Published:Updated:

ஜோராக ஆடலாம் டாபூ !

ஜோராக ஆடலாம் டாபூ !

பிரீமியம் ஸ்டோரி
##~##

விளையாட்டு...

ஜோராக ஆடலாம் டாபூ !

விளையாட்டுகள் உற்சாகத்தைத் தரும் பொழுதுபோக்கை மட்டும் அளிப்பது இல்லை. அதன் மூலம் பல நல்ல விஷயங்களையும் கற்றுக்கொடுக்கிறது. அதனால்தான் நமது முன்னோர்கள் சதுரங்கம், பல்லாங்குழி என்று பல விளையாட்டுகளை   உருவாக்கினார்கள். இந்த விளையாட்டுகள் கவனக் குவிப்பு, பிரச்னைகளைச் சமாளிக்கும் திறன், புதிய வழிமுறை அறிவது எனப் பல விஷயங்களுக்குத் தூண்டுகோலாக உள்ளன.

அந்த வகையில் உங்கள் சிந்தனைக்கும் பொழுதுபோக்குக்கும் விருந்து படைக்கும் விளையாட்டுகளைப் பார்ப்போம்.    

முதலில்... டாபூ! (Taboo)

பல நேரம் நீங்கள் நண்பர்களுடன் வார்த்தைகளையூகிக்கும் விளையாட்டுகளை ஆடியிருப்பீர்கள். டாபூவும் அப்படி ஒரு சுவாரஸ்யமான விளையாட்டுதான். இதை உருவாக்கியது, உலகின் மதிப்புமிக்க பொம்மை நிறுவனங்களில் ஒன்றான ஹாஸ்ப்ரோ (Hasbro).

ஆங்கிலத்தில் டாபூ என்றால், 'தடை விதிக்கப்பட்ட’ என்று பொருள். இந்த விளையாட்டில் 252 சீட்டுகள் இருக்கும். ஒவ்வொரு சீட்டிலும் 6 வார்த்தைகள் இருக்கும். முதலாவது வார்த்தைக்கு யூகிக்கும் வார்த்தை (guess word) என்று பெயர். மற்ற 5 வார்த்தைகளும் டாபூ வார்த்தைகள்.

ஜோராக ஆடலாம் டாபூ !

டாபூ விளையாட, முதலில் நாம் இரண்டுகுழுக்களாகப் பிரிந்துகொள்ள வேண்டும். முதல் குழுவில் உள்ள ஒருவர், (அவரை MR A என்று வைத்துக்கொள்வோம்) ஒரு சீட்டை எடுப்பார். அதன் மூலம் தனது குழுவில் உள்ள மற்றவர்களை  யூகிக்கும் வார்த்தையைக் கண்டுபிடிக்கவைக்க வேண்டும்.   விக்ஷீ கி அந்த வார்த்தையைப் பற்றி தனது குழுவினர்களுக்கு விவரிக்கலாம். ஆனால், அப்படி விவரிக்கும்போது டாபூ வார்த்தைகள் இல்லாமல் விவரிக்க வேண்டும். அதுதான் இந்த விளையாட்டின் முக்கியமான விதி.

உதாரணமாக, யூகிக்கும் வார்த்தை Tidal wave (அலை) என்று வைத்துக்கொள்வோம். அதற்கான டாபூ வார்த்தைகள் sea (கடல்), tsunami (சுனாமி ), volcano(எரிமலை), earthquake(நிலநடுக்கம்), destroy(அழிவு) என்றிருக்கும்.

இப்போது Mr A   தன் குழுவை, அலை என்ற வார்த்தையைச் சொல்லவைக்க வேண்டும். ஆனால், டாபூ வார்த்தையை உபயோகிக்கக் கூடாது. உதாரணமாக, 'திரும்பத் திரும்ப கடலில் இருந்து வந்துபோவது' என்று சொன்னால், நீங்கள் விளையாட்டில் இருந்து விலக்கப்படுவீர்கள். ஏனெனில், கடல் மற்றும் கடலில் என்பது டாபூ வார்த்தை. அதற்குப் பதிலாக '________(டேஷ்) பாயுதே கண்ணா' என்றோ, 'பௌர்ணமி நேரத்தில் இதன் அளவு அதிகமாகும்'' என்றோ துப்புக் கொடுக்கலாம்.

ஜோராக ஆடலாம் டாபூ !

சிறிய சுட்டிகள் எளிமையான வார்த்தைகளுடனும் (மிருகங்கள் டாபூ, நகரங்கள் டாபூ என்பதுபோல்), பெரிய சுட்டிகள் கொஞ்சம் கடுமையான விதிகளுடனும் இந்த விளையாட்டை ஆடி மகிழலாம்.

அடுத்த வாரம்... மற்றும் ஒரு புதிய விளையாட்டு!

இந்த விளையாட்டுகளை நமக்கு அளிப்பவர் சந்தோஷ் குமார். 'பம்பரம்’ (www.bambaram.in) 160; என்ற விளையாட்டு நூலகம் நடத்துபவர். போர்டு கேம்ஸ், கார்டு கேம்ஸ், புதிர்கள் என்று சுமார் 700 விளையாட்டுகளைத் தமது நூலகத்தின் மூலம் நடத்திவருகிறார். அவற்றில் சில சுவாரஸ்யமான விளையாட்டுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு