Published:Updated:

குச்சியில் அற்புதம் !

குச்சியில் அற்புதம் !

குச்சியில் அற்புதம் !

குச்சியில் அற்புதம் !

Published:Updated:

என்.மல்லிகார்ஜுனா

உங்களிடம் ஒரு டூத்பிக் (பல் குத்தி) கொடுத்தால் என்ன செய்வீர்கள்? 'இது என்ன கேள்வி? பல் குத்ததான் உபயோகிப்பேன்’ என்று உடனே உங்களிடம் இருந்து பதில் வரும். அதுவே, சான் ஃப்ரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஸ்டீவன் பெக்மன் என்ன செய்வார் தெரியுமா? அதனை அழகான சிற்பமாக மாற்றிக் கொடுப்பார்.

குச்சியில் அற்புதம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

ஸ்டீவனிடம் ஒரே ஒரு டூத்பிக், கூடவே ரேஸர் ப்ளேட் மற்றும் பசை தந்தால் போதும்... கட்டடங்கள், பாலங்கள் என உலகப் புகழ்பெற்ற சின்னங்களை தத்ரூபமாக ஒரே குச்சியில் செதுக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் முழ்கச் செய்வார். 'எப்படி உங்களுக்கு ஆர்வம் வந்தது?’ என்று கேட்டால்... ''பள்ளி படிக்கும் காலங்களிலேயே டூத்பிக் வைத்து எதையாவது செய்து கொண்டிருப்பேன். அப்படி ஆரம்பித்த பழக்கம், கல்லூரி சமயத்தில் டூத்பிக்கில் உலகப் புகழ்பெற்ற இடங்களை செதுக்க வேண்டும் என்று ஆர்வம் அதிகமானது. ஒரு டூத்பிக்-கில் உருவத்தைக் கொண்டுவர ஓரிரு வாரங்கள் அல்லது மாதக் கணக்கிலும் ஆகும். அதுமட்டும் அல்ல, அதற்கு அமைதியான சூழ்நிலையும் மனக்கட்டுப்பாடும் மிகவும் அவசியம்'' என்கிறார். இங்கே இருக்கும் படங்களைப் பாருங்கள்... உலகப் பிரசித்திப் பெற்ற சின்னங்களை டூத்பிக்கில் கொண்டு வந்திருக்கிறார்.

குச்சியில் அற்புதம் !

இப்படி பல ஆயிரக்கணக்கான டூத்பிக்குளைக் கொண்டு பல உருவங்களையும் செய்திருக்கிறார் ஸ்டீவன். என்ன சுட்டீஸ் இவருடைய திறமைக்கு ஒரு 'ஓ’ போடுவோமா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism