இஷா நாகப்பன், 13-வது வயதிலேயே நாவலாசிரியை அவதாரம் எடுத்துள்ள சென்னை டீன் சுட்டி.

அலிஷா - தி பிகினிங் (Alisha – The Beginning) என்ற அவரது ஆங்கில நாவலை, பிரபல பெண் எழுத்தாளர் ஷோபா டே வெளியிட்டார்.

இஷா, சென்னை-அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். ''எனக்கு வீட்டில் முழு சுதந்திரம் உண்டு. அதைப் பொறுப்புடன் பயன்படுத்துவேன். ஒருநாள், ஆன்லைனில் அடோரா ஸ்விதக் (Adora Svitak) என்ற எட்டு வயது சிறுமியின் பேச்சைக் கேட்டேன். அந்தச் சிறுமி தன் முதல் புத்தகத்தை வெளியிட்டு, உலக அளவில் கவனத்தை ஈர்த்தவள். அந்தக் கணமே நானும் ஓர் எழுத்தாளர் ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன்.

என் முடிவை அம்மாவிடம் சொன்னதும், அவர் ஊக்கம் கொடுத்தார். 'நீ எழுதும் நாவல் நன்றாக இருந்தால், அதைப் புத்தகமாக வெளியிட முயற்சி செய்யலாம்’ என்று சொன்னார். மூன்றே மாதங்களில் நாவலை எழுதிமுடித்தேன். கொல்கத்தாவைச் சேர்ந்த 'பவர் பப்ளிஷர்ஸ்’ நிறுவனம் நாவலை வெளியிட முன்வந்தது. என் முதல் கனவு நிறைவேறியது'' என்றார் பெருமிதத்துடன்.

அலிஷா என்ன கதை?

''இந்த நாவலில் அலிஷா என்ற சாதாரண டீன் ஏஜ் சுட்டியின் அற்புதமான உலகத்தைச் சொல்லி இருக்கிறேன். இந்த வயது சுட்டிகளுக்கே உரிய மகிழ்ச்சி, துக்கம், பிரச்னைகள், பாராட்டுகள் என எல்லாமும் இருக்கின்றன. அதோடு, பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளன. என் நாவலைப் படித்த எழுத்தாளர் ஷோபா டே, 'முதல் பக்கமே உன் எழுத்தின் வல்லமையைக் காட்டுகிறது’ என்று சொன்னபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதோ... அலிஷா நாவலின் அடுத்த பாகத்தை எழுதத் தொடங்கிவிட்டேன்'' என்று கண்சிமிட்டுகிறார் சுட்டி நாவலாசிரியை இஷா.