Published:Updated:

கார்ட்டூன் வி.ஐ.பி ! மீட்டிங்...

கார்ட்டூன் வி.ஐ.பி ! மீட்டிங்...

கார்ட்டூன் வி.ஐ.பி ! மீட்டிங்...

கார்ட்டூன் வி.ஐ.பி ! மீட்டிங்...

Published:Updated:

இரா.நடராசன்

மிக்கி மவுஸ் வழக்கம்போல்  நண்பன் புளூடோ(Pluto)வுடன் கடற்கரைக்கு வந்தது. அதற்கு அலைகளில் பலகை வைத்துப் பறக்கும் சர்ஃபிங் விளையாட்டு மிகவும் பிடிக்கும். அப்போது கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்கள் மத்தியில் இருந்து 'மிக்கி... மிக்கி... ப்ளீஸ் வெயிட்!'' என்று ஒரு குரல் வந்தது.

 மிக்கி : ஏய் புளூடோ... யாரோ கூப்பிடற மாதிரி இருக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார்ட்டூன் வி.ஐ.பி ! மீட்டிங்...
##~##

புளூடோ : யாரும் கூப்பிடலை மிக்கி. இது அலைகள் சத்தம்!

சுட்டி : ஓ... மிக்கி! ப்ளீஸ் வெயிட்!

மிக்கி : புளூடோ... யூ ஃபூல்! பாரு யாரோ நம்மைத் தேடி வராங்க!

சுட்டி : உங்களை நேரில் பார்க்க ரொம்பப் பெருமையா இருக்கு. நான் தாட்சாயிணி. பாண்டிச்சேரி, செயின்ட் பேட்ரிக் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் உங்களோடு பேசலாமா?

மிக்கி : ஓ! உங்களை மாதிரி சுட்டிகளோடு பேசுவது எனக்கும் பிடிக்கும். பை த பை... மீட் மை ஃபிரண்ட் புளூடோ!

தாட்சாயிணி : ஹாய் புளூடோ! உன்னையும் ரொம்பப் பிடிக்கும்.

புளூடோ : நீங்களும் சர்ஃபிங் பண்ணப் போறீங்களா?

கார்ட்டூன் வி.ஐ.பி ! மீட்டிங்...

மிக்கி : குட் ஐடியா! நாம சர்ஃபிங் போய்ட்டே பேசலாமே! புளூடோ உன் மரத்தைச் சுட்டிக்குக் கொடு.

(இருவருமாக பலகையுடன் புறப்பட்டனர்)

மிக்கி : புளூடோ என்னுடைய நல்ல நண்பன்.

தாட்சாயிணி: உங்களை  உருவாக்கியது வால்ட் டிஸ்னி தானே?

மிக்கி : கரெக்ட்! அது ஒரு பெரிய கதை. வால்ட் டிஸ்னியும் அவரது மனைவி லில்லியன் (Lillian) இருவருமாக நியூயார்க்கில் இருந்து கலிஃபோர்னியாவுக்கு ரயிலில் வரும் போது தோன்றிய ஐடியா. அப்போ ரயிலில் கூத்தடிச்ச ஒரு எலி நண்பனின் ஜெராக்ஸ் நான். வருடம் 1928.

தாட்சாயிணி : மிக்கி மவுஸ் என்று சொன்னாலே சிரிப்பை அடக்க முடியாது. உங்களோட சேர்ந்து அறிமுகமானவங்க?

மிக்கி : என்னோட சேர்ந்து அறிமுகமானது புளூடோ. அவன் கிட்டத்தட்ட மனிதர் போலவே நடந்து கொள்வான். எனக்கு ரொம்ப லாயலா இருப்பான்.

தாட்சாயிணி : கேட்கவே சுவாரசியமா இருக்கு. அதைவிட கூபி நாய்...

மிக்கி : ஆமாம்! கூபி (Gooby) டிரஸ் அணிந்துகொண்ட நாய். என்னோட அட்வென்சர்ஸ் அனைத்துக்கும் உற்ற தோழன். சமயத்தில் ஏதாவது புதிதாக டிரை பண்ணி வம்பில் மாட்டுவான். வில்லன் பெஸ்கிபெட்-ஐ  தெரியும்தானே? அவனோடு மோதி ஜெயிக்க எனக்கு உதவுவான்.

கார்ட்டூன் வி.ஐ.பி ! மீட்டிங்...

தாட்சாயிணி : உங்க கேர்ள் ஃபிரெண்ட் மின்னி?

மிக்கி : மின்னி கோலா கேர்ள். என் ஸ்வீட் ஹார்ட்! சோடா குடிச்சுக்கிட்டே என்கூட ஷாப்பிங் செய்வா!

தாட்சாயிணி : இதுவரை எத்தனை படம் பண்ணி இருக்கீங்க?

மிக்கி : 1928ல் தொடங்கி இன்று வரை 137 படம். கிட்டத்தட்ட நாலாயிரம் கார்ட்டூன் ஸ்டிரிப்!

தாட்சாயிணி : உங்களை கார்ட்டூன் உலக ராஜா என்றே சொல்லலாம். வால்ட் டிஸ்னி உருவாக்கிய டிஸ்னி லாண்டின் சிம்பல். உலக அளவில் புதிய  விஷயங்களின் அடையாளமாவும் இருக்கீங்க.

மிக்கி : ரொம்ப புகழாதே!

கார்ட்டூன் வி.ஐ.பி ! மீட்டிங்...

தாட்சாயிணி : உலக அளவில் விளம்பரத்தில் அதிகம் வந்ததும் நீங்கதானே?

மிக்கி : எஸ்! ஆனால், சுட்டிகள் தவிர வேறு யார் உபயோகிக்கும்  ப்ராடக்ட்டுக்கும் விளம்பரம் செய்வதில்லை. அதில் தெளிவாக இருக்கேன்!

தாட்சாயிணி : உங்க சமீபத்திய சாதனை ஏதாவது?

கார்ட்டூன் வி.ஐ.பி ! மீட்டிங்...

மிக்கி : எகிப்தில் மக்கள் ஜனநாயகம் கேட்டு பேராடியபோது... லோக்கல் டி.வி யில் மிக்கி கார்ட்டூன் போட வேண்டும் என்று சுட்டிகள் தனியாக என் படம் போட்ட பேனர் பிடித்து உரிமை குரல் கொடுத்தாங்க. ஐ வாஸ் சோ பிரவுட்!

தாட்சாயிணி : ரொம்ப மகிழ்ச்சி. கங்கிராட்ஸ்! பை... பை... மிக்கி!

மிக்கி : தாங்க்ஸ்! மின்னி வெய்ட் பண்ணி கிட்டிருப்பா. பிறகு சந்திப்போம். சுட்டிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism