தொடர்கள்
Published:Updated:

இலைகளில் சிலை வடிக்கும் அரசி !

என்.மல்லிகார்ஜுனா

##~##

முதலில் சிற்பங்களைக் கல்லில் செதுக்க ஆரம்பித்தனர். பிறகு உலோகங்களிலும் மரத்திலும் செதுக்கினர். சிலர் சாக்பீஸ், பழங்கள் என எல்லாவற்றிலும் தங்கள் திறமையைச் செதுக்கிப் பாராட்டுகளைப் பெற்றனர்.

இப்போது, இலைகளையும் செதுக்க ஆரம்பித்துவிட்டனர். சீனாவைச் சேர்ந்த டூ வன்லி (Du Wanli) என்ற பெண் கலைஞர், பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, விளையாட்டுச் சின்னங்களை இலைகளில் செதுக்கி அசத்தினார். கிழக்கு சீனாவில் உள்ள ஷன்டாங் மாகாணத்தைச் சேர்ந்த இவர், கூர்மையான பிளேடுகொண்டு இலைகளைச் செதுக்கி, ஐந்து விளையாட்டுச் சின்னங்களை இரண்டு மாதங்களில் உருவாக்கினார்.

இதன் தொடர்ச்சியாக, சீனாவின் எருது வருடத்தை முன்னிட்டு, இலையில் எருதையும் செதுக்கி அசத்தி உள்ளார்.

இலைகளில் சிலை வடிக்கும் அரசி !

'இலைகளைச் சிலைகளாக வடிப்பது மிக நுணுக்கமான கலை. அதற்குப் பொறுமை மிக மிக அவசியம்.’ என்கிறார்.

அம்மாடி... இந்த அம்மாவுக்குத்தான் எவ்வளவு பொறுமை!  

இலைகளில் சிலை வடிக்கும் அரசி !