Published:Updated:

நெட்டிஸம் - வானியல் அறிவோம் வாருங்கள் !

சைபர்சிம்மன்

நெட்டிஸம் - வானியல் அறிவோம் வாருங்கள் !

சைபர்சிம்மன்

Published:Updated:
##~##

உங்களால் இப்போதே குட்டி வானியல் நிபுணர் ஆக முடியும். அதாவது, சூரியக் குடும்பம் பற்றியும், விண்ணில் தோன்றும் நட்சத்திரங்கள் பற்றியும், அவற்றின் இருப்பிடமான யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்சம் பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

ஆம்... உங்களுக்காகவே உருவாக்கப்பட்டு உள்ளது, கிட்ஸ் அஸ்ட்ரானமி டாட் காம் எனும் வலைத்தளம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எளிமையான ஆங்கிலத்தில் வானியலின் அடிப்படையான விஷயங்களை சுவாரசியமாக விளக்குகிறது இந்தத் தளம். இதில், பூமியின் இருப்பிடமான சூரியக் குடும்பம், பிரபஞ்ச வெளி, விண்வெளிப் பார்வை என்று ஒவ்வொரு தலைப்பாகப் படித்துப் பயன்பெறலாம்.

எந்தத் தலைப்பில் உள்ள கட்டுரையுமே போரடிக்காது. தெரியாத விஷயம் என்று மிரளவைக்காது. மாறாக, சுவாரசியமான புதிய  தகவல்களைத் தெரிந்துகொள்ள,  ஆர்வத்தை ஏற்படுத்தும்.

உதாரணத்துக்கு, சூரியக் குடும்பத்தையே எடுத்துக்கொள்வோம். சூரியக் குடும்பத்தில் சூரியன் மையமாக இருப்பதும், நமது பூமி உள்ளிட்ட கோள்கள் அதனைச் சுற்றி வருவதும் பலருக்கும் தெரியும். பாடப் புத்தகத்திலும், ஸ்கூல் சார்ட்களிலும் கோள்கள் சூரியனைச் சுற்றிவரும் படங்களையும் பார்த்திருப்போம். ஆனால், சூரியனையும் பூமியையும் பற்றி இதுவரை அறிந்திடாத தகவல்களை இங்கே அறிய முடியும். சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள் இருந்தாலும், சூரியன்தான் அவை எல்லாவற்றையும்விடப் பெரியது. எவ்வளவு பெரியது தெரியுமா?

நெட்டிஸம் - வானியல் அறிவோம் வாருங்கள் !
நெட்டிஸம் - வானியல் அறிவோம் வாருங்கள் !

சூரியக் குடும்பத்தின் 98 சதவிகிதப் பருப்பொருள் சூரியனுடையது. மற்ற கோள்கள் 2 சதவிகிதம்தான். இன்னொரு விதமாகச் சொல்லவேண்டும் என்றால், நம் பூமியை சூரியனில் வைத்தால், அதைவிட சூரியன் கோடிக் கணக்கான மடங்கு பெரிதாக இருக்குமாம். சூரியன் இப்படி மிகப் பெரிதாகவும், எடை அதிகம் கொண்டதாகவும் இருப்பதால்தான், மற்ற கோள்கள் எல்லாம் அதனைச் சுற்றிக்கொண்டு இருக்கின்றன.

நமது பூமியும் சாதாரணமானது அல்ல. சூரியக் குடும்பத்தின் உள் வட்டத்தில் இருக்கும் கோள்களில் பூமிதான் பெரியது. இதேபோல் வீனஸ் கோள் எரிமலைகளால் நிரம்பி இருக்கிறது.

பூமியும், வீனஸும் ஒரே அளவு கொண்டவை. வீனஸுக்கும் காற்று மண்டலம் உண்டு. எனினும், அது ஊடுருவிப் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் அடர்த்தியானது. கோள்களில் வீனஸ் கொஞ்சம் சோம்பேறியானது. அது தன்னைத் தானே மிகவும் மெதுவாகச் சுற்றி வருவதால், அங்கே ஒரு நாள் என்பது பூமிக் கணக்கின்படி 100 நாட்கள். அதோடு, மற்ற கோள்களுக்கு நேர் எதிர் திசையில் வீனஸ் சுற்றி வருவதால், அங்கே சூரியன் மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும்.

இப்படி எண்ணற்ற சுவையான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். கோள்கள் பற்றி மட்டும் அல்லாமல், கோள்களைத் தாண்டி 'டீப் ஸ்பேஸ்’ எனப்படும் வானவெளி பற்றியும் படிக்கலாம். வானியல் ஆய்விலும் ஈடுபடலாம்.

நெட்டிஸம் - வானியல் அறிவோம் வாருங்கள் !

இதைவிட சுவாரசியம், சூரியக் குடும்பம் பற்றிய தகவல்கள் அழகான அனிமேஷனாக இடம்பெற்று இருப்பதுதான். அதாவது, சூரியக் குடும்பம் சுழன்றுகொண்டு இருப்பதை பார்த்து ரசித்து, அதில் உள்ள கோள்களை கிளிக் செய்து தகவல்களை படித்துப் பார்க்கலாம். அது மட்டுமா? சூரியக் குடும்பத்தை நீங்களே உருவாக்கியும் மகிழலாம். அதற்கான அனிமேஷன் வசதியும் இருக்கிறது.

இதேபோல், தினமும் இன்றைய வானம் எப்படி இருக்கும் என்ற தகவலும் தரப்படுகிறது. அதைப் பார்த்துவிட்டு இரவில் வானியல் ஆய்வில் ஈடுபடலாம். தொலைநோக்கியைப் பயன்படுத்தும் குறிப்புகளும், வானியல் சார்ந்த விளையாட்டுகளும் இருக்கின்றன. வானியல் அகராதியும் உள்ளது.

எதிர்காலத்தில் வானியல் ஆய்வில் ஈடுபட விரும்பினால், இந்தத் தளத்தில் இருந்து இப்போதே துவங்குங்கள்.

வலைத்தள முகவரி:http://www.kidsastronomy.com