Published:Updated:

இனிதாகக் க்ற்போம் தமிழ் !

பொள்ளாச்சி நசன் எஸ்.சாய் தர்மராஜ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

தாய்மொழியாம் தமிழ் மொழியைப் பிழையின்றி வாசிக்கும் திறனை மேம்படுத்திக்கொள்வது நம் அனைவரின் கடமை.

''என்னால் சுட்டி விகடன் இதழை முழுமையாக வாசிக்க முடியும். பிறகு, ஏன் இதைத்  தெரிந்துகொள்ள வேண்டும்?’ என்று நீங்கள் கேட்கலாம்.

தமிழை வாசிக்கச் சிரமப்படும் சுட்டிகள், தாய்மொழியில் சிறந்து விளங்க வழிகாட்ட உதவுவதே இந்தத் தொடரின் நோக்கம். இதில் சில எளிய பயிற்சி முறைகள் சொல்லித் தரப்படும். அதை, தமிழ் வாசிப்பில் பின்தங்கி இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு நீங்களே கற்றுக்கொடுக்கலாம். இப்போது பயிற்சியைத் தொடங்குவோம்.

இந்தப் பக்கத்தில், அட்டை 1, 2, 3 ஆகியவற்றில் ஆறு எழுத்துகள் காட்டப்பட்டு உள்ளன. ஒவ்வோர் அட்டையிலும் இரண்டு எழுத்துகள் உள்ளன. ஒன்று, உயிர்மெய் எழுத்து (ட) (tணீ). அடுத்தது, அதன் மெய்யெழுத்து (ட்) (வீt).

பெரும்பாலானவர்களுக்கு மெய்யெழுத்தில்தான் சிக்கல் ஏற்படும். எனவேதான் ஓர் எழுத்தைக் காட்டும்போதே அந்த எழுத்துக்குரிய மெய்யெழுத்தும் அருகிலேயே காட்டப்படுகிறது    (ட, ட் - ப, ப் - ம, ம்). எனவே, இரண்டு எழுத்துகளையும் இணைத்தே படிக்க வேண்டும்.

இனிதாகக் க்ற்போம் தமிழ் !

வெறும் எழுத்து எப்படி ஒலிக்கிறது? தலையில் புள்ளி வைத்தால் எப்படி ஒலிக்கிறது? என்று முதலில் மனதில் பதிய வைக்க வேண்டும். அப்படிச் செய்தால், மெய்யெழுத்துச் சிக்கல் வரவே வராது.

இனிதாகக் க்ற்போம் தமிழ் !

அடுத்து, இந்த மூன்று அட்டைகளையும் சிறப்பாகப் பயன்படுத்தும் முறையை அறிவோம்.

மூன்று அட்டைகளையும் வரிசையாகப் படிக்க வேண்டும். ஓர் அட்டையைப் படித்து முடித்த பிறகு, படித்த எழுத்துகளைச் செய்தித்தாளில் வட்டமிட வேண்டும். பிறகு, இரண்டாவது மற்றும் மூன்றாவது அட்டைகளின் கீழுள்ள 2A, 3A அட்டைகளில் இடம்பெற்றுள்ள எழுத்துகளைப் படிக்க வேண்டும்.

எழுத்துகளை வேகமாகப் படித்தால், உங்களுக்குள் பதியாது. மாறாக, குழப்பத்தையே ஏற்படுத்தும். எனவே, ஒரு நாளைக்கு இரண்டு எழுத்துகள் (ட, ட்) என்று திட்டமிட்டுப் படிக்க வேண்டும்.

இப்போது படிக்கத் தொடங்குவோம்...

இனிதாகக் க்ற்போம் தமிழ் !

முதல் அட்டையில் உள்ள இரண்டு எழுத்துகளையும் நன்கு உள்வாங்குங்கள். எழுத்தை எழுதிக்கொண்டே சொல்லிப் பழகுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு எழுத்துகளைப் படித்தாலே போதும். இரண்டு எழுத்துகளும் மனதில் பதியும் வரை சொல்லிக்கொண்டே எழுதிப் பழக வேண்டும். முதல் நாள் முடிந்தது.

(ஒரு நாளில் நன்றாகப் பதியவில்லை என்றால், இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்)

இரண்டாம் நாள், பழைய செய்தித்தாளை எடுத்து, அதில் நீங்கள் கற்றுக்கொண்ட எழுத்தைக் கண்டுபிடித்து வட்டமிடுங்கள். வரிசையாக ஒவ்வொரு வரியாகப் பார்த்து, கற்ற எழுத்து வரும்போது வட்டமிடுங்கள். இப்படி 10 எழுத்துகளை நீங்கள் செய்தித்தாளில் கண்டு பிடித்தீர்கள் என்றால், நீங்கள் வெற்றிபெற்றுவிட்டீர்கள்!

இப்போது, அடுத்த அட்டையை நீங்கள் படிக்கத் தொடங்கலாம். அட்டை 2A-வில், நீங்கள் கற்ற எழுத்துகளின் சொற்கள் அல்லது இரண்டு எழுத்துகள் தரப்பட்டு உள்ளன.

இனிதாகக் க்ற்போம் தமிழ் !

செய்தித்தாளில் வட்டமிட்ட பிறகு, அட்டை 2A -வில் உள்ளவற்றை நீங்களாகவே இணைத்துப் படிக்க வேண்டும். தமிழ் ஓர் ஒலியன் மொழி  (Phonetic language). எனவே, இரண்டு எழுத்துகளை இணைத்து ஒலித்தால், அதற்குரிய ஒலிப்பு முறை தானாகவே வரும். சொல்லிப் பாருங்கள். இதனை மனப்பாடமாகப் படிக்கக் கூடாது. இயல்பாகச் சொல்லிப் பாருங்கள்.

2A  மற்றும் 3A அட்டைகளில் உள்ள எழுத்துகளை நீங்களாகவே இணைத்துப் படித்தால், மகிழ்ச்சியாகவும் இருக்கும். உங்களுக்குள் அந்த எழுத்துகள் ஆழமாகவும் பதியும்.

            (தொடர்ந்து கற்போம்...)    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு