Published:Updated:

பலே ஆட்டம் பிக்ஷனரி !

சந்தோஷ் குமார் எம்.உசேன்

##~##

வணக்கம் நண்பர்களே...

சென்ற இதழில் வெளியான 'டாபூ’ விளையாட்டை உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி இருப்பீர்கள். இப்போது நாம் பார்க்கப்போவது பிக்ஷனரி (Pictionary) விளையாட்டு.

இதுவும் டாபூ போல் வார்த்தைகளை யூகிக்கும் விளையாட்டுதான். 210 சீட்டுகள் இருக்கும். இரண்டு குழுக்களாகப் பிரிந்து விளையாட வேண்டும். வித்தியாசம் என்னவென்றால், இந்த விளையாட்டில் உங்கள் ஓவியத் திறமைக்கும் வேலை இருக்கும். ஒருவர் வரைந்துதான் தனது குழுவில் இருக்கும் மற்றவருக்குத் துப்புக்கொடுக்க வேண்டும்.

பிக்ஷனரி விளையாட்டு, போர்டு கேம்ஸ் வகையைச் சார்ந்தது. றிவீநீtuக்ஷீமீ (படம்) மற்றும் ஞிவீநீtவீஷீஸீணீக்ஷீஹ் (அகராதி) என்ற இரண்டு சொற்களிலிருந்து இந்த வார்த்தை தோன்றியது. இந்த விளையாட்டின் நோக்கம், படங்களின் மூலம் புதிய புதிய வார்த்தைகளை அறிந்துகொள்வதுதான். காட்சியாக ஒரு வார்த்தையை அறியும்போது அது எளிதில் மனதில் பதியும். நீண்ட நாட்களுக்கு மறக்காது.

பெங்குவின் என்ற வார்த்தை உங்களுக்கு வந்திருந்தால், பெங்குவின் பறவையை நேரடியாக வரையலாம். ஒருவேளை உங்கள் குழுவுக்கு பெங்குவின் பற்றித் தெரியாமல் இருந்தால், அந்த வார்த்தையை இரண்டாகப் பிரித்து, பெண் மற்றும் குவி(யி)ன் என்று வரையலாம்.

பலே ஆட்டம் பிக்ஷனரி !

இந்த விளையாட்டில் ஆரம்பச் சதுரத்தில் இருந்து பலவகைச் சொற்களை வரைந்துகாட்டி, இறுதிச் சதுரத்துக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு நிறச் சதுரமும் ஒவ்வொரு வகையான சொற்களைக் குறிக்கும். மனிதர்கள், இடங்கள், மிருகங்கள், பொருள்கள், செயல்கள் என்று பல சவால்களை நீங்கள் சந்திக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் வரைந்துகாட்டி அந்தச் சொல்லை உங்களுடைய குழுவினரை யூகிக்கவைக்க வேண்டும்.

உதாரணமாக, விளையாட்டின் நடுவில் நீங்கள் மஞ்சள் நிற சதுரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது நீங்கள் 210 சீட்டுகளில் ஒன்றை எடுத்து, மஞ்சள் நிறத்தில் உள்ள சொல்லை, வரைந்து காட்ட வேண்டும்.

பலே ஆட்டம் பிக்ஷனரி !

இதற்காக விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன்பே உங்கள் குழுவினருடன் பேசி, பலவகைச் சொற்களுக்கான அடையாளங்கள், அதற்கான குறியீடுகளைப் பற்றி விவாதிக்க வேண்டும். ஆங்கிலத்தில் சொல்ல, முதல் பாதி வார்த்தை, இரண்டு வார்த்தையை இணைக்க, எல்லாவற்றுக்கும் நீங்கள் அடையாளங்களை உருவாக்க வேண்டும். இல்லையெனில் விளையாட்டு முடிவதற்குள் உங்களுக்கு வயதாகிவிடும். மேலும் முக்கியமான விதி: வார்த்தையாக எழுதுவது மற்றும் பேசுவது இந்த விளையாட்டில் கூடாது.

இந்த விளையாட்டில் இன்னும் பரபரப்பை ஏற்படுத்த, சில வழிகள் உண்டு. கண்களைக் கட்டிக்கொண்டு வரைவது, மாற்றுக் கையினால் வரைவது (வலது கைப் பழக்கம் உள்ளவர்கள், இடது கையால் வரைவது) என்று பல விதமாக விளையாடி மகிழலாம்.

பலே ஆட்டம் பிக்ஷனரி !

அடுத்த முறை இன்னும் ஒரு புதிய விளையாட்டுடன் சந்திப்போம்.

அடுத்த கட்டுரைக்கு