Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

Published:Updated:
பென் டிரைவ் !

சுற்றிலும் பச்சைப்பசேல் எனவும் நடுவில் மட்டும் ரோஜா நிற வண்ணத்தைக் கொட்டியதுபோல் இருக்கிறதே என்ன இது? மேற்கு ஆஸ்திரேலியாவின் மிடில் ஐலாண்டில் உள்ள ரோஸ் ஏரிதான் இது. 600 மீட்டர் நீளம்கொண்ட இந்த ஏரி, எப்படி இந்த வண்ணத்தில் உள்ளது என்று விஞ்ஞானிகள் மண்டையை குடைந்து யோசித்தார்கள். சமீபத்தில்தான் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தார்கள். இந்த நீரில் குறைந்த ஊட்டச்சத்துகொண்ட பாக்டீரியா உள்ளதாம் அவற்றால்தான் இந்த வண்ணம். ஏரிக்கு இப்படி ஓர் அழகைத் தந்த பாக்டீரியாவுக்கு ஒரு 'ஓ’ போடலாமே!

பென் டிரைவ் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊனம் என்பது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து, உலக சாதனை படைத்து இருக்கிறார், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் உள்ள எச்.என்.யு.பி.ஆர் மெட்ரிக் மேநிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் நவநீதகிருஷ்ணன். இவருக்கு ஒரு கை செயல்படாது. இந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நடந்த உலக சாதனைக்கான நிகழ்ச்சியில், தன் ஒற்றைக் கரத்தால் தொடர்ந்து 10 மணிநேரம் சிலம்பம் சுழற்றிச் சாதனை படைத்தார். முயற்சி, பயிற்சி, தன்னம்பிக்கை இருந்தால், எதுவும் சாத்தியம் என்று கூறும் நவநீதகிருஷ்ணன், மாவட்ட, மண்டல, மாநில அளவிலான நடத்தப்பட்ட சிலம்பம் போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் வென்று இருக்கிறார்.

பென் டிரைவ் !

விடாமுயற்சியால் பள்ளி இறுதி ஆண்டில் தேர்ச்சி பெற்று இருக்கிறார் 106 வயது மாணவர் ஒருவர். அமெரிக்காவின் பெவர்லி நகரில் 1906-ல் பிறந்த இந்த முதியவரின் பெயர், பிரெட் பட்லர். சிறுவயதிலேயே  தந்தை இறந்துவிடவே, எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்டார். குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் சென்றார். பிறகு, ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். திருமணம் ஆனதும் தன் பிள்ளைகளைத்தான் படித்த பெவர்லி பள்ளியிலேயே படிக்கவைத்தார். பேரன், கொள்ளுப் பேரன்களுக்குத் தாத்தா ஆன பிறகும் தன்னால் படிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் மட்டும் அவரை விட்டு விலகவில்லை. தற்போது விடுதி ஒன்றில் தங்கி இருக்கும் பிரெட் பட்லர், அங்கே இருந்தபடியே பெவர்லி பள்ளியில் இறுதி ஆண்டுத் தேர்வை எழுதித் தேர்ச்சியும் பெற்றார். சமீபத்தில் பெவர்லி பள்ளியில் நடைபெற்ற சான்றிதழ் பெறும் விழாவில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்து சான்றிதழைப் பெற்றபோது, அவரது குடும்பதாரும் 18 வயதுகூட நிரம்பாத வகுப்புத் தோழர்களும் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தனர்.

பென் டிரைவ் !

விஞ்ஞானிகள் இயற்கைக்கு சவால்விடும் வகையில் தங்களது கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய வண்ணம் இருக்கின்றனர். முதலில் செயற்கை இதயம், செயற்கைக் கால், கைகள் எனக் கண்டுபிடித்து உள்ளனர். விஞ்ஞானிகள், இப்போது முழு மனிதனையும் செயற்கையாகவே உருவாக்கி உள்ளனர். ரத்த நாளங்கள், சிறுநீரகங்கள், நுரையீரல், கண்கள் என மனித உடலில் இருக்கும் பாகங்களைச் செயற்கையாகத் தயாரித்து, ஒரு முழு மனிதனை உருவாக்கி, அதற்கு ரெக்ஸ் என்ற பெயரும் சூட்டி இருக்கிறார்கள். 6.5 அடி உயரத்தில் பழுப்பு நிறக் கண்களுடன் லண்டன் அருகாட்சியகத்தில் ரெக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. சிப் உதவியுடன் மனித மூளையின் செயல்பாடுகளைப் போலவே ரெக்ஸின் மூளையும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஐந்தரை கோடி ரூபாய் செலவில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உள்பட உலகின் முன்ணனிக் கல்வி மற்றும் ரோபாட்டிக் நிறுவனங்கள் இணைந்து, இந்த முதல் செயற்கை மனிதனை உருவாக்கி இருக்கிறார்கள்.