Published:Updated:

'சொல்லி ஜெயிப்போம் !'

'சொல்லி ஜெயிப்போம் !'

'சொல்லி ஜெயிப்போம் !'

'சொல்லி ஜெயிப்போம் !'

Published:Updated:

'சொல்லி ஜெயிப்போம் ! '

சென்னையில் நடந்த ஆங்கில சொற்புதிர்ப் போட்டியில்(spelling)இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்கள் டி.ஏ.வி. பள்ளியைச் சேர்ந்த நிவேதிதா, மானஸா, சுஜனா. இவர்கள் ஆங்கில வார்த்தை விளையாட்டுகளில் படுகில்லிகள்!

'சொல்லி ஜெயிப்போம் !'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சென்ற வருடம் நடந்த போட்டியில் ஒரு ஜாலியாகத்தான் பங்கேற்றோம். எதிர்பாராத விதமாக முதல் இடம் கிடைத்தது. அந்தப் பெயரை தக்க வைத்துக்கொள்ள இந்த வருடம் மிகவும் கடுமையாக உழைத்தோம். சென்னையில் உள்ள 75 பள்ளிகள் கலந்துகொண்ட போட்டியில், நாங்கதான் டாப்பர்ஸ். நடுவர் சொல்லும் சொல்லுக்குச் சரியான ஸ்பெல்லிங்கை எழுதுவது, அனகிராம் எனப்படும் குழம்பிய எழுத்துக்களுக்குள் இருந்து வார்த்தையைக் கண்டுபிடிப்பது, குறுக்கெழுத்துப் போட்டி, ஸிகிறிமிஞி திமிஸிணி என ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு ரகம். இதற்கான பயிற்சியை நாங்கள் முதலிலேயே ஆரம்பித்ததால், வெற்றி கிடைத்தது.'' என்றனர் குதூகலத்துடன்.

''ஆங்கிலம் என்பது ஒரு மொழி என்பதையும் தாண்டி, இன்று முறையான ஆங்கிலம் கற்றால் உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் சமாளிக்கலாம் என்ற நிலை உள்ளது. பாடப் புத்தகங்களைத் தவிர வேறு பல நூல்களையும் வாசிக்கும் பழக்கம் அவசியம் தேவை'' என்ற இந்த சுட்டிகள், இந்தப் போட்டியில் ஜெயித்ததற்குப்    பரிசாக

'சொல்லி ஜெயிப்போம் !'

30,000 ரொக்கப் பணத்தையும் பெற்றிருக்கிறார்கள்!

 -மோ.அருண் ரூப
பிரசாந்த்
படம்: ச.இரா.ஸ்ரீதர்

 வில்லேஜ் விஞ்ஞானி !

 நியூட்ரினோ!

இது என்ன? நியூட்ரினோ என்றால் சூரியன், நட்சத் திரத்தில் உருவாகி, காற்றில் பரவிக் கிடக்கும் நுண்துகள். இந்த துகளை ஆராய்ச்சி செய்வதன் மூலம் சுனாமி, நிலநடுக்கம் மற்றும் பூமிக்கு அடியில் உள்ள எரி பொருளை  கண்டறியலாம். இதுபோன்ற பல வியப்பான கருத்துகளை விளக்குகிறது சுட்டி அசோக் எழுதிய ஆய்வுக் கட்டுரை.

'சொல்லி ஜெயிப்போம் !'

தேனி என்.ஏ. கொண்டு ராஜா நினைவு உயர் நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறான் அசோக்.

இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கழகம் (ஐ.என்.ஓ) ஆய்வுக்கூடம் அமைக்க, தேனி மாவட்டம் மேற்கு போடி மலைப் பகுதியில் உள்ள பொட்டிபுரம் மலைப் பகுதியை தேர்வு செய்து உள்ளது. இங்கு நடத்திய போட்டியில் தான் நியூட்ரினோ பற்றிய ஆய்வுக் கட்டுரைக்கு பரிசு கிடைத்துள்ளது.

''மாநில அளவில் நடத்தப்பட்ட  'நேஷனல் சில்ரன்ஸ் சயின்ஸ் காங்கிரஸ் கமிட்டி-2010’  மாநாட்டிலும் பரிசு கிடைத்தது. தவிர, மண்வளம் பற்றிய ஆராய்ச்சியில் ஐந்து பேர் கொண்ட  குழு (அசோக், தெய்வ நாயகி, நிவேதிதா, மணிகண்டன், விஷ்ணு பிரியா) ஈடுபட்டு உள்ளது. இந்த ஆய்வின் முடிவை கட்டுரைகளாக அளித்து 'இளம் விஞ்ஞானி’ விருதினைப் பெறத் தீவிரமாக பாடுபடுகிறோம்'' என்றான் அசோக்.

படிப்பு தவிர, ஸ்டாம்ப் கலெக்ஷன், மேஜிக் என்று கலக்குகிறான் இந்த  வில்லேஜ் விஞ்ஞானி!

