பிரீமியம் ஸ்டோரி
##~##

கோடிக்கணக்கான மதிப்புடைய காரை வாங்கி, அதை நடு ரோட்டில் வைத்து உடைத்தால் எப்படி இருக்கும்?

வாங்... சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கிங்டாவோ நகரைச் சேர்ந்த கோடீஸ்வரர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான மஸராட்டி குவாட்ரோபோர்ட்(Maserati Quattroporte) என்ற ஆடம்பரக் காரை ஆசை ஆசையாக வாங்கி, கிங்டாய் நகரத்தை ரவுண்டு வந்தார். அந்தச் சந்தோஷம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. காரில் பிரச்னை ஏற்பட்டது. உள்ளூர் டீலரிடம் காட்டினார். அவர்கள் காரைச் சரிசெய்ய முடியாமல் திருப்பி அனுப்பிவிட்டனர். ஆத்திரம் அடைந்த வாங்க், அங்கே நடந்த சர்வதேசக் கார் கண்காட்சியின் வாசலில் காரை நிறுத்தி, ஆட்களைவைத்து உடைத்துப் போட்டுவிட்டார். பார்த்தவர்கள் திகைத்து    நின்றார்கள்.  

பென் டிரைவ் !

மீபத்தில் சச்சின் டெண்டுல்கரின் உருவம்  பொறித்த தங்க நாணயம் வெளியிடப்பட்டது. 'வேல்யூ மார்ட்’ என்ற நகைக்கடை நிறுவனத்தின் விளம்பரத் தூதராக டெண்டுல்கர்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரைச் சிறப்பிக்கும் விதமாக          அந்த நிறுவனம் 24 கேரட் தங்கத்தில் சச்சினின்          உருவம் மற்றும் கையப்பம் பொறிக்கப்பட்ட ஒரு லட்சம் தங்க நாணயங்களைத் தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டது. இதன் எடை 10 கிராம். மும்பையில் நடைபெற்ற விழாவில், டெண்டுல்கர் இந்த நாணயத்தை அறிமுகம் செய்துவைத்தார்.

பென் டிரைவ் !

ந்தியா, கூடிய சீக்கிரமே ஓரு கலைத் துறையில் சாதனை படைக்கப்போகிறது. குஜராத் மாநிலத்தில் மிகப் பிரமாண்டமான சிலை ஒன்றை நிறுவப்போகிறார்கள். இது உலகில் உள்ள எல்லாச் சிலைகளையும்விட மிகப் பிரமாண்டமாக இருக்கும். 'இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல் உருவச் சிலையை உலகிலேயே மிக உயரமான சிலையாக, நர்மதா அணை அருகில் அமைக்கவிருக்கிறார்கள். தற்போதைய உலகின் உயரமான சிலை, சீனாவில் உள்ள புத்தர் சிலைதான். இதன் உயரம் 128 மீட்டர். இதை மிஞ்சும் வகையில் சர்தார் வல்லபபாய் படேல் உருவச் சிலையின் உயரம் 182 மீட்டராக இருக்கும். குஜராத் அரசு இந்தச் சிலையை நிறுவுகிறது.

பென் டிரைவ் !

'சம்மர் கேம்ப்’ என்றால் பொதுவாக ஓவியம், நீச்சல், கம்ப்யூட்டர் பயிற்சிகள்தான். ஆனால், மதுரையில் உள்ள சின்மயா மிஷன், 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சுட்டிகளுக்கு வித்தியாசமான சம்மர் கேம்ப் நடத்தியது. இதில் மந்திரங்கள், பூஜைகள், யோகா கற்றுத்தரப்பட்டன. இதில், 'மாத்ரு பூஜை’ என்ற நிகழ்ச்சியில், சுட்டிகள் தங்கள் அன்னையரின் பாதங்களைக் கழுவி பூஜை செய்தனர். மாணவர்களிடையே தூய்மை, தன்னடக்கம், பெரியவர்களை மதித்தல் ஆகிய குணங்களை ஏற்படுத்தும் நோக்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 155 சுட்டிகள் பங்குபெற்றனர்.  

பென் டிரைவ் !

மீபத்தில் டச்சு நாட்டைச் சேர்ந்த புளோரென்டிஜின் ஹொஃப்மன்(Florentijin Hofman) ஹாங்காங்வாசிகளுக்கு ஓர் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். உலகிலேயே மிகப் பெரிய ரப்பர் வாத்துப் பொம்மையை உருவாக்கி, ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா ஹார்பரில் மிதக்கவிட்டார். இதன் உயரம் 46 அடி, நீளம் 55 அடி. இந்த வாத்துப் பொம்மை ஒரு சிறிய படகில் கட்டப்பட்டு, ஜூன் 9-ம் தேதி வரை கடலில் ரவுண்டு அடித்துக்கொண்டு இருக்கும்.

பென் டிரைவ் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு