பிரீமியம் ஸ்டோரி

அடர்த்தியான சிறகுகள்!

##~##

பெங்குவின்களின் சிறகுகள் மற்ற பறவைகளின் சிறகுகளைவிட மிகவும் அடர்த்தியாக இருக்கும். ஒரு சிறகில், ஒரு சதுர அங்குலத்துக்கு 70 இறகுகள் வரை இருக்கும். பெங்குவின் நன்றாக வளர்ந்த பின், வருடத்துக்கு ஒரு தடவை இறகுகள் உதிர்ந்து முளைக்கும். இதில் கேலபகோஸ் என்கிற பெங்குவின்களுக்கு  வருடத்துக்கு இருமுறை இறகுகள் உதிர்ந்து முளைக்கின்றன.

சுட்டி நியூஸ் !

போப்!

போப் 16-ம் பெனிடிக்,  சமீபத்தில் பதவியில் இருந்து ஓய்வுபெற்றது  தெரிந்திருக்கும். இன்னொரு விஷயம், முன்பு ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் இருந்தார்.அவர் இப்போது அவற்றில் இருந்தும் விலகிவிட்டார். இதனால் அவர் ட்விட்டர் பக்கத்தை பின்பற்றிய லட்சக்கணக் கானவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவரோ ''போப் பதவியைவிட்டு விலகிய எனக்கு ட்விட்டரில் இருந்து விலகுவது பெரிய விஷயம் இல்லை'' என்கிறார் கூலாக.

சுட்டி நியூஸ் !

ஆந்தைக் கொம்பு!

சுட்டி நியூஸ் !

'பெரிய கொம்பு ஆந்தை’ என்று ஒருவித ஆந்தை இனம் இருக்கிறது. இதன்  தலைப் பகுதியில் கொம்புகள் போல்  இரண்டு இருக்கும். உண்மையில் அவை கொம்புகள் அல்ல, காதுகளைப் பாதுகாக்கும் மடல் போன்ற குடுமியே அது. வட அமெரிக்காவில் இந்த வகை ஆந்தைகள் நிறையக் காணப்படுகிறன. உருவத்தில் பெரிய அளவில் இருக்கும் இவை சுமார் இரண்டு அடி உயரம்  வரை வளரும்.

அரசு நிர்வாகம்!

நமது அரசு நிர்வாகத்தில் சில விஷயங்கள் எவ்வளவு தாமதமாக நடக்கிறது என்பதற்கு இந்தத் தகவலைப் படிங்க...

சுட்டி நியூஸ் !

இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம், வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டன் பிரதமராக இருந்தார். அவருக்கான சுருட்டு செய்வதற்கு திண்டுக்கல்லில் இருந்து புகையிலை பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டது. அதற்கென தனியாகப் படிவங்கள் அச்சடிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போர் முடிந்து, இந்தியா சுதந்திரமும் அடைந்து, வின்ஸ்டன் சர்ச்சில் 1965-ல் இறந்த பிறகும், துணை ஆட்சி அலுவலர் அலுவலகத்தில் அந்தப் படிவங்கள் தொடர்ந்து அச்சடிக்கப்பட்டு, சென்னை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டன.  1972-ல் தமிழக அரசு சிக்கன நடவடிக்கை எடுத்தபோதுதான் சுருட்டுக்கான படிவம் அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டது.

குறிச்சு வெச்சுக்கங்க!

'இந்தத் தேதியை உன் காலண்டரில் குறிச்சு வெச்சுக்க’ என்கிற டயலாக் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படி நாம் எல்லோருமே குறித்துக்கொள்ள வேண்டிய சில சுற்றுச்சூழல் சம்பந்தமான நாட்கள் இவை...

* உலக ஈர நிலம் பாதுகாப்பு தினம் - பிப்ரவரி 2

* உலக வன நாள் - மார்ச் 21

* உலக தண்ணீர் தினம் - மார்ச் 22

* பூமி தினம் - ஏப்ரல் 22

* சர்வதேச உயிர் தினம் - மே 22

* உலகச் சுற்றுச்சூழல் தினம் - ஜூன் 5

சுட்டி நியூஸ் !

* உலகப் பாலைவன தடுப்பு நாள் - ஜூன் 17

* வன மகோத்சவம் - ஜூலை 1 முதல் 7

* சர்வதேச ஓசோன் தினம் - செப்டம்பர் 16

* வன உயிரின வாரம் - அக்டோபர் 1 முதல் 7

* இயற்கை வளங்கள் நாள் - அக்டோபர் 5

* இயற்கைப் பாதுகாப்பு தினம் - நவம்பர் 25

* தேசிய மாசுக் கட்டுப்பாடு தினம் - டிசம்பர் 2

* தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள் - டிசம்பர் 4

மீசைக்கா காசு?

எட்டயபுரம் மன்னருக்கு, பாரதியார் மீசை வைத்திருப்பது பிடிக்கவில்லை. அவர் அதை ரசிக்கவும் இல்லை. அது பற்றி பாரதியின் சிறிய தந்தையிடம், ''பாரதியின் மீசையை எடுக்கச் சொல்லுங்கள். எடுக்காவிட்டால் மாதந்தோறும் வழங்கப்படும் மானியப் பணம் நிறுத்தப்படும்'' என்று கட்டளையிட்டார்.

சுட்டி நியூஸ் !

இந்த விஷயம் தெரிந்ததும் பாரதிக்கு வந்ததே கோபம். மன்னரிடம் சென்றார், ''ஐயா இத்தனை நாட்களாக எனக்கு அளித்த மானியம் எனது கவித் திறமைக்கு என்று நினைத்தேன். இன்றுதான் அது மீசைக்காக என்பதை அறிந்தேன். எனவே, இனிமேல் அந்தக் காசு எனக்கு வேண்டாம்'' என்றார்.

அரசர் ஆடிப்போய்விட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு