தொடர்கள்
Published:Updated:

சுட்டி நியூஸ் !

சுட்டி நியூஸ் !

கடவுளுக்குத் துணை!

##~##

ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்காவில் அடிமை நிலையை அகற்றத் தாம் போராடப்போவதாகவும், அந்த நிலையை நிச்சயம் அகற்றிவிடுவதாகவும் முழங்கினார்.

அப்போது ஒரு பாதிரியார் அவரிடம், ''உம்முடைய பெரிய இயக்கத்துக்கு கடவுள் நிச்சயம் துணை இருப்பார்'' என்றார். அதற்கு லிங்கன், ''கடவுள் எப்போதும் நியாயத்தின் பக்கம் துணையாக இருப்பார். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என் கவலை என்னவென்றால், நானும் இந்த நாட்டு மக்களும் கடவுளுக்குத் துணையாக இருக்க வேண்டுமே என்பதே'' என்றார்.

சுட்டி நியூஸ் !

கீதைக் கோயில்!

சுட்டி நியூஸ் !

மகாராஷ்டிரா மாநிலத்தின் வார்தா என்னும் நகரத்துக்கு அருகே ஒரு கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் சிறப்பு... இங்கே சிலையோ, கூரையோ எதுவும் இல்லை. அந்தக் கோயிலை, கீதைக் கோயில் என்றே சொல்கிறார்கள். அந்தக் கோயிலில் 700 பளிங்குக் கற்களில், பகவத் கீதையின் 18 அத்தியாயங்களில் உள்ள சுலோகங்களை மராத்திய மொழியில் பொறித்து வைத்துள்ளார்கள்.

 தார் ஏரி!

சுட்டி நியூஸ் !

மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான டிரினிடாட் என்ற தீவில் இருக்கும் 'பிட்ச் லேக்’ என்ற ஏரி மிகவும் வித்தியாசமானது. எல்லா ஏரிகளிலும் நீர்தான் இருக்கும். ஆனால் இந்த ஏரியிலோ, நிரம்பி ஓடுவது சாலை போடப் பயன்படும் தார். இந்தத் தார் அனைத்தையும் எடுத்தாலும் மீண்டும் மூன்று நாட்களில் நிரம்பிவிடுகிறது. வருடத்தில் பல கோடி டாலர்களை அரசாங்கத்துக்குப் பெற்றுத் தருகிறது இந்த ஏரி.

 சொர்க்கத்தின் படிக்கட்டுகள்!

சீனாவில் ஹெனான் மாகாணத்தின் லிஸ்ஹூ (லிவீக்ஷ்லீஷீஷீ) நகரின் தாய்ஹாங் (ஜிணீவீலீணீஸீரீ) என்ற மலை அடிவாரத்தில், 'சொர்க்கத்தின் படிக்கட்டுகள்’ என்ற செல்லப் பெயருடன் ஓர் இடம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது .

சுட்டி நியூஸ் !

தரையில் இருந்து 300 அடி உயரத்தில் உள்ள மேல் பகுதிக்குச் செல்வதற்கு சுழற் படிகள் உள்ளன. இந்தப் படிகளைப் பார்த்தாலே தலைசுற்றும். எனினும், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகிறார்கள். படிக்கட்டுப் பயணத்தின்போது வீசும் காற்று, பறவைகள் பறப்பது ஆகியவை நமக்கு சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும். பாதுகாப்புக் காரணங்களுக்காக இதய நோய் மற்றும் நுரையீரல் பிரச்னை இல்லாத, 60 வயதிற்கு உட்பட்டவர்களை மட்டுமே இங்கே அனுமதிக்கிறார்கள்.

 மாறும் மாஸ்கோ!

நம் ஊரில் ஓர் அரசு அலுவலகத்தை இடம் மாற்றினாலே, பிரச்னை வருகிறது. ரஷ்யாவிலோ தலைநகரையே மாற்றப்போகிறார்களாம். 1918-ல் ரஷ்யாவின் தலைநகராக இருந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை மாற்றி, மாஸ்கோவில் புதிய தலைநகரை அமைத்தார் லெனின். இப்போது மாஸ்கோ உலகின் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

சுட்டி நியூஸ் !

அதனால், சைபீரியாவைத் தலைநகராக மாற்றும் யோசனையில் இருக்கிறார்கள். முழுமையாக மாற்றாவிட்டாலும் முக்கியத் துறைகளின் அலுவலகத்தையாவது சைபீரியாவுக்கு மாற்ற வேண்டும் என்கிறார்கள். இதற்கிடையே, அரசியல் மற்றும் ராணுவத் தலைநகராக மாஸ்கோவும், கலாசாரத் தலைநகராக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கும் மற்றவைக்கு சைபீரியாவும் இருக்கலாம் என்று ரஷ்ய மக்கள் விரும்புகின்றனர். ரஷ்ய அதிபர் புதின், இந்த வருட இறுதிக்குள் இது குறித்து முடிவு எடுப்பார்.

 இத்தனை பெயர்களா?

அடிசில், அமலை, அயினி, உண்டி, உணா, ஊண், கூழ், சொன்றி, துற்றி, பதம், பாளிதம், புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல்... இவை எல்லாம் என்ன?

ரொம்ப யோசிக்காதீங்க நண்பர்களே... நாம் தினமும் சாப்பிடும் 'சோறு’க்கான தமிழ்ப் பெயர்கள்தான் இவை.

சுட்டி நியூஸ் !

ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்களைச் 'சொல்லாட்சி’ என்பர். இத்தகைய சொல்லாட்சிச் சிறப்பு கொண்ட முதல் மொழி, நம் தமிழ் மொழிதான்.