Published:Updated:

கிளிண்டனுக்குக் கொடுத்த கண்ணாடி கிஃப்ட் !

சுட்டிகளை மயக்கும் கண்கவர் சிற்பங்கள் !

கிளிண்டனுக்குக் கொடுத்த கண்ணாடி கிஃப்ட் !

சுட்டிகளை மயக்கும் கண்கவர் சிற்பங்கள் !

Published:Updated:

 சுட்டி நிருபர் ஜீபா !
கே.கணேசன்

ஹாய் சுட்டீஸ்! நான் சமீபத்துல ஆழ்வார்ப்பேட்டைக்குப் போயிருந்தேன். அங்க ஒரு ஆபீஸ்ல கண்ணாடில செஞ்ச விதவிதமான கலைப் பொருட்களைப் பார்த்தேன். அதை எல்லாம் பார்க்கிறப்ப ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. கல்லில், உலோகத்தில்னு சிற்பங்களைச் செஞ்சு பார்த்திருக்கோம். ஆனா, கண்ணாடில சிற்பங்கள்னா கொஞ்சம் ஆச்சர்யமா இருந்தது. விடுவேனா...? அதைப் பத்தி தெரிஞ்சுக்க களத்துல மெதுவா குதிச்சேன்(ஏன்னா, கண்ணாடி உடைஞ்சுடக் கூடாதே...எப்பூடி!)

கிளிண்டனுக்குக் கொடுத்த கண்ணாடி கிஃப்ட் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

இந்தக் கண்ணாடிச் சிற்பங்களை இருபது ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமா செய்துவரும் சந்தோஷ் சிவராம் ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கிறார்.  என்கூட விக்னேஷ், சதீஷ்குமார், ஜெகதீஷ், மகாலட்சுமி, சங்கீதா லட்சுமி என்கிற சுட்டிகளும் வந்திருந்தாங்க.

''வெல்கம் ஜீபா!...  நான் காலேஜ் முடிச்சுட்டு சொந்தமா என்ன தொழில் தொடங்கலாம்ன்னு  யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அந்தச் சமயத்தில எங்க உறவினர் ஒருத்தர் 'நியான் லைட் சைன் போர்டு’கள் செய்யற கம்பெனி வெச்சிருந்தார். அங்க வேலை செய்யும் ஊழியர் ஒருத்தர், ஓய்வு நேரத்தில நியான் லைட் செய்யும் கண்ணாடிக் குழாய்களில் உபயோகம் இல்லாத துண்டுகளை வெச்சு, குட்டிக் குட்டி பொம்மைகள் செய்வார். அது ரொம்ப அழகாவும் பார்க்க அதிசயமாவும் இருக்கும். நான் அவர்கிட்ட ஒரு விநாயகர் பொம்மையைச் செய்யச் சொன்னேன். அது ரொம்ப அழகா வந்தது. அதிலிருந்து இது மாதிரி விநாயகர், விளக்குகள், குதிரை, பூக்கள்ன்னு நிறைய செஞ்சோம். இந்த மாதிரி கலைப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கு'' என்றார்.

கிளிண்டனுக்குக் கொடுத்த கண்ணாடி கிஃப்ட் !

''இதை எப்படி செய்யறீங்கன்னு பார்க்கணுமே?'' என்றேன்.

''நாங்க நினைச்சோம் நீ சொல்லிட்டே ஜீபா'' என்ற சுட்டி மகாலஷ்மி, ''இப்பவே போகலாம் அங்கிள்!'' என்றாள்.  

''சரி, வாங்க... அண்ணாநகரில் இருக்கும் எங்க ஃபேக்டரிக்குப் போகலாம்'' என்றார் சந்தோஷ் சிவராம்.

ஓவர் டூ அண்ணா நகர்!

அங்கு நமது படை ஆஜர் ஆனது. நமக்காக கேஸ் சிலிண்டரில் இருந்து வெளியான தீ ஜூவாலையில் பால் பாயின்ட் பேனாவுக்கு பறவையைச் செய்தபடியே பேசிய ரகுராமன், ''இந்தக் கலையை என் அப்பாதான்  கத்துக்  கொடுத்தார். ரொம்ப நுட்பமா செய்யவேண்டிய வேலை இது. எண்ணமும் செயலும் ஒருங்கிணைஞ்சு செய்தால்தான் சிற்பம் நன்றாக அமையும்'' என்றார்.

கிளிண்டனுக்குக் கொடுத்த கண்ணாடி கிஃப்ட் !

''இதை எல்லாக் கண்ணாடியிலும் செய்ய முடியுமா?'' என்று கேட்டதற்கு...

''ம்ஹும்! இதெல்லாம் 'போரிஸில்’னு சொல்ற கண்ணாடி ராடு(தண்டு)கள்லதான் செய்ய முடியும். அதுவும் தவிர செய்யப்போற பொருளுக்கு ஏற்ற தடிமனில் ராடுகளைத் தேர்ந்தெடுத்துச் செய்யணும். இந்தக் கண்ணாடி ராடுகள் ஸ்பெஷல் 'கன்’ பர்னர் மூலம் வெளியாகும் 1000 டிகிரி வெப்பத்தில்தான் உருகும். நெருப்புப் படும் இடம் மட்டும் உருக ஆரம்பிக்கும். நாம் தேவையான வடிவத்துல சிற்பங்களை உருவாக்கிக்கணும்'' என்றார்.

