கே.கணேசன்
இந்த ஆண்டுக்கான காலண்டர் மற்றும் டைரிகளில் ஐ ஸ்டீல் நிறுவனம் சுட்டிகள் வரைந்த ஓவியங்களைப் பயன்படுத்தி இருக்கிறது. இவற்றை வரைந்தது குளோபல் ஆர்ட் ஸ்கூலின் ஆழ்வார்ப்பேட்டையின் பிரிவான கலாமஞ்சரி எனும் கலை மையத்தின் சுட்டிகள். இது பற்றி கலாமஞ்சரியின் உரிமையாளர் ஜெயஸ்ரீ நம்மிடம் சொன்னது, ''எங்கள் அமைப் புடன் சேர்ந்து, ஐ ஸ்டீல் நிறுவனம், நமது உலகம் நல்ல சூழலில் இருக்க எது தங்களுடன் நிரந்தரமாக இருக்க வேண்டும் (திஷீக்ஷீமீஸ்மீக்ஷீ) என்ற தலைப்பில், சுட்டிகள் தங்கள் எண்ணங்களை வண்ணங்களில் வெளிப்படுத்த வேண்டும் என ஓர் ஓவியப் போட்டியை நடத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
##~## |
சுட்டிகள் தங்களுக்குப் பிடித்த சோட்டாபீன் இருந்தால் உலகமே ரொம்ப ஜாலியாக இருக்கும், மணம் வீசும் மலர்கள் வேண்டும், தன் நண்பர் களுடனான நட்பு நிரந்தரமாக வேண்டும், அழகிய பூமி, அழகிய கார்கள், குதுப்மினார் போன்று கட்டடக்கலைக்குப் பெருமை சேர்க்கும் சின்னங்கள், போன்றவற்றைச் சில சுட்டிகளும் சிங்கப்பூர் பயணம் பற்றிய நினைவுகள், அடர்ந்த மேகங்களில் படுத்து உறங் குவதை, தன் அருமைக் குடும்பத் தாருடன் இருப்பதை, கடவுள் நம்முடன் இருக்க வேண்டும், சுத்தமாகவும் பசுமையா கவும் பூமி இருக்க வேண்டும், சூரியன், சந்திரன் கோள்கள் உட்பட பிரபஞ்சம், எல்லாமே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று சில சுட்டிகளும் தங்கள் ஓவியத்தால் பதிவு செய்து இருந்தார்கள். ஓவியங்களில் வெளிப்பட்ட உணர்வுகளைப் பார்த்த ஐ ஸ்டீல் நிறுவனம் அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறது'' என்றார்.
ஓவியங்களை வரைந்த சுட்டிகளுக்குப் பரிசளிக்க வந்திருந்த ஐ ஸ்டீல் நிறுவனத்தின் உயர் அதிகாரி களில் ஒருவரான கௌதம் ரெட்டி, ''ஓவியங்களாய்ப் பதிவான அருமையான விருப்பங்களைப் பார்த்த எங்கள் ஐ ஸ்டீல் நிறுவனம், இவை மொத்தமாக பூமியில் நிரந்தரமாக இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்தது. அதன் விளைவாக சுட்டிகளின் எண்ணங்களை கௌரவப்படுத்தும் விதமாக சுட்டிகளின் படைப்பைப் பதிவு செய்திருக்கிறோம்'' என்றார் மகிழ்வுடன்.