-தி.முத்துராஜ்

இளம் வித்வான்

 ''வணக்கம் சார், நான்தான் சிவராம கணேசன்'' டியூசன் முடிந்து திரும்பி வந்த அந்த சுட்டி நம்மை வரவேற்றபோது ஆச்சர்யமாக இருந்தது. பதினொரு வயதான இந்த சுட்டி, இதுவரை ஆயிரம் கச்சேரிகளுக்கு மேல் கலக்கி இருக்கிறான்.

'சொல்லி ஜெயிப்போம் !'

'தவில் என்கிற ஒரு இசைக் கருவி எவ்வளவு பெருசா இருக்கும். ஆனால், அந்த இசைக் கருவியில் இந்த மதுரை சுட்டி, புகுந்து விளையாடுகிறான். தனது மூன்று வயதிலேயே இந்த கலையை தனது தந்தையிடம் முறைப்படிக் கற்றான். இப்போதைக்கு தமிழ்நாட்டிலயே இளம் தவில் வித்வான் சிவராம கணேசன்தான். அப்துல் கலாம், சங்கராச்சாரியார், சிவக்குமார் மறைந்த வயலின் வித்வான் குன்னக் குடி வைத்தியநாதன், என பல வி.ஐ.பி.-களிடம் பாராட்டும் பெற்றிருக்கிறான்.

''எனக்கு மூன்றரை வயசு இருக்கும் போது ஒரு தடவை அப்பாவின் தவிலை தட்டிட்டு இருந்தேன். அதைப் பார்த்து அப்பா கத்துக்கொடுக்க ஆரம்பிச்சார். மூணு வருஷம் காலேஜ்ல கத்துக்கற அனைத்தையும், மூணே மாசத்துல கத்துக்கிட்டு மதுரையில அரங்கேற்றம் பண்ணினேன். தனி ஆவர்த் தனம் நல்லா வாசிக்கிறதா எல்லாரும் சொல்லுவாங்க. ஏழு வயசு இருக் கும்போது பாரீஸ் போய் வாசிச்சேன். அப்போ ஃபிளைட்ல குமரி ஆனந்தன் ஐயாவின் அறிமுகம் கிடைச்சது. என்னை பத்தி தெரிஞ்சு, அப்துல் கலாம் ஐயாவை பார்க்க ஏற்பாடு செய்தார். கலாம் ஐயாவைப் பார்த்ததை என்னால மறக்கவே முடியாது, அவர் என்கிட்ட 'நல்ல விஷயம்! ஆனால், படிப்புலயும் கவனமா இருக்கணும்’னு சொன்னாங்க'' என்கிற சிவராம கணேசன் படிப்பிலும் கில்லிதான். ''என்னதான் தவில் நல்லா வாசிச்சாலும் பிற்காலத்துல கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஆகறதுதான் என்னோட லட்சியமே!'' என்கிறான் நம்பிக்கையோடு!

 -உ.அருண்குமார்
படங்கள் : க.கார்த்திக்

 'இனி இல்லை கொசுத் தொல்லை !'

ஏழை, பணக்காரன் வித் தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் இவசமாகவே ஊசி போடும் டாக்டர்... கொசு. இதனை ஒழிக்க பார்த்தீனிய இலையைக் கொண்டு புதிய மருந்தைக் கண்டுபிடித்து இருக் கிறார்கள் சிவகங்கை, சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியின் ப்ளஸ் டூ சுட்டிகள் ஸ்ரீநித்யா, கலைச் செல்வி, கிரிசாந்தினி, சுகன்யா, மற்றும் குணாதேவி.

'சொல்லி ஜெயிப்போம் !'

''நேஷனல் சில்ரன்ஸ் சயின்ஸ் காங்கிரஸ் (NCSC) சார்பாக 'உலகைக் காத்தல் தொடர்பான கண்டுபிடிப்புகள்’ எனும் தலைப்பில் போட்டிகள் அறிவிச் சாங்க. எங்க ஏரியாவுல கொசுத் தொல்லை அதிகம். அதை ஒழிக்க மருந்து கண்டுபிடிச்சு, போட்டிக்கும் அனுப்ப முடிவு பண்ணினோம். பார்த்தீனிய இலை தொட்டாலே அரிக்கக்கூடியது. அந்த அரிப்புத் தன்மையைப் பயன்படுத்தி கொசு மருந்து கண்டு பிடிக்கும் ஐடியா வந்துச்சு. முதலில் பார்த்தீனிய இலையை, 'அசிட்டோன்’ பயன்படுத்திப் பவுடரா மாத்தினோம். பிறகு, அதை திரவமா மாத்தினோம். இந்த திரவத்தை வைத்து, கொசுக்களை அதன் உற்பத்தி நிலையிலேயே அழிச்சிட முடியும். இந்த மருந்தை சுவாசிப்பதால் மனிதர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. இந்த கண்டுபிடிப்புக்கு மண்டல அளவுல முதல் பரிசு கிடைச்சது, பிறகு, குஜராத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில 'ஏ’ கிரேட். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எங்க பயாலஜி சார் ராஜாவுக்கும், தலைமையாசிரியர் மாறனுக்கும் எங்க நன்றியைத் தெரிவிக்கிறோம்'' என்றார்கள்.

 -உ.அருண்குமார்
படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism