Published:Updated:

துளித் துளியாய்...

தண்மதி திருவேங்கடம்

##~##

'உங்களுக்கு திடீரென்று 1,000 ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? எப்படி எல்லாம் செலவழிப்பீர்கள்?’ என்று சென்ற இதழில் ஒரு புராஜெக்ட் கொடுத்திருந்தேன். அதற்கு மூன்று விதமான பதில்களை இப்போது தருகிறேன்.

1.''கடைக்கு ஓடிப்போய் எனக்கு வேண்டியதெல்லாம் வாங்கிவிட்டேன். பிஸ்கட், சாக்லேட், பென்சில், ரப்பர், காஸ்ட்லி பேனா, டாய்ஸ்... பர்ஸ் காலி!''

2.''கொஞ்சம் புக்ஸ், கொஞ்சம் டாய்ஸ் வாங்கினேன். மீதி 400 ரூபாயை உண்டியலில் போட்டுவெச்சிருக்கேன்.''

3. ''நான் அடுத்த வருஷம் டிராயிங் கேம்ப் சேரப்போறேன். அதுக்கு 1,500 ரூபாய் ஆகும். இப்போ கிடைச்ச தொகையை போஸ்ட் ஆபீஸ்ல சேவிங் அக்கவுன்ட்ல போட்டுருவேன். அடுத்த வருஷம் கொஞ்சம் வட்டி சேரும். அதுக்குள்ளே மீதித் தொகையைச் சேமிச்சுருவேன்.''

நீங்கள் எழுதியுள்ள பதில், இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றுடன் பொருந்தும்.

முதலாவதாக... உங்களுக்குக் கிடைத்த தொகை எல்லாவற்றையும் செலவு செய்துவிடுவது. இது சரியான அணுகுமுறை அல்ல.

இரண்டாவது... அப்போதைய முக்கியத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட்டு, மீதமுள்ள தொகையைச் சேமித்துவைப்பது. நல்ல விஷயம்.

மூன்றாவது... எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, தற்போது கிடைத்த தொகையை சேமிப்பதுடன், அதைப் பெருக்குவதற்கு முதலீடுசெய்வது என்பது பாராட்டுக்கு உரியது.

நான்காவதாகவும் ஒன்று உண்டு. தனது தேவைக்குப்போக, பிறருக்கும் உதவி செய்து, மீதிப் பணத்தைச் சேமிப்பது. இது சிறந்த அம்சம்.

ஆக, நம்மிடம் பணம் இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம்?

றீவாங்கலாம் அல்லது செலவுசெய்யலாம்.

துளித் துளியாய்...

செலவுசெய்தது போக, எஞ்சியதைச் சேமிக்கலாம்.

எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு முதலீடு செய்யலாம்.

சேமிப்புடன் நமது தேவையைப் பூர்த்திசெய்வதுடன், பிறருக்கு உதவியும் செய்யலாம்.

உங்களின் பதில், இரண்டு அல்லது மூன்றாவதாக இருந்தால், ஒரு சபாஷ். ஒருவேளை, உங்களது தேர்வு நான்காவதாக இருந்தால், நீங்கள் சூப்பர் சுட்டிதான்.

சேமிப்பு விஷயத்தில் பலரும் தடுமாறும் இடம் ஒன்று உண்டு. ஒரு நல்ல செஸ் போர்டு வாங்க வேண்டும் என்று பணத்துடன் கடைக்குப் போவோம். ஆனால், அந்தக் கடையில் இருந்து குட்டிக் குட்டிப் பொருட்களை வாங்கிவிட்டு, செஸ் போர்டு வாங்கக் காசு போதாமல் திரும்புவோம். இதுதானே நம்மில் பலருடைய பிரச்னை!

கடையில் புதிது புதிதாகப் பொருள்கள் வந்துகொண்டேதான் இருக்கும். புது டிசைன்களில், குறைந்த விலையில் கிடைக்கும். இவற்றை எல்லாம் பார்த்து, உங்கள் கவனம் சிதறுகிறதா? உங்களுக்கு ஓர் ஐடியா சொல்கிறேன்.

எப்போதெல்லாம் மனம் அலைபாய்கிறதோ, அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை இரண்டு மூன்று முறை மனதுக்குள் சொல்லுங்கள்... 'குழப்பமாக இருந்தால் இப்போது வாங்க மாட்டேன்’

இப்படிப் பழக ஆரம்பித்தால், கொஞ்சம் கொஞ்சமாகக் கவனம் ஒருமுகப்படும். கையில் கிடைக்கும் பணத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற பக்குவம் கிடைக்கும்.

சரி, இன்றைய புராஜெக்ட்?

நீங்கள் இதுவரை சேமித்துவைத்த பெரிய தொகை எவ்வளவு? அதை எப்படியெல்லாம் செலவுசெய்தீர்கள். ஒரு பேப்பரை எடுங்கள். எழுதுங்கள். காத்திருங்கள்.

(சேமிப்போம்...)

 வழிகாட்டும் வாரன் பஃபெட்!

பணத்தைச் செலவு செய்வதுபற்றி, உலகின் மிகப் பெரிய பணக்காரர் வாரன் பஃபெட் (கீணீக்ஷீக்ஷீமீஸீ ஙிuயீயீமீtt) கூறும்போது, ''தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவித்துக்கொண்டிருந்தீர்கள் என்றால், பின்னால் தேவையான பொருள்களை விற்க நேரிடலாம்'' என்கிறார்.

அவரே சேமிப்பதுபற்றிச் சொல்லும்போது, ''செலவுசெய்தது போக மீதியை சேமிக்காதீர்கள், சேமித்தது

துளித் துளியாய்...

போக மீதியைச் செலவு செய்யுங்கள்'' என்கிறார்.

''ஒருவர், இன்றைக்கு மர நிழலில் உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டிருக்கிறார் என்றால், ரொம்ப நாட்களுக்கு முன்னாலேயே அவர் அந்த மரத்தை நட்டுவைத்திருக்கிறார் என்று அர்த்தம்'' என்றும் முதலீடு பற்றி அவர் சொல்கிறார்.

தன் சொத்தில் 99 சதவீதத்தைத் தானம் செய்ததுபற்றி கூறும்போது, '6 பில்லியன் மக்கள், நமக்குக் கிடைத்த வசதிகள் எதுவும் இல்லாமல் வறுமையில் போராடும்போது, இந்தப் பணம் அவர்களுக்குப் பயன்படும் என்று எண்ணிப்பார்க்கும்போது, என் பரம்பரைக்காக சொத்து சேர்த்துக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை' என்று நமக்கு வழிகாட்டுகிறார் வாரன் பஃபெட்!

அடுத்த கட்டுரைக்கு