Published:Updated:

சுட்டி நியூஸ்

சுட்டி நியூஸ்

சுட்டி நியூஸ்

சுட்டி நியூஸ்

Published:Updated:
சுட்டி நியூஸ்

நம்பர் வண்ணத்துப்பூச்சி!

மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் காணப்படும் ஒரு வகை வண்ணத்துப்பூச்சி டையாத்ரியா அன்னா (நீஸ்எனச் செல்லமாகச் சொல்வார்கள். இந்த வண்ணத்துப்பூச்சியின் இரண்டு இறகுகளின் அடிப் பாகத்தில் 88 என்ற எண் தெளிவாகத் தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுட்டி நியூஸ்

ஆடை அணியும்போது...

அன்று நான் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் சீருடையைக் கழற்றிவிட்டு, அலமாரியில் இருந்த வண்ண உடையை எடுத்தேன். அப்போது ஒரு கொசு அறை வாசல் கதவின் மீது அமர்ந்தது. அதை அடிப்பதற்காக வண்ண ஆடையை விசிறினேன். கொசு பறந்துவிட்டது. அதே நேரம் ஓர் அதிர்ச்சி. ஆடைக்குள் இருந்து ஒரு வண்டு கீழே விழுந்தது. நான் ஆடையை அப்படியே அணிந்து இருந்தால், வண்டு கடித்து இருக்கும். கொசுவின் வருகையால் தப்பித்தேன். துவைத்து மடித்துவைத்த ஆடையாக இருந்தாலும் அதை அணியும் முன்பு நன்கு உதறிவிட்டு அணிய வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் மூலம் கற்றுகொண்டேன். நீங்களும் இதைப் பின்பெற்றுங்கள் நண்பர்களே.

சுட்டி நியூஸ்

சுற்றுலா தந்த பயன்!

சுற்றுலா என்பது நம் மனதுக்கு சந்தோஷம் தருவதுடன் பல்வேறு நன்மைகளையும்  உருவாக்குகிறது. 1861-ல் சீனாவுக்கு பெர்ரி ஆர்மன் டேவிட் எனும் பாதிரியார் சுற்றுலா சென்றார். அங்கே பீஜிங் அரண்மனைப் பூங்காவில் இருந்த மான் இனம் ஒன்றைக் கண்டார். சிலவற்றைப் பாரீஸுக்கு அனுப்பினார். 1900-ல் பீஜிங் அரண்மனைப் பூங்கா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது அந்த மான் இனமும் அழிந்துவிட்டது. அப்போது பாரிஸில் இருந்து அந்த மான் இனத்திற்கு பெர்ரி டேவிட் எனப் பெயரிடப்பட்டது. 1954-ல் நான்கு மான்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்டன.

சுட்டி நியூஸ்

காந்தியும் சர்ச்சிலும்!

மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 'வெள்ளையனே வெளியேறு’ என்று முழக்கமிட்ட நேரத்தில் நடந்த நிகழ்ச்சி.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இது பற்றிய பேச்சு வந்தது. போராட்டத்தை எந்த வகையில் அடக்கலாம் என்று கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது சர்ச்சில் எழுந்து ''காந்தி துப்பாக்கி ஏந்திப் போரிட்டால், நான் பீரங்கியால் நசுக்கி இருப்பேன். பீரங்கிகொண்டு போராடினால், விமானம்கொண்டு அழித்து இருப்பேன். அவரோ, ஆயுதங்களைப் புறக்கணித்து அகிம்சை, சத்தியம் எனப் போராடுகிறார். இவற்றை மழுங்கவைக்கும் ஆயுதம் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. அதனால், அவரிடம் பணிந்து போகவேண்டியதாக உள்ளது!'' என்றார்.

எதற்குமே பயப்படாத சர்ச்சில் இப்படிப் பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை.

சுட்டி நியூஸ்

தங்க சுத்திகரிப்பு ஆலை!

உலகிலேயே மிகப் பெரிய தங்க சுத்திகரிப்புத் தொழிற்சாலை தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகில் உள்ளது. 'தி ராண்ட் ரிஃபைனரி’ என்ற இந்தத் தொழிற்சாலையில் உள்ள எல்லா இயந்திரங்களையும், உலைகளையும் அடிக்கடி சுத்தம் செய்கிறார்கள். கடுகு அளவு தங்கம்கூட வீணாகாத வகையில் தொழிற்சாலை முழுவதும் பாதுகாப்பு வசதிகள் உள்ளன. தினமும் 35 கோடி ரூபாய் மதிப்புமிக்க தங்கப் பாளங்கள் இங்கே வருகின்றன. ''தங்கத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரை இதுவும் உலோகம். அவ்வளவுதான்'' என்கிறார்கள் இங்கே உள்ள தொழிலாளர்கள். இது வாங்கறவங்களுக்குப் புரியலையே!

சுட்டி நியூஸ்

இரவுச் சூரியன்!

பூமியின் சுழற்சியால் ஒரு பக்கம் இரவாகவும், மறுபக்கம் பகலாகவும் உள்ளது. இது மாற்ற முடியாதது. ஆனால், ஒரு பக்கம் பகலாக இருக்கும் நேரத்தில் அங்கே வீசுகின்ற சூரிய ஒளியினைச் செயற்கைக்கோள் மூலம் பெற்று, இரவாக இருக்கின்ற பகுதிக்கு வெளிச்சம் தரலாம் என்கிறார்கள் ரஷ்ய விஞ்ஞானிகள்.

இதற்காக 'ஒளி பிரதிபலிப்புக் கோள்’ ஒன்றை உருவாக்கி உள்ளார்கள். 200 கிலோ எடை உள்ள இந்தச் செயற்கைக்கோள், சூரிய ஒளியை ஒரு பகுதியில் இருந்து பிரதிபலித்து மறுபகுதிக்கு அனுப்பும். அதன் ஒளிவெள்ளம் முழு நிலவு நாளில் இருப்பதுபோன்று ஏழு மடங்கு வெளிச்சமாக இருக்குமாம். இரவு நேரத்தில்  பூகம்பம் போன்ற சமயங்களில் மீட்புப் பணிகளைச் செய்வதற்கு இந்தச் சூரிய ஒளி பிரதிபலிப்பு வெளிச்சத்தைப் பயன்படுத் தலாம்.

சுட்டி நியூஸ்