Published:Updated:

சுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா

சுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா

பிரீமியம் ஸ்டோரி

பிரியாணியின் கதை!

சுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா

விருந்து என்றதும் பலருக்கும் பிரியாணி நினைவுக்கு வரும். இது, பாரசீக வார்த்தையான பெர்யான் (Beryan) என்பதிலிருந்து வந்தது. 'பெர்யான்’ என்றால், பொரிக்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட அரிசி என்று அர்த்தம். இது, முதன்முதலில் முகலாயர்களின் காலத்தில் தயாரிக்கப்பட்டது. தாஜ்மஹால் புகழ் மும்தாஜ், தனது படை வீரர்களுக்கு பிரியாணியை ஊட்டச் சத்து உணவாக அளிக்க உத்தரவிட்டாராம்.

அணில்!

சுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா

அணிலை ஆங்கிலத்தில் ஸ்குரெல்  (Squirrel) என்பார்கள். இது, கிரேக்க மொழிச் சொல். 'ஸ்கிரோஸ்’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு 'நிழல்’ என்று பொருள். 'அவுரா’ என்றால், வாலைக் குறிக்கும். இந்த இரண்டும் இணைந்ததுதான் 'ஸ்குரெல்’. கிரேக்கத் தத்துவ மேதை அரிஸ்டாட்டில், தனது நூல்களில் அணில்கள் பற்றிக் குறிப்பிடும்போது, 'நிழலில் தனது வாலுடன் உட்கார்ந்திருக்கும் பிராணி’ என்று எழுதியிருக்கிறார்.

நீல பால் காளான்!

சுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா

இந்த அழகான காளானின் பெயர், லாக்டாரியஸ் இண்டிகோ (Lactarius Indigo). நீல பால் காளான் (Blue Milk Mushroon) என்றும் சொல்வார்கள். வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா, மத்திய அமெரிக்காவில் பரவலாகக் காணப்படுகிறது. இலையுதிர் பகுதிகளில் வளரும். இந்தக் காளானை வெட்டும்போது வெளிவரும் பால், இண்டிகோ நிறத்தில் இருக்கும். இதை, மெக்ஸிகோ மற்றும் சீனாவில்  விரும்பி உண்கிறார்கள்.

விண்வெளி அபாயம்!

சுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா

நம்மில் சிலர் பக்கத்து வீட்டாருடன்  சண்டையிடுவார்கள். சில சமயம் அது வெட்டு, குத்து வரை போய்விடும். இரண்டு வீடுகளுக்கே இப்படி என்றால், விண்ணில் நடக்கும் மோதலின் விளைவு எப்படி இருக்கும்?

நம் பூமி உள்ளிட்ட கிரகங்கள் அடங்கிய பால்வெளி மண்டலம், தனது அண்டை வீடான, ஆண்ட்ராமீடா கேலக்ஸி (Andromeda galaxy) மீது மோதப்போகிறது. இதனால், சூரியன் உட்பட நட்சத்திரங்கள் அங்குமிங்கும் வீசியெறியப்படும். உடனே பதற வேண்டாம். இது நடக்க இன்னும் 400 கோடி ஆண்டுகள் ஆகுமாம்.

நோட் திஸ் நோட்டு!

நமது ரூபாய் நோட்டுகளின் பின் பக்கம் உள்ள படங்கள் சொல்லும் செய்தி...

சுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா

5 -விவசாயத்தின் பெருமை.

சுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா

10 - விலங்குகள் பாதுகாப்பு. (புலி, யானை, காண்டாமிருகம்.)

சுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா

20 - கடற்கரை அழகு. (கோவளம்)

சுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா
சுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா

50 - அரசியல் பெருமை. (இந்திய நாடாளுமன்றம்)

சுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா

100  - இயற்கையின் சிறப்பு. (இமயமலை)

சுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா

500 - சுதந்திரத்தின் பெருமை.        (தண்டி யாத்திரை)

சுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா

1000 - இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.

பாசிட்டிவ்!

பள்ளி நாடகத்தில் நடிப்பதற்கு அந்தச் சிறுவன் மிகவும் ஆவலாக இருந்தான். தேர்வுக் குழு முன் நடித்தும் காட்டினான். இரண்டு, மூன்று வாய்ப்புகள் தரப்பட்டன. ஆனாலும், அவனுடைய நடிப்பு தேர்வுக் குழுவினரை ஈர்க்கவில்லை. அவனை நிராகரித்துவிட்டார்கள். இதை அறிந்து அவன் பெற்றோர் வருந்தினர்.

சுட்டி நியூஸ் - இது எங்க ஏரியா

பள்ளி ஆண்டு விழாவில் அந்த நாடகம் அரங்கேறியது. அவன் பார்வையாளனாக  இருந்தான். நாடகம் முடிந்து வீடு திரும்பிய அவன், பெற்றோரிடம் இப்படிச் சொன்னான். ''எங்கள் பள்ளி நாடகத்தில் நடித்தவர்களைத் கைதட்டி உற்சாகப்படுத்தும் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு