Published:Updated:

சுட்டி தியேட்டர் - கலாட்டா குடும்பம் !

யுவா பா.கார்த்திக்

பிரீமியம் ஸ்டோரி
##~##

நமது விடுமுறைக் கொண்டாட்டத்தில் சினிமாவுக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில், சமீபத்தில் வெளியான THE CROODS அனிமேஷன் 3D படத்தை விமர்சிக்கிறார்கள் சுட்டிகள்...

அக்ஷய் ராமானுஜன்: கற்காலத்தில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதைதான், 'தி க்ரூட்ஸ்.’ ஒரு சின்னக் குழந்தையை வெளியே கூட்டிட்டுப் போகும்போது கவனிச்சு இருக்கீங்களா? பஸ், பில்டிங், மரம்,  ஹார்ன் சத்தம்னு எல்லாத்தையும் ஆச்சர்யமாகப் பார்க்கும். காரணம், அந்தக் குழந்தைக்கு அது எல்லாமே புதுசு. அப்படித்தான் நியாண்டர்தால் மனிதர்கள் எனப்படும் ஒரு குகை மனிதக் குடும்பம், தங்கள் இடத்தில் இருந்து இன்னொரு புதிய இடத்துக்குப் போகும்போது சந்திக்கும் வியப்புகளைச் சொல்லியிருக்காங்க.

விசாலாட்சி: அவங்களுக்கு நெருப்புன்னாலே என்னன்னு தெரியாது. அந்தக் குடும்பத்தின் தலைவர் க்ரக், பொறுப்பும் பாசமும் நிறைஞ்சவர். சூரியன் மறைஞ்சதும் குடும்பத்துடன் குகைக்குள்ளே பதுங்கிக்கிறவர். பகலில்கூட அந்தச் சுற்றுப்புறத்தைத் தாண்டி எங்கேயும் போகக்கூடாதுனு சொல்வார். ஆனால் அவர் மகள் ஈப், புதுப் புது இடங்கள், விஷயங்களைத் தெரிஞ்சுக்க நினைக்கிறவள். இதனால், அப்பாவுக்கும் மகளுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுது.

சுட்டி தியேட்டர் - கலாட்டா குடும்பம் !

சுஷ்மிதா: இந்த நிலையில், கெய் என்ற இளைஞனை ஈப் சந்திக்கிறாள். அவன் நெருப்பை உண்டாக்குகிறான். சங்கை ஊதி, இசையை வர வைக்கிறான். 'உலகம் ரொம்பப் பெரிசு. இந்த மலைப் பகுதியைத் தாண்டியும் நிறைய இடங்கள் இருக்கு’னு சொல்றான். அப்போ அங்கே வரும் க்ரக், அவனைத் துரத்திவிடுறார். அடுத்த நாளே அங்கே பூகம்பம் ஏற்படுது. அந்த இடத்தில் இருந்து தப்பிக்கும் க்ரக் குடும்பத்துக்கு கெய் உதவி செய்றான். அவங்க பாதுகாப்போடு வேற இடத்துக்குப் போறதுதான் மிச்சக் கதை.

பிரசன்னா: முதல் முறையா நெருப்பில் சுட்ட உணவைச் சாப்பிடுறது, மீனை செருப்பாகவும், பாம்பை பெல்ட்டாகவும் யூஸ் பண்றது, ஒரு பெரிய கல்லில் சுண்ணாம்பைப் பூசி, அதில் தங்களோட முகத்தைப் பதிச்சு எடுக்கிற குரூப் போட்டோனு வித்தியாசமான கற்பனைகள் படம் முழுக்க வருது. கற்காலத்தில் இருந்த பயங்கரமான விலங்குகளைக்கூட காமெடி பீஸ்களாக மாற்றி, சிரிக்கவைக்கிறாங்க. அதிலும் கெய் கூடவே இருக்கிற விலங்கான 'ஸ்லாத்’ செய்யும் அட்டகாசம் தாங்க முடியலை.

சுட்டி தியேட்டர் - கலாட்டா குடும்பம் !

விஜய் விக்னேஷ்: ட்ரீம்ஸ் வொர்க் நிறுவனம் தயாரிச்சு இருக்கிற இந்தப் படத்தின் டைரக்டர்கள் கிர்க் டெமிக்கோ மற்றும் கிறிஸ் சாண்டர்ஸ். 'தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’ ஹீரோயின் எம்மா ஸ்டோன், ஈப் கேரக்டருக்கு குரல்கொடுத்து இருக்காங்க.

ஜிஜேஷ்: கற்காலத்துக் கதை என்றதும் சீரியஸா யோசிக்காமல், கற்பனையிலும் லாஜிக் சேர்த்து ஜாலியாக் கொடுக்க முடியும்னு நிரூபிச்சு இருக்காங்க. அதுக்காக சூப்பரா ஒரு சபாஷ் போடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு