Published:Updated:

சபாஷ் சுட்டிகள் !

சபாஷ் சுட்டிகள் !

சபாஷ் சுட்டிகள் !

சபாஷ் சுட்டிகள் !

Published:Updated:

சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் தொழில்நுட்பக் கண்காட்சி நடப்பது தெரிந்து இருக்கும். இந்த ஆண்டு நடக்கும் 37வது இந்திய சுற்றுலா தொழில்நுட்பக் கண்காட்சியில் கல்வித்துறையில் பல செயல் திட்டங்களைப் பற்றி குட்டீஸ்களே சொல்ல, பெரியவர்கள் அசந்ததுதான் ஹைலைட்!

சபாஷ் சுட்டிகள் !
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஆம்! பள்ளி மாணவர்கள் சிலர் தங்களது செயல் திட்டங்களை இங்கே விளக்கினர். புதுப்புது ஐடியாக்கள் எல்லோரையும் கவர்ந்தன. ''மலைப்பாதைகளில் அதிகமா விபத்துகள் ஏற்படுது. அதனால, ஸ்பீட் பிரேக், லைட் கம்பம் இரண்டுக்கும் கனெக்ஷன் கொடுத்து, வளைவுகளில் விபத்துகள் ஏற்படாமத் தடுக்கலாம்'' என, அது குறித்து விளக்கினான் ஒரு சுட்டி. இதேபோல், ஆள் இல்லாத லெவல் கிராஸிங்கை ஆபத்து இல்லாமல் கடக்கும் ஐடியாவை விளக்கினான் அருண் டேவிட் என்ற மாணவன். ஏர்போர்ட்டில்-ஸீதீsஜீ;-ஸீதீsஜீ;சூட்கேஸ் பைகள், பொருட்களை எடுக்க எளிய வழிமுறையான பேக்கேஜ் சிஸ்டம் குறித்து பேசிய ஒரு மாணவிகள் குழு, ''மாற்றுத் திறனாளிகளுக்கு இது ரொம்ப உதவியா இருக்கும்'' என்றார்கள்.

''இந்திய மீனவர்கள் இலங்கை பகுதிக்குள்ளே போயிடறதுதானே பிரச்னை. அதைத் தவிர்க்க, நாங்க ஒரு செயல் திட்டம் செய்திருக்கோம்'' என்றும் சமூக அக்கறையுடன் சொல்கிறார்கள் கோபாலபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.

வெஸ்லி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ''தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் தண்ணீரில் புளோரைடோட தாக்கம் அதிகம் இருக்கறதால பல், எலும்பு தொடர்பான நோய்கள் அதிகமா வருது. இதைத் தடுக்கவும், ஒகேனக்கல் நீர் சூழற்சியிலும், காற்றாலைகளிலும் மின்சாரத்தை எடுத்து தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கு 145 கி.மீ. வரைக்கும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யலாம்'' என்று புதுமாதிரி விளக்கம் தந்தனர்.

சமூக பொறுப்புணர்வோடு செயல் திட்டங்களை வடிவமைத்து இருக்கும் சுட்டிகளின் எண்ணம் சபாஷ் போட வைத்தது!

க.நாகப்பன்
படம்: து.மாரியப்பன்

பலே பனானா !

குழந்தைகள் நன்கு படிக்க உதவும் பழம் எது என்று யாராவது கேட்டா, 'டக்’னு வாழைப்பழம் என்று சொல்லி விடுங்கள் ஃப்ரண்ட்ஸ்! காரணத்தை இதோ தெரிஞ்சுக்கங்க...

சபாஷ் சுட்டிகள் !

இதில் உள்ள பொட்டாசியம் உப்பு, நரம்புகளை... குறிப்பாக மூளைப் பகுதி நரம்புகளை விழிப்புணர்வுடன் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

வோழைப்பழத்தில் 'டிரைப் டோபன்’ என்ற அரிய அமினோ அமிலம் உள்ளது. இது மூளையில் 'செரோட்டனின்’ என்ற பொருளை சுரக்கவைப்பதால், மூளை கூர்மையுடன் செயல்பட்டு, கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அதிகரிக்கிறது.

«டென்னிஸ் வீரர்களும் வீராங் கனைகளும் மின்னல் வேகத்தில் வரும் பந்தை சரியாகக் கணித்து, விழிப்புணர்வுடன் ஆடுவதற்கு அவர்கள் விரும்பிச் சாப்பிடும் வாழைப்பழம் முக்கியக் காரணமாகும்!

 கிரேட் விவேக் !

''ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றைக் கண்டுபிடிக்கிறாங்க. நாமும் ஏதாவது கண்டுபிடிச்சுப் பேர் வாங்கணும்னு நினைச்சேன்'' என்கிறான், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படிக்கும் விவேக் சங்கர். இவன் கண்டுபிடித்து இருப்பது... கார், பஸ், லாரி, வேன், ஆட்டோ போன்ற வாகனங்களின் ஓட்டுனர்களுக்கான '8 பிட் கன்ட்ரோல் சர்க்யூட் விபத்துத் தடுப்புக் கருவி’

சபாஷ் சுட்டிகள் !

''சாலைப் பாதுகாப்பு வார விழா புரோகிராம் எங்க ஸ்கூல்ல நடந்தது. அதோடு, டெய்லி பேப்பர்ல பார்க்கும்  விபத்துச் செய்திகள் என் மனசைப் பாதிக்கும். இதுக்கு நாம் ஏதாவது செய்யணும்னு யோசிச்சேன். என் அம்மாவும் ஊக்கப்படுத்தினாங்க. எங்க இயற்பியல் ஆசிரியர் உதவியோட இந்தக் கருவியைக் கண்டுபிடிச்சேன். இதை வாகனத்தில் பொருத்தினால், வண்டி ஓட்டும்போது தூக்கம் வர்ற மாதிரி இருந்தாலோ அல்லது கண் இமைகளைத் தொட

ர்ந்து 10 செகன்ட் மூடினாலோ, ஸ்டியரிங்

சபாஷ் சுட்டிகள் !

வைபிரேட் ஆகும். அதோடு, அலாரமும் அடிக்கும். அதனால, டிரைவருக்கு முழிப்பு வந்துடும். என்னோட இந்த புராஜெக்ட் சக்ஸஸ் ஆனதும், எங்க பிரின்ஸிபல் சுகந்தி மேடம் பாராட்டினாங்க. மாவட்ட அளவுல நடந்த அறிவியல் கண்காட்சியில் செலக்ட் ஆனது. சென்னை ஆவடி, வேல்டெக் இன்ஜினியரிங் காலேஜ்ல ஸ்டேட் லெவல்ல நடத்தின அறிவியல் கண்காட்சியிலும் வெச்சேன். ஸ்டேட் முழுவதும் இருந்து 487 ஸ்டூடன்ஸ் கலந்துகிட்டாங்க. 20 ஸ்டூடன்ஸ் நேஷனல் லெவல்ல செலக்ட் ஆனாங்க. அதுல தூத்துக்குடி மாவட்டத்துல நான் செலக்ட் ஆனேன். பரிசும் 'புத்தாக்க அறிவியல் ஆய்வு’ விருதும் கிடைச்சுது'' என்கிறான்.

ஓவியம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி பேச்சுப் போட்டி களிலும் நிறைய பரிசுகள் வாங்கி இருக்கிறான். ''கலைத்துறையில் மட்டுமே ஆர்வமா இருந்த என்னை அறிவியலிலும் திருப்பிய எங்க ஸ்கூலுக்கு நன்றி!'' என்கிறான் விவேக் சங்கர்.

-சொ.இ.கார்த்திகயன்
படங்கள்: ஏ.சிதம்பரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism