Published:Updated:

தள்ளு...தள்ளு !

தள்ளு...தள்ளு !

தள்ளு...தள்ளு !

தள்ளு...தள்ளு !

Published:Updated:

தள்ளு... தள்ளு !

தள்ளு...தள்ளு !

நம் நாட்டில் மட்டும் அல்ல ஜப்பானிலும் ஜனத்தொகை பெருகிக்கிட்டே போகுது. அதனால், ரயிலில் செல்லும் கூட்டமும் அதிகமாகுது. சில ரயில் நிலையங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த 'புஷர்ஸ்’ எனப்படும் ஊழியர்களை அரசாங்கம் நியமித்து உள்ளது. இவர்களின் வேலை என்ன தெரியுமா? நிலையத்தில் ரயில் வந்து நின்றதும் கூட்டம் அடித்துப் பிடித்து ஏறுவார்கள். ரயிலில் கூட்டம் நிரம்பிவழியும். வெளியே தொங்கு பவர்களை உள்ளே தள்ளிக் கதவை மூடுவதுதான் இவர்களது வேலை. அதுமட்டும் அல்ல, இறங்க முடியாமல் இருப்பவர்களை வெளியே இழுப்பதும் இவர்களது வேலைதான். ஜப்பானில் இவர்களை 'ஓஷியாஸ்’ என்றும் அழைக்கிறார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-அர்ஜுன்

 ரைட்...ரைட் !

தள்ளு...தள்ளு !

வீட்டில் செல்லப் பிராணியாக பூனையையோ நாயையோ வளர்ப்பதும், அதனை வெளியே கூட்டிச் செல்வதும் சாதாரண விஷயம். கனடாவின்  ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த லின்டா சாட்னர் (லிவீஸீபீணீ ஷிணீutஸீமீக்ஷீ) எருமையைச் செல்லப் பிராணியாக வளர்க்கிறார். இதன் பெயர் பெய்லி. இவர் வெளியே எங்கு சென்றாலும் பெய்லியும் காரில் ஏறிக்கொண்டு 'ரைட்...ரைட்!’ என்பது போல் நின்றுகொள்கிறது. லின்டாவும், எங்கு சென்றாலும் கூடவே அழைத்துச் செல்கிறார்.  பெய்லியின் இரண்டு வயதில் இருந்தே பழக்கி இருக்கிறார் லின்டா. இப்போது எல்லாம் பெய்லிக்கு காரில் சுற்றுவது, ரெஸ்டாரென்டுக்குப் போவது என்றால் மிகவும் பிடிக்கிறதாம். இதை 'அனிமல் ப்ளானெட்’ சேனல் ஒரு டாக்குமென்டரியாக எடுத்து இருக்கிறது என்றால் லின்டா-பெய்லி புகழைத் தெரிந்துகொள்ளுங்கள்!

-ஹ்ருதய்

 வாவ் வவ்வல்ஸ் !

'வவ்வல்ஸ்’ (Vowels) என்கிற ஆங்கில உயிரெழுத்துகள் (A, E, I, O, U) ஒருங்கே இணைந்த சொற்கள் ஆங்கிலத்தில் நிறையவே இருக்கின்றன. அவற்றில் சில...

Automobile - மோட்டார் வாகனம்

Education - கல்வி

Dialogue - உரையாடல்

Communicative - தொடர்புகொள்ளக் கூடிய

Adulteration - கலப்படம்

Equation - சமன்பாடு

Precaution - முன்னெச்சரிக்கை

Behaviour - நடத்தை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism