Published:Updated:

ஐ யம் அனகோண்டா !

ஐ யம் அனகோண்டா !

ஐ யம் அனகோண்டா !

ஐ யம் அனகோண்டா !

Published:Updated:
##~##

'அனகோண்டா’ சினிமா வந்த புதிதில் அதைப் பார்த்துவிட்டு இரவு நேரங்களில் 'ஐயோ அனகோண்டா’ என்று தூக்கத்தில் அலறி இருப்போம். இப்போது நிஜமாகவே சென்னை முதலைப் பண்ணைக்கு அனகோண்டா பாம்புகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டதும் தைரியத்துடன் கிளம்பினோம்.

அங்கே கண்ணாடி பதிக்கப்பட்ட அறைக்குள், பாதி அளவு தண்ணீர் நிரம்பி இருந்தது. அதற்குள் மரத்துண்டுகளைச் சுற்றியபடி 7 அடி நீளத்துக்கு அனகோண்டாக்கள் இரண்டு இருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வைத்த கண் வாங்காமல் பார்த்த எங்களை நெருங்கினார் அந்த மையத்தின் இயக்குனர் கோலின் ஜேம்ஸ் ஸ்டீவென்ஸன் (Colin James Stevenson) என்பவர். ''அனகோண்டாவில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று பச்சை அனகோண்டா, மற்றொன்று மஞ்சள் அனகோண்டா. இங்கே நீங்கள் பார்ப்பது பச்சை அனகோண்டாக்கள். மூன்று மஞ்சள் அனகோண்டாக்கள் எங்களிடம் உள்ளன. அவற்றை இன்னும் காட்சிக்கு வைக்கவில்லை. இந்த ஐந்துமே குட்டிகளாக 2011 அக்டோபரில் இங்கே கொண்டுவந்தோம். அவை இந்த ஊரின் சூழலில் வாழக்கூடியவை அல்ல. அதனால், மிகப் பத்திரமாக வளர்த்தோம். பச்சை அனகோண்டாக்களை மட்டும் ஜனவரி முதல் காட்சிக்கு வைத்து இருக்கிறோம்'' என்றார்.

ஐ யம் அனகோண்டா !

தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில்தான் அனகோண்டாக்கள் இருக்கின்றன. இவை, 25 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் பராமரிக்கப்பட வேண்டும். அதனால், இந்த அனகோண்டாக்கள் தங்கும்  அறைக்கு அனைத்து வசதிகளையும் செய்து இருக்கிறார்கள்.

ஐ யம் அனகோண்டா !

''சினிமாக்களில் பார்ப்பதுபோல் நிஜ அனகோண்டாக்கள் மனிதர்களை விழுங்கிவிடும் என்று

ஐ யம் அனகோண்டா !

பயப்படாதீர்கள். பொதுவாகவே பாம்புகளுக்கு மனிதர்களைக் கண்டால் பயம். அதனால், அவை நம் மீது தாக்குதல் நடத்துகிறது. இது, அவற்றின் தற்காப்பு நடவடிக்கையே. இவை குதிரை, கோழி, மீன், நரி, எலி போன்றவற்றை உண்ணும். மலைபாம்பு போலவே இரையை விழுங்கி, வளைத்து... நொறுக்கி விழுங்கும். அனகோண்டாக்களுக்கு விஷம் கிடையாது. இவை தண்ணீரில் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும். சதுப்பு நிலக் காடுகள், மெதுவாக ஓடும் நீரோடைகள் போன்ற பகுதிகளில் வசிக்கும். 12 வயது வரை வாழும். தோலுக்காக மனிதர்கள் இவற்றைக் கொல்கிறார்கள்'' என்றார் கோலின்.

அடுத்து நம்மிடம் பேசியவர், ஆரண்யா. இவர் முதலைப் பண்ணையில் தன்னார்வளராகப் பணியாற்றுகிறார். ''இந்தக் குட்டிகள் இங்கே வந்த புதிதில் எங்கள் பணியாளர்களைக் கடித்துவைத்தது. நானும் கடிபட்டு இருக்கிறேன். இவை, 23 அடி நீளம் வரை வளரும். விரியன் பாம்புகள் போல் குட்டி போடும். குட்டி போட்டதுமே அம்மா பாம்பு, தன் வழியில் போய்விடும். குட்டிகள் தாங்களேதான் வளர வேண்டும்'’ என்று விவரங்களை அடுக்கினார்.

அனகோண்டாக்கள் வருகையால் முதலைப் பண்ணைக்கு  கூட்டமும் அதிகரித்து உள்ளதாம். விரைவில் மஞ்சள் அனகோண்டாக்களும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

அப்பாடா... இனி நம் கனவில் அனகோண்டாக்கள் பயமுறுத்தாது. அதுதான் நிஜ அனகோண்டாவையே பார்த்துட்டோம்ல!

ஐ யம் அனகோண்டா !

 சென்னை முதலைப் பண்ணை 1976-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 36 ஆண்டுகளுக்கும் மேலாக இது வடநெம்மேலியில் இயங்கி வருகிறது. இதைத் தொடங்கியவர் ரோமுலஸ் விட்டேகர். இவருக்குத் தற்போது வயது 80. உலக அளவில் மொத்தம் 23 வகை முதலைகளே உள்ளன. சென்னை முதலைப் பண்ணையில் 18 வகை முதலைகள் உள்ளன. அதிகபட்சமாக 33 அடி நீளம் வரை முதலைகள் வளரும்  இறந்துபோன மீன்கள், விலங்குகள் போன்றவற்றை உண்பதால், சுற்றுசூழல் பாதுகாக்கப்படுகிறது.