''ஒரு கலைப் படைப்பை உருவாக்க எவ்வளவு நேரமாகும்?'' என்று கேட்டேன்.

''பொருளுக்கு ஏற்ற மாதிரி நேரம் ஆகும். பேனாபோல செய்யணும்னா பத்து நிமிஷம் போதும். விநாயகர், ஒட்டகம் தண்ணீர் குடிக்கும் காட்சி போல இருந்தா... ஒரு மணி நேரம் பிடிக்கும்'' என்றார்.

''நீங்கள் செய்றதுலயே எது உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?'' என்று மகாலஷ்மி கேட்க...

''லக்கி கணேஷ்!  ஒரே சிற்பத்தில் பிள்ளையார் முன், பின் ரெண்டு பக்கமும் இருப்பார். இதைக் கார் டேஷ் போர்டில் வைத்தால் ஓட்டுபவரையும், எதிரில் சாலையில் வருபவரையும் பார்ப்பதுபோல இருக்கும். இதற்கு நல்ல வரவேற்பும் டிமாண்டும் இருக்கு. இது தவிர மயில், மான், ஒட்டகம், ரோஜா மற்றும் சிறிய அளவிலான பொம்மைகளும் உண்டு'' என்றார்.

கிளிண்டனுக்குக் கொடுத்த கண்ணாடி கிஃப்ட் !

''இந்த உருவங்களில் உள்ளே காலியாக இருக்குமா?''

''கண்ணாடி ராடுகளில் செய்பவை அப்படியே சாலிடா இருக்கும். ஆனால், குழாய்களை வெப்பப்படுத்தி ஊதியே செய்யும் பொருட்கள்ல உள்ளே காலியாதான் இருக்கும்'' என்றார்.

''கண்ணாடியை ஊதி, பொம்மை செய்ய முடியுமா?'' என்று ஆச்சர்யமாகக் கேட்க...

''முடியும்! அதற்கு தனியாக கண்ணாடிக் குழாய்களைப் பயன்படுத்துவோம். குழாயின் ஒரு முனையை நெருப்பில் காட்டி, எதிர் முனையை வாயால் ஊத வேண்டும். நமக்குத் தேவையான உருவம் வரும்வரை நெருப்பில் காட்டி, பின் ஊதி அப்படியே தொடர்ந்து செய்ய வேண்டும்'' என்றார்.

''இதை யாரெல்லாம் வாங்குகிறார்கள்?'' என்று கேட்டதற்கு,

கிளிண்டனுக்குக் கொடுத்த கண்ணாடி கிஃப்ட் !

''பொதுவா இவை எல்லாம் கலைப் பொருட்கள் விற்கும் கடைகள்லதான் அதிகம் விற்கும். திருமணங்கள், விழாக்கள், பிறந்த நாள் என்று அவரவர் தேவைக்கு வாங்கி கிஃப்ட்டாக் கொடுப்பாங்க'' என்றார்.

''நீங்கள் அப்படி யாருக்காவது ஸ்பெஷல் கிஃப்ட் செஞ்சிருக்கீங்களா?'' என்றேன்.

கிளிண்டனுக்குக் கொடுத்த கண்ணாடி கிஃப்ட் !

''வாஜ்பாய் நம் பிரதமரா இருந்த சமயம், மும்பைல இருக்கிற நிறுவனம் ஒண்ணு, பெரிய சைஸில் விநாயகர் சிலையைச் செய்யச் சொல்லி ஆர்டர் கொடுத்தது. அப்போ, அமெரிக்க அதிபரா இருந்த பில் கிளிண்டன் இந்தியா வரப் போறதாவும், பிரதமர் கையாலே அந்த விநாயகர் சிலையைக் 'கிஃப்ட்’டா கொடுக்கப் போறதாவும் சொன்னாங்க. உலகமே வியக்கும் அமெரிக்க அதிபருக்கு என் கையாலே சிலை செஞ்சது எனக்கு இப்பவும் ரொம்பப் பெருமையா இருக்கு!'' என்றார்.

''இந்த சிற்பங்களுக்கு எப்படி விலை நிர்ணயிக் கிறீங்க அங்கிள்?'' என்று கேட்டான் விக்னேஷ்.

''அவர் வேலையைப் பார்க்கட்டும். நான் பதில் சொல்றேன்'' என்ற சந்தோஷ், ''சிற்பம் செய்ய தேவைப்பட்ட கண்ணாடி ராடின் எடை, பயன்படுத்தின கேஸ் அளவு, மேன் பவர், செய்ய ஆன நேரம், அந்த சிற்பத்தைப் பாக்ஸில் பேக் செஞ்சு அனுப்பும் செலவு, இவை எல்லாம் கணக்குப் பண்ணி விலையை நிர்ணயிப்போம்'' என்றார்.

''நீங்க செய்யும் பொருளுக்குத்தான் விலை.உங்க திறமை விலை மதிப்பு இல்லாதது... அசத்துங்க சார்'' என்று சொல்லிவிட்டு சுட்டிகளோடு கிளம் பினேன்.

படங்கள்: என்.விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism