய்யும் மேஜிக்மேன்தானே. அதனால், தாமஸ் ஆல்வா எடிசனின் சினிமா ஒளிக் காட்சியையே அடிப்படையாவெச்சு, தன்னைப் பயங்கர மந்திரவாதி மாதிரி காட்டிக்கிட்டு, தியோடோரா சூனியக்காரிகளை விரட்டிடறார். பறக்கும் குரங்கு, பீங்கான் சிறுமி என இதுவரை மந்திரப் படங்களில் பார்க்காத வித்தியாசமான கேரக்டர்களும் வருது.''

மந்திர நகரில் தந்திரவாதி !

விஷ்வா: ''பறக்கும் குரங்கு செய்யும் சேட்டைகள் பிரமாதம். பீங்கான் சிறுமி ரொம்ப க்யூட். மனிதர்கள் மற்றும் அனிமேட் கேரக்டர்கள் சேர்ந்த படங்களில் இந்தப் படம் அடுத்த ஒரு ஸ்டெப்புக்கு போய் இருக்கு. டைரக்டர் யார்னு தெரியுமா? 'ஈவில் டெட்’ மற்றும் 'ஸ்பைடர்மேன்’ வரிசைப் படங்களை இயக்கின சாம் ராய்மி. திகில், ஆக்ஷன் மட்டும் இல்லாமல், மாயாஜாலப் படங்களையும் தன்னால் அழகாக எடுக்க முடியும்னு நிரூபிச்சு இருக்கார். எக்ஸாம் டைமில் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கக் கிடைச்ச நல்ல சான்ஸ் இந்த ஓஸ்!''