Published:Updated:

உடலை முறுக்கும் உற்சாக ட்விஸ்டர்

சந்தோஷ் குமார் பா.கார்த்திக்

உடலை முறுக்கும் உற்சாக ட்விஸ்டர்

சந்தோஷ் குமார் பா.கார்த்திக்

Published:Updated:

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்!

##~##
சென்ற முறை
நாம் 'ஹேங்மேன்’ என்ற வார்த்தைகளை யூகிக்கும் விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தோம். இப்போது நாம் முற்றிலும் வித்தியாசமான ஒரு விளையாட்டினை அறிந்துகொள்வோம்.

இந்த ஆட்டத்தின் பெயர் ட்விஸ்டர் (Twister). இது, மிகப் பிரபலமான உடல்திறனைப் பரிசோதிக்கும் விளையாட்டு. சிறுவர் மட்டும் அல்லாமல், பெரியவர்களும் விளையாடக்கூடிய உற்சாகமான விளையாட்டு.

ட்விஸ்டர் என்பது, முறுக்குதல் (Twist) என்ற வார்த்தையில் இருந்து பிறந்தது. இது உங்கள் உடலை 'முறுக்கும்' விளையாட்டு. ட்விஸ்டரில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பாய் இருக்கும். அந்தப் பாயில், நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட வண்ணங்களில் பல வட்டங்கள் இருக்கும். அந்தப் பாயினைத் தரையில் விரித்துவைக்க வேண்டும். இந்த வட்டங்களில்தான் உங்கள் உள்ளங்கைகளையும் பாதங்களையும் வைக்க வேண்டும்.

இந்த விளையாட்டில், ஒரு சுழல் காட்டி (Spinner) கொடுக்கப்பட்டிருக்கும். அதனைச் சுழற்றிவிட்டு, அம்புக்குறி எந்த வண்ணத்தைக் காட்டுகிறதோ