Published:Updated:

அழகாக அறிவோம் ஆங்கிலம் !

அழகாக அறிவோம் ஆங்கிலம் !

பிரீமியம் ஸ்டோரி
அழகாக அறிவோம் ஆங்கிலம் !
##~##

ஆங்கில மொழி அறிவின் அவசியம்பற்றி நம் அனைவருக்குமே தெரியும். எல்லாருக்குமே 26 ஆங்கில எழுத்துகளை அடையாளம் தெரியும். ஆனால், நம்மில் சிலருக்கு வாசிப்பதிலும் எழுதுவதிலும் பிரச்னை இருக்கலாம்... கவலையை விடுங்கள்.

அழகாக அறிவோம் ஆங்கிலம் !

நாம் பின்பற்றப்போகும் பாதையில் பயணிக்கத் தொடங்கினால், அனைவராலும் ஆங்கிலத்தில் வாசிக்கவும் எழுதவும் முடியும். தன்னம்பிக்கையோடு தொடங்குவோம்.

Pronoun(ப்ரொநவுன்) எனப்படும் பிரதிப் பெயர்ச்சொற்கள் எல்லா வாக்கியங்களிலும் திரும்பத் திரும்ப வரக்கூடியது. இந்தச் சொற்களை வாசிக்கத் தெரிந்துகொள்ளும்போது, நமக்குள் தன்னம்பிக்கை வரும். நம்மால் வாசிக்க முடியும் என்ற எண்ணம் வரும். இதை ஆறு அட்டவணைகள் மூலம் பயிற்சி செய்வோம்.

மேலே உள்ள முதல் அட்டவணையில், I (ஐ) என்பது 'நான்’ என்ற பொருள் தரும் ஒரே எழுத்து. I-க்கு அருகிலுள்ள கட்டங்களில் I (ஐ) என்று சொல்லிக்கொண்டே எழுதவேண்டும். We (நாம்) என்பதை W (டபிள்யூ) e(இ) = We (வீ) என்று சொல்லிக்கொண்டே இரண்டாவது வரிசையில் உள்ள கட்டங்களில் எழுதிப் பழகவேண்டும்.

மேலும், ஒரு நோட்டுப் புத்தகத்தில் உங்களுக்குத் தேவையான அளவில் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அமைதியாக எழுதாதீர்கள். வார்த்தையைச் சொல்லிக்கொண்டே எழுதுங்கள்.

இந்தக் கற்றல் அட்டவணைப் பயிற்சியை மேற்கொள்ளும்போது, உங்கள் மனதில் ஆழமாகப் பதியும். இந்தப் பயிற்சிக்குப் பிறகு, ஓர் ஆங்கில நாளிதழின் ஒரு பக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில், I மற்றும் We ஆகிய இரண்டு சொற்களும் எங்கெல்லாம் இருக்கிறதோ, அவற்றைப் பென்சிலால் வட்டமிடுங்கள். முடிவில், இந்த இரண்டு சொற்களையும் பார்த்தவுடனேயே சொல்லும் திறன் உங்களுக்குள் வந்துவிடும்.

அழகாக அறிவோம் ஆங்கிலம் !

இதேபோன்று, இந்தப் பக்கத்தில் உள்ள ஐந்து அட்டவணைகளிலும் பயிற்சி செய்யுங்கள். ஓர் அட்டவணைக்கு இரண்டு நாட்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது, Pronoun சொற்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் வரை நடைபெற வேண்டும்.

அழகாக அறிவோம் ஆங்கிலம் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு