Published:Updated:

சுட்டி தியேட்டர் - வில்லன்களின் வில்லன் !

யுவா

சுட்டி தியேட்டர் - வில்லன்களின் வில்லன் !

யுவா

Published:Updated:
##~##

யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் 2010-ல் வெளியிட்ட‘Despicable Me’படத்தின் இரண்டாம் பாகம் ‘Despicable Me 2’ இப்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் பற்றி விமர்சிக்கிறார்கள் சுட்டி ரசிகர்கள்...

சுட்டி தியேட்டர் - வில்லன்களின் வில்லன் !

அபிஷேக்: ''முதல் பாகத்தில் வில்லனாக இருந்து கடைசி நேரத்தில் திருந்தும் 'க்ரூ’, இந்தப் படத்தில் முழு ஹீரோவாக, வில்லன்களுக்கு வில்லனாகப் பட்டையைக் கிளப்பியிருக்கார். 50 பெர்சன்ட் காமெடி, 50 பெர்சன்ட் சாகஸம் என்ற முதல் பாகத்தின் அதே ஃபார்முலாதான் இந்தப் படத்திலும். எந்த வம்பு தும்பும் வேண்டாம்னு, தான் தத்தெடுத்த மூன்று பெண் குழந்தைகளோடும் வேலைக்காக உருவாக்கிய 'மில்லியன்ஸ்’ என்ற மஞ்சள் நிறக் குட்டி உயிரிகளோடும் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கார் க்ரூ. ஆனா, வம்பு வீடு தேடிட்டு வருது.''

தேவா: ''அவரைத் தேடி, 'ஆன்ட்டி வில்லன் லீக்’ என்ற உளவுத் துறை நிறுவனத்தின் ஏஜென்ட், லூசி வர்றாங்க. கடலுக்கு அடியில் இருக்கிற தங்கள் ரகசிய இடத்துக்கு வம்படியாகக் கூட்டிட்டுப் போறாங்க. அங்கே இருக்கிற ஏஜென்ட் தலைவர், 'நாங்கள் கண்டுபிடிச்ச ஜெல்லை யாரோ திருடிட்டுப் போய்ட்டாங்க. அது யார்னு நீதான் கண்டுபிடிக்கணும். அந்த ஜெல்லை யார் உடலில் செலுத்துறோமோ, அவங்க நீல நிறம்கொண்ட பயங்கரமான உயிரியாக மாறிடுவாங்க. அதனால, பல விபரீதங்கள் நடக்கும்’னு சொல்றாங்க. ஆனா, க்ரூ அந்தப் பொறுப்பை மறுத்துட்டு வந்துடுறார்.''

சுட்டி தியேட்டர் - வில்லன்களின் வில்லன் !

ஜெகஸ்ரீ: ''வீட்டுக்கு வந்த சில நாட்களில், தான் உருவாக்கிய மில்லியன்ஸ் நிறையப் பேர் காணாமல் போயிருக்கிறது தெரியுது. அவங்களைக் கடத்திட்டுப்போனது யார்னு தெரியாமல் குழம்பறார் க்ரூ. அப்போது உதவிக்குவரும் லூசி மூலம் அந்த வில்லனின் ரகசிய இடத்தைக் கண்டுபிடிக்கிறார். அங்கே, அவருடைய மில்லியன்ஸ் எல்லாம் நீல நிறப் பயங்கர உயிரியாக மாறி இருக்காங்க. மாற்று மருந்து மூலம் அவங்களைச் சரிசெய்து, வில்லனையும் க்ரூ எப்படி அழிக்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.''

லத்திகா: குட்டி உயிரிகளான மில்லியன்ஸ் பண்ற கலாட்டாவும் மூன்று பெண்களும் தன் அப்பாவான க்ரூவிடம் பண்ற சேட்டைகளும் பயங்கர சிரிப்பை வரவைக்குது. அதிலும் மூத்த பெண், ஒரு பையனோடு சுத்துறதைப் பார்த்து க்ரூவுக்குப் பயங்கர எரிச்சல். குப்பைத் தொட்டியில்         மறைஞ்சுக்கிட்டு அவங்களைக் கண்காணிக்கிறதும், டான்ஸ் பார்ட்டியில் அவங்களைப் பிரிக்கப் படாதபாடு படுறதும் தியேட்டரே அதிருது. கடைசியில் அப்பாவுக்குத் துணையாக மூன்று மகள்களும் களத்தில் இறங்கி, நீல நிறமாக மாறிவிட்ட மில்லியன்ஸ்களைப் பழையபடி மாற்றச் செய்கிற சாகஸம் சூப்பர். 3D அனிமேஷனில் துப்பாக்கியால் சுடும் ஜெல், நம்ம வாயில் ஒட்டிக்கிற மாதிரி இருக்கு.''

சுட்டி தியேட்டர் - வில்லன்களின் வில்லன் !

அபிஷேக்: அனிமேஷன் படங்களில் 540 மில்லியன் டாலர் வசூலைப் பெற்ற படம்னு முதல் பாகம் சாதனைபுரிஞ்சது. இந்த இரண்டாம் பாகம் அந்தச் சாதனையை நிச்சயமாக முறியடிக்கும். அந்த அளவுக்குப் படம் கலகலப்பாகக் கலக்குது.''