Published:Updated:

விருது ஐஸ்வர்யா !

விருது ஐஸ்வர்யா !

விருது ஐஸ்வர்யா !

விருது ஐஸ்வர்யா !

Published:Updated:

 'விருது' ஐஸ்வர்யா !

##~##

'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வா... குடியரசுத் தலைவர் கையால் விருதா?’ என்ற சிக்கல் எழுந்தபோது, தேர்வை ஒதுக்கிவிட்டு, விருது வாங்குவதற்குச் சென்றிருக்கிறார் ஐஸ்வர்யா.

திண்டுக்கல், புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா, கடந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இரண்டு தேர்வுகளை எழுதவில்லை. காரணம் என்ன?

''எனக்கு சிறு வயதிலிருந்தே தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம். 5-ம் வகுப்பு படிக்கும்போதே சிறந்த தமிழ் மாணவி என்ற பட்டம் வாங்கியிருக்கேன். என் கையெழுத்தும் அழகா இருக்கும். அதனால், எங்கே கட்டுரைப் போட்டி நடந்தாலும் டீச்சர்ஸ் என்னை அனுப்பிவைப்பாங்க. 9-ம் வகுப்பு படிக்கும்போது டாடா நிறுவனம் சார்பில் எட்டு மொழிகள், 150 நகரங்கள், 5,000 பள்ளிகள் எனத் தேசிய அளவில் கட்டுரைப் போட்டி நடந்தது. உடனடியாகத் தலைப்புக் கொடுத்து, அரை மணி நேரத்தில் எழுதச் சொல்வாங்க. அதுக்காக நிறைய சப்ஜெக்ட்டில் புத்தகங்களைப் படிச்சுத் தயார்செய்துட்டுப் போனேன். சுற்றுச்சூழல் தலைப்பைக் கொடுத்தாங்க.

விருது ஐஸ்வர்யா !

அதில், நான் எழுதின கட்டுரை தமிழில் சிட்டி லெவல், ஸ்டேட் லெவல்னு தேர்வாகிப் பரிசு கொடுத்தாங்க. பிறகு, தேசிய அளவில் தேர்வாகி, குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதுனு சொன்னப்போ நம்பவே முடியலை. விருது வாங்கும் தேதியில் பொதுத்தேர்வு வந்துருச்சு. மாவட்டக் கல்வி அதிகாரியைச் சந்திச்சு விஷயத்தைச் சொன்னேன். அவர் என்னை உற்சாகப்படுத்தினார். 'நீ விருது வாங்கிட்டு வா. விடுபடும் தேர்வுகளை ஜூனில் நடக்கும் உடனடி சிறப்புத் தேர்வில் எழுது’னு சொன்னார். சந்தோஷத்தோடு டெல்லிக்குப் போனேன். பல மாநிலங்களிலிருந்தும்  வந்திருந்த மாணவர்களோடு நிறைய  விஷயங்களைப் பேசினேன். ஜனாதிபதி மாளிகைத் தோட்டம், பிரிட்டிஷ் அரசின் புகைப்படக்காட்சி எனச் சுற்றிப் பார்த்தேன். ஜனாதிபதி கையால் விருது வாங்கினேன். எக்ஸாமை மறுபடியும் எழுதலாம். ஆனால், என் தனித் திறமைக்காகக் கிடைச்ச இந்த நல்ல சந்தர்ப்பம் மறுபடியும் கிடைக்குமா?'' என்று புன்னகைக்கிறார் ஐஸ்வர்யா.

விருது ஐஸ்வர்யா !

விடுபட்ட தேர்வுகளை எழுதிய ஐஸ்வர்யாவுக்கு  வெற்றிதான்.

வீ.சிவக்குமார் கா.பெனாசிர்

'தேதி'நரேன் !

 ''ஹாய் நரேன்... 2014 ஏப்ரல் 24-ம் தேதி என்ன கிழமை?''

கேட்டதும் பேனா, பேப்பர் என எதையும் தேடாமல், விரல்களில் கணக்குப் போட்டு சில நொடிகளில்... 'வியாழக்கிழமை’ எனச் சொல்லி, வியப்பில் ஆழ்த்துகிறார் நரேன்.

சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த நரேன், விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். 2012-லிருந்து 2015 வரை தேதியை மட்டும் சொன்னால், கிழமையைச் சரியாகச் சொல்லிவிடுகிறான். நாம் கேள்வியைக் கேட்டவுடன், பதிலைச் சொல்ல வேண்டும் என்ற அவனது துடிப்பை உணர முடிகிறது.

விருது ஐஸ்வர்யா !

''எண்களையும் மாதத்தின் பெயர்களையும் ஞாபகம் வெச்சிக்கிறது எனக்குப் பிடிக்கும். விளையாட்டாதான் ஆரம்பிச்சேன். இப்போ நிறையப் பேர் பாராட்டுறதைப் பார்த்து இதை இன்னும் நல்லா செய்யணும்னு தோணுது. கூடிய சீக்கிரமே வந்து பாருங்க அங்கிள்'' என்று மழலைச் சிரிப்புடன் சொல்கிறான்.

நீ கலக்கு நரேன்!

- க.பிரபாகரன் படம்: செ.திலீபன்

'ரயில்' சர்வேஷ் ! 

ஓடும் ரயிலுக்கு இணையாக ஓடியாடி, விளையாடும் வயதில், ரயில்களைப் பற்றிய தகவல்களைத் தினந்தோறும் அப்டேட் செய்வதையே தன்னுடைய பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார் புதுப் பெருங்களத்தூர் சர்வேஷ் சந்திரசேகரன்.

சென்னை, நடுவீரப்பட்டு குட் எர்த் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் சர்வேஷ§க்கு, இந்தியாவிலுள்ள ரயில்களின் நேரம் மற்றும் பாதைகள் அனைத்தும் அத்துபடி. தினந்தோறும் ஏதாவது ஒரு, ரயிலைப் பற்றி தெரிந்துகொள்ளவில்லை என்றால் தூக்கமே வராது என்கிறார் அம்மா புவனேஸ்வரி.

''நாங்க அடிக்கடி டூர் போவோம். ஐந்து  வயதில் ரயில்ல ஏற ஆரம்பிச்சேன்.  இப்ப அது என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்டாவே மாறிடுச்சு'' என்கிற சர்வேஷ், இந்தியாவில் தினந்தோறும் போகும் ரயில், வாராவாரம் போகும் ரயில் என அனைத்தையும் மனப்பாடமாக அருவியைப் போல் கொட்டுகிறார்.

விருது ஐஸ்வர்யா !

''இப்போ எல்லாம் நாங்கள் ரயிலில் போகும்போது, அடுத்து வரப்போகும் அத்தனை ரயில் நிலையங்களையும் தெளிவாகச் சொல்லிவிடுவான். அதோடு, அந்தந்த ரயில் நிலையங்களில் வேறு எந்தெந்த ரயில், எத்தனை மணிக்கு வந்து நிற்கும் என்பதையும் சொல்ல ஆரம்பிச்சபோதுதான், அவனுடைய திறமை எங்களுக்குத் தெரியவந்தது'' என்று பெருமையோடு சொல்கிறார் சர்வேஷின் அப்பா சந்திரசேகரன்.

எந்தெந்த ரயில்களில் ஸ்லீப்பர், ஏ.சி. வசதிகள் இருக்கு என்பதைப் பற்றிச் சொல்லும் சர்வேஷ§க்கு, ரயில் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றியும் தெரியுமாம். ''மைசூர் டு பெங்களூரு போகக்கூடிய ரயில் ராமநகரம் வரை மின்சார ரயிலாகவும், அதன் பின்னர் டீசல் ரயிலாகவும் மாறுகிறது. அதே மாதிரி, சென்னை டு விழுப்புரம் வரை மின்சார ரயிலாகவும், பின்னர் திருச்சி வரை டீசல் ரயிலாகவும் மாறிவிடுகிறது'' என மிக நுணுக்கமாகத் தன்னுடைய விரல் நுனியில் விவரங்களை  வைத்திருக்கும் சர்வேஷ், தமிழ்நாட்டின் ரயில் பாதைகளை எல்லாம் இன்னும் படுவேகமாகச் சொல்கிறார்.

மேலும் ''உலகத்தின் பல நாட்டு ரயில்வே துறையோடு ஒப்பிடும்போது, நம் இந்திய ரயில்வேயில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தணும் அங்கிள். அப்பத்தான் இன்னும் சிறப்பான சேவையை மக்களுக்குக் கொடுக்க முடியும்'' என்கிறார்.

எந்த நேரமும் ரயில்களைப் பற்றியே சிந்திக்கும் சர்வேஷ், மின்சாரத்தை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பதைப் பற்றியும் சிந்தித்துவருகிறார். அதற்காகவே, தன்னுடைய வீட்டில் மின் சேமிப்பை மிகத் தீவிரமாகப் பின்பற்றியும்வருகிறார். எங்கே ஆரம்பித்தாலும் பேச்சு ரயிலில்தான் முடிகிறது. ''ரயில் பயணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை ஏன் யாருமே சரியாகக் கடைபிடிப்பது இல்லை அங்கிள்?'' என்று அக்கறையாகக் கேட்கிறார் சர்வேஷ்.

எதிர்காலத்தில் புதுவிதமான ரெயிலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது சர்வேஷின் ஆசையாம்.

க.பிரபாகரன் பீரகா வெங்கடேஷ்