Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

Published:Updated:
##~##

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வாழும் இந்திய வம்சாவளியான 18 வயது இஷாகரே, 20 விநாடிகளில் செல்போனைச் சார்ஜ் செய்யும் ஒரு சார்ஜரை உருவாக்கியுள்ளார். இவர், இன்டெல் சர்வதேச அறிவியல் போட்டியிலும் முதல் பரிசை வென்றுள்ளார். இவருடைய இந்தக் கண்டுபிடிப்புக்காக 50,000 அமெரிக்க டாலரையும் பரிசாகப் பெற்றுள்ளார்.

வழக்கமான ரீ-சார்ஜபிள் பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில், 10,000 முறைகளுக்கும் மேலாக பேட்டரிகளை இதில் ரீ-சார்ஜ் செய்யலாம். கேமரா மற்றும் சில எலெக்ட்ரானிக் கருவிகளிலும் இந்தச் சார்ஜரைப் பயன்படுத்தலாம்.

பென் டிரைவ் !

நிக் வாலெண்டா (Nik Wallenda) எனும் 34 வயது அமெரிக்கர், ஏழு கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார். சமீபத்தில், கிராண்ட் கன்யான் (Grand Canyon)பள்ளத்தாக்கின் இரு முனைகளில் இரண்டே இன்ச் பருமன்கொண்ட கயிற்றில் 1,400 அடி தூரத்தை 22 நிமிடங்கள் 54 விநாடிகளில் கடந்து சாதனை படைத்திருக்கிறார். இதில் உள்ள திகிலே, 1,500 அடி உயரத்தில்  நடப்பது மட்டுமின்றி, மணிக்கு 35 மைல் வேகத்தில் அடிக்கும் காற்றையும் எதிர்கொள்வதுதான். இதுபோல், அரிஸோனாவில் (Niagra) உள்ள பள்ளத்தாக்கினையும், நயாகரா (Arizona) நீர் வீழ்ச்சியின் மேலும் எவ்விதப் பாதுகாப்பு வலைகளோ, ஜாக்கெட்டுகளோ இல்லாமல் கடந்திருக்கிறார்.

பென் டிரைவ் !

ஆல் இந்தியா கவுன்சில் ஆஃப் ஸ்போர்ட்ஸ், சர்வதேச களரிப் பயட்டுக் கூட்டமைப்புடன் இணைந்து நடத்திய இந்த ஆண்டுக்கான தேசியக் களரிப் பயட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள், திருவனந்தபுரத்தில் உள்ள வஞ்சியூரில் நடைபெற்றன.

இந்தப் போட்டியில், தமிழ்நாட்டின் சார்பாக 'ஈஷா சம்ஸ்கிருதி’ மாணவர்கள் ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பிரிவுகளில் உயரம் தாவி எத்துதல் (ஹைகிக்), மெய் பயட்டு (உடலை வளைத்துப் பயிற்சிசெய்தல்), கைப் போர் (ரெஸ்ட்லிங்), வாளும் கேடயமும் (ஸ்வார்ட் - ஷீல்ட்), உருமி (சுருள்) போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு 15 பதக்கங்களுடன் இரண்டாம் இடம்பிடித்தனர்.

பென் டிரைவ் !

கேரள மாநிலம் முதல் இடத்தைப் பிடித்தாலும், 'ஈஷா சம்ஸ்கிருதி’ மாணவர்களின் இந்தச் சாதனையால், களரியில் தமிழ்நாடும் தனது சாதனைப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

பென் டிரைவ் !

இரண்டரை வயது குழந்தையிடம் ஷேக்ஸ்பியரின் நாவல் ஒன்றைத் தந்தால், அது என்ன செய்யும்? கிழிச்சுப் போட்டுரும்தானே?  ஆடம் கிர்பி அப்படி அல்ல;  அந்த நாவலில் 100 வார்த்தைகளையாவது எழுத்துக்கூட்டிப் படிப்பான். ரசாயனப் பொருட்களின் பெயர்களையும் சரியாக வாசிக்கிறான். இவனுடைய  புத்திக் கூர்மை (IQ) 141. இது, அமெரிக்க அதிபரான ஒபாமா மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோருக்கு இணையானது. உலகிலேயே மிகக் குறைந்த வயதின், அறிவுஜீவிகளின் குழுவான, மென்சா’வில் இடம்பெற்றிருக்கிறான் கிர்பி.

பென் டிரைவ் !

நடமாடும் உணவகம், நடமாடும் ரேஷன் கடை, நடமாடும் மருந்தகம் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், சீனாவில் ஒருவர், நடமாடும் வீட்டோடு உலா வருகிறார். அவருடைய பெயர், லியூ லிங்சாவோ (Liu Lingchao). வயது 38. குயாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த இவர், ஊர் ஊராகச் சுற்றும் நாடோடியாகிவிட்டதால், போகும் இடத்தில் தங்கிக்கொள்ள இடம் தேடுவதில் பிரச்னை இருந்தது. அதனால், மூங்கில் சட்டங்கள் மற்றும் பிளாஸ்டிக் ஷீட்டுகளை இணைத்து, நடமாடும் வீட்டை உருவாக்கியிருக்கிறார். இதன் எடை சுமார் 60 கிலோ. தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் இந்த வீட்டைத்  தோளில் தூக்கிச் செல்கிறார் லிங்சாவோ!

நகரங்களில் வாகனங்கள் பெருகிவிட்டதால் டிராஃபிக்கும் பெருகிவிட்டது. அலுவலகத்துக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ செல்ல வேண்டுமானால், வீட்டில் இருந்து ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்ப வேண்டும். அதேபோல்தான், இரு பிரிட்டன் விஞ்ஞானிகள் டிராஃபிக்கில் சிக்கி அவதிப்பட்டார்கள். அதன் விளைவாகத்தான் இந்தப் பறக்கும் சைக்கிளைக் கண்டுபிடித்தார்கள்.

முதன்முதலாகக் கண்டுபிடித்த இந்த சைக்கிள், 4,000 அடி உயரம் வரை பறக்கக்கூடியது. 249 சி.சி. இன்ஜின்கொண்ட இந்த சைக்கிளில் தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் வரை பறக்கலாம்.

பென் டிரைவ் !

பார்க்கிங் இடமும் பிடிக்கத்  தேவை இல்லை. இதனை சாலையிலும் ஓட்டிச்செல்லலாம். இனிமே டிராஃபிக் பற்றிக் கவலைப்படாமல், ஹாயாக சைக்கிளிலேயே பறந்து சீக்கிரமே வீட்டுக்குப் போகலாம்.