தொடர்கள்
Published:Updated:

ஏன் இப்படி ?

பாலாஜி சம்பத் படங்கள் :ஆ.முத்துக்குமார் மாடல்: அ.ஹரிணி

 அறிவியல் விந்தைகள்...

##~##

'நாம் நம்புகின்ற எல்லா விஷயங்களும் உண்மை ஆகாது. அவை அறிவியலால் நிரூபிக்கப்பட்டு இருந்தால் நம்பலாம்’ என்கிறார்ஓர் அறிஞர். எனவே, நம்மைச்சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதும் அவை பற்றித் தீர விசாரித்து அறிவதும் உண்மை அறியும் வழிகள். ஒவ்வொரு பொருளும் கண்டுபிடிப்பே. இப்போது ஒரு கண்டுபிடிப்பின் உண்மையைப் பரிசோதனை மூலம் அறிவோம்.

தேவை: நீளமான ஒரு ஸ்ட்ரா மற்றும் கத்தரி.

செய்முறை: ஸ்ட்ராவின் ஒரு முனையை, வாயில்வைத்து ஊதுவதற்கு ஏற்ற வகையில் விரல்களால் அழுத்தித் தட்டையாக்கவும். நுனிப் பகுதியை ஸ் வடிவமாகக் கத்தரிக்கோலால் (இரண்டு வெட்டுகள்) வெட்டிக்கொள்ளவும். அதை வாயில்வைத்து, பீப்பி ஊதுவதுபோல் ஊதவும். வாயில் இருந்து ஓர் அழுத்தத்துடன் வெளிப்படும் காற்று, நீளமான குழாய் வழியாக வெளிப்படும்போது, ஆண் குரலைப் போன்ற கட்டையான குரலோசை கேட்கும். அடுத்து, அந்த ஸ்ட்ராவின் நீளத்தைக் கத்தரியால் வெட்டிவிட்டு, முன்புபோலவே ஊதினால், முதலில் தடதடத்த ஓசை, இப்போது கெட்டியாகக் கேட்கும். மறுபடி மறுபடி குறைத்துக்கொண்டே வந்தால், எஞ்சிய சிறு குழாயின் ஓசை, மிகவும் மெல்லியதாகி, பெண் குரல் போல் ஒலிக்கும்.

ஏன் இப்படி ?

நாதசுரம், புல்லாங்குழல் ஓசைகள் இப்படித்தான் வேறுபடும். காரணம், காற்றின் அலை நீளம் அதிகமாக இருந்தால், அதிர்வெண்கள் குறைவாக இருக்கும். அலைநீளம் குறைவாக இருந்தால், அதிர்வெண்கள் அதிகமாக இருக்கும். காற்று அதிர்வடைவதால் சத்தம் உருவாகிறது.

இதன் மூலம், 1888-ல் லெச்சர் (Lecher) என்னும் இயற்பியல் விஞ்ஞானி, ரேடியோஅலை வரிசையைக் கண்டு பிடித்தார்.

ஏன் இப்படி ?