Published:Updated:

அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் தேவையா ?

எக்ஸாம் சீசன் !

அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் தேவையா ?

எக்ஸாம் சீசன் !

Published:Updated:
##~##

எப்போதும் ஜாலியாக உலா வந்த பத்தாம் வகுப்புப் படிக்கும் ஜானி, திடீரென ஆளையே காணோம். விசாரித்தால், வீட்டில் விழுந்து விழுந்து படித்துக்கொண்டு இருப்பதாகத் தகவல்.

கிரிக்கெட் மட்டையை மூன்றாவது கரமாக வைத்திருந்த மூர்த்திக்கு என்னாச்சு? வீட்டில் மூர்த்தி... பரணில் பேட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜுராஸிக் பார்க் தொடங்கி ஹரிதாஸ் வரை நல்ல படங்களை அறிமுகம் செய்த ஆறுமுகம் இப்போது காணாமல் போனோர் பட்டியலில்.

ஏன் இந்த மாற்றங்கள்? எக்ஸாம் சீசன் வந்துவிட்டால் நம் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் அவசியமா? மாற்றம் தேவை எனில், அது எத்தகையதாக இருக்கவேண்டும்?  

அச்சம் தவிர்...

தேர்வுக் காலக்கட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய உளவியல் பிரச்னைகள் குறித்து ஆசிரியர் கரிகாலன் கூறும்போது, ''அச்சம் தவிர் என்ற பாரதியின் புதிய ஆத்திசூடிதான் தேர்வு கால மந்திரச் சொல். மாணவர்களுக்கு தேர்வு அச்சத்தை ஏற்படுத்துவதில் முதன்மை வகிப்பது, பெற்றோர்கள்தான். தேர்வு காலத்தில் வீட்டை ஒரு சிறைக்கூடமாக மாற்றி விடக்கூடாது. தொலைக்காட்சி இணைப்பைத் துண்டித்துவிடுவது, வார மற்றும் மாத இதழ்களைத் திடீரென நிறுத்துவது போன்ற செயல்களால் மாணவர்களின் பய உணர்வு அதிகம் ஆகிவிடும்.

அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் தேவையா ?

பக்கத்து வீட்டு சுட்டிகள், உறவினர்களின் குழந்தைகளோடு நம் வீட்டுப் பிள்ளைகளை ஒப்பிட்டுப் பேசுவதும் கூடாது. இதனால், அவர்களுக்குத் தாழ்வுமனப்பான்மை ஏற்படும். ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிகூறி, 'நீ இந்தப் பரீட்சையில் நல்ல மார்க் எடுக்காமல்போனால், உன் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிவிடும்’ என்றெல்லாம் சொல்வது உண்டு. இது அவர்களின் அச்ச உணர்வை அதிகரிக்குமே தவிர, தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ளும் தைரியத்தைத் தராது.

பெற்றோர்கள், பெரியவர்கள் ஏற்படுத்துகிற தேவையற்ற அச்சத்தால், எளிதில் எழுதி வெற்றிபெற வேண்டிய ஒரு தேர்வை, கஷ்டப் பட்டு மதிப்பெண் வாங்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். எனவே, அச்சத்தைத் தவிர்ப்பதே மாணவர்களுக்கு நன்மை பயக்கும்'' என்கிறார்.

அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் தேவையா ?

உணவில் கட்டுப்பாடு தேவையா?

தேர்வு நேரத்தில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம் என்று கூறும் ஆசிரியர் இரத்தின. புகழேந்தி, ''இது கோடைக்காலம் என்பதால், நீர்ச் சத்து மிகுந்த பழங்கள், கீரைகள், காய்கறி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மசாலா பொருட்கள், பாக்கெட்டில் அடைத்த நொறுக்குத் தீனிகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும். இதனால், செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். தேர்வு நேரத்தில் படிப்பதில் கவனம் செலுத்த மனதை ஒருமுகப்படுத்துவது போலவே உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்லது'' என்கிறார்.

ஒவ்வொரு தேர்வுக்கும் பின்...

''குடும்பத்தில் பல பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், அவற்றைத் தேர்வு எழுதும் பிள்ளைகளின் காதுகளுக்கு எட்டாதபடி பெற்றோர் நடந்துகொள்ள வேண்டும். அதேபோல், வீட்டுப் பிரச்னைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது மாணவர் களின் கடமை. ஒவ்வொரு தேர்வையும் எழுதி முடித்த பின், அந்தத் தேர்வை எப்படி எழுதினோம் என்று சரிபார்க்கும் பழக்கம் முற்றிலும் தவறு. அப்படிச் செய்தால், அடுத்த தேர்வுக்கு தயாராவதில் பாதிப்பு ஏற்படும். அதையும் மீறி தவறைக் கண்டுபிடித்து விட்டாலும் கவலை வேண்டாம்.

அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் தேவையா ?

அடுத்தப் பாடத்தில் அசத்தி மார்க்குகளை அள்ளலாம். எப்போதும் படிப்பு படிப்பு என்று இருக்காமல், அரை மணி நேரம் விளையாடுவது, தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சி பார்ப்பது முதலான செயல்களில் ஈடுபடும்போது உடம்பும் மனசும் ரிலாக்ஸ் ஆகும். உற்சாகமாக தேர்வு அறையில் நுழையலாம்'' என்கிறார் ஆசிரியை சித்ரா.

முதல்வனின் அனுபவம்!

கடந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த தஞ்சை மாணவர் பி.ஸ்ரீநாத் ''தேர்வுக்குப் படிக்கும்போதும், பரீட்சை எழுதும்போதும் இயல்பாக இருக்கவேண்டும். எந்தச் சூழலிலும் டென்ஷனே ஆகக்கூடாது.

எந்த ஒரு காரியத்திலும் பதற்றப்பட்டால், அதைத் தெளிவாகச் செய்ய முடியாது. நான் பரீட்சையை நினைத்து டென்ஷன் ஆனதே இல்லை. நம்மில் பலரும் எக்ஸாம் ஹாலுக்குள் நுழைஞ்சவுடனே டென்ஷன் ஆகிடறோம். அது தப்பு. ஸ்கூலில் வைக்கிற ரிவிஷன் டெஸ்டை பொதுத் தேர்வுக்கான பயிற்சி என்று எண்ணி எழுதணும்.

எந்நேரமும் படித்துக்கொண்டே இருக்காமல் இடையிடையே செஸ், கேரம் விளையாடுவதால் மனசுக்கு ரிலாக்ஸாக இருக்கும். இப்படி எந்தவிதமான பயமும் பதற்றமும் இல்லாமல், இதுவும் இன்னொரு நாள்தான் என்று நினைத்து பரீட்சை எழுதினால் முதலிடம் நமக்கே!'' என்கிறார்.

அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் தேவையா ?

அப்புறம் என்ன? டென்ஷனுக்கு டாட்டா சொல்லுங்க. ஆல் தி பெஸ்ட் நண்பர்களே!