Published:Updated:

சின்னஞ்சுறு உலகின் வீர காவியம் !

யுவா படங்கள் : இ.ராஜவிபீஷிகா

பிரீமியம் ஸ்டோரி
##~##

'குழந்தைகளுக்கான கதை உலகில் கற்பனைக்கு எல்லையே இல்லை’ என்பதை நிரூபிப்பதுபோல் வந்திருக்கும் லேட்டஸ்ட் அனிமேஷன் 3ஞி திரைப்படமான, 'எபிக்’ பற்றிய சுட்டிகளின் கமென்ட்ஸ்...

சின்னஞ்சுறு உலகின் வீர காவியம் !

ஆர்யன் பிரகாஷ்: பிரபல நாவலாசிரியர் வில்லியம் எட்வர்ட் ஜாய்ஸ் எழுதிய நாவலைத் தழுவி எடுத்திருக்கும் படம். தீய சக்திகளுக்கும் நல்ல சக்திகளுக்கும் இடையே நடக்கும் வழக்கமான கதை. ஆனால், அதற்கான கேரக்டர்களில் ரொம்பவே வித்தியாசம். இலைகள், புற்கள், மலர்கள், புழுக்கள், தும்பிகள், கொசுக்கள் என எல்லாமே சிறிய உயிர்கள். இவற்றின் சின்னஞ்சிறு உலகில் நடக்கும் விஷயங்களும், அந்த உலகினுள் ஒரு மனிதப் பெண் செல்வதும்... இப்படிக்கூட கற்பனை பண்ண முடியுமானு ஆச்சர்யமா இருக்கு.

கௌதம்: புரொஃபஸர் போம்பா, பல ஆண்டுகளாகக் குடும்பத்தையும் மறந்து காட்டில் தங்கி, சிறிய உயிர்களின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்பவர். நம்மைப் போல் அவையும் மகிழ்ச்சி, துக்கம், சண்டை போன்ற விஷயங்களில் ஈடுபடும் என்பவர். அவரைப் பார்க்க அவரது மகள் மேரி காத்ரீன் வருகிறாள். அப்பா சொல்கிற விஷயங்களை நம்பாமல்,

சின்னஞ்சுறு உலகின் வீர காவியம் !

வாக்குவாதம் செய்துவிட்டு ஊருக்குக் கிளம்புகிறாள்.அப்போதுதான் ஒரு திருப்பம். ராணி தாரா என்கிற இயற்கையின் தாய், தன் இனத்தைக் காப்பாற்றும் சக்தி வாய்ந்த தாமரை மலரை எடுத்து வரும்போது தீய சக்திகளின் தலைவன் மான்ட்ரெக், ராணி தாராவை விஷ அம்பால் வீழ்த்திடுறான்.

விஷ்ணு ப்ரியா, ஹம்சப்ரியா: அப்போது  அங்கே வரும் காத்ரீன், 'ஏதோ குட்டியா மின்னுதே’னு குனிஞ்சு பார்க்கும்போது, ராணி தாரா, தனது சக்தியைக் காத்ரீனுக்குக் கொடுத்துவிட்டு இறந்துவிடு கிறாள். இப்போ, காத்ரீனும் அவங்களை மாதிரி குட்டியூண்டா மாறிவிடுகிறாள். அவள் எப்படி தீய சக்திகளிடம் இருக்கும் தாமரை மலரை மீட்கிறாள் என்பதை ஆக்ஷன், காமெடியுடன் சொல்லி இருக்காங்க.

ஆதித்யா: ராணியைப் பாதுகாக்கும் இலை வீரர்கள், அவர்கள் பயணம் செய்யும் வாகனமாகக் குருவிகள், தீய சக்திகளின் படை வீரர்களாக விஷப் பூச்சிகள்னு மிரட்டி இருக்காங்க. சிரிக்கவைக்க மேஜிக் செய்யும் நிம் என்கிற கம்பளிப்பூச்சியும், மப்-க்ரப் என்கிற நத்தைகளும் இருக்கின்றன. ஐஸ் ஏஜ், ரோபோட்ஸ் போன்ற படங்களின் இயக்குநர் கிறிஸ் வெட்ஜ் (சிலீக்ஷீவீs கீமீபீரீமீ) இயக்கி இருக்கிறார். நாம அற்பமா நினைக்கிற புழு, புல்லும்கூட இயற்கையின் படைப்புதான். அதை அழிக்க நினைச்சா, விஷப் பூச்சிகள் பரப்பும் நோயால் அவதிப்படுவோம் என்பதை அழகான அனிமேஷனா சொல்லி இருக்கிற 'எபிக்’ படைப்புக் குழுவைப் பாராட்டியே ஆகணும்!

சின்னஞ்சுறு உலகின் வீர காவியம் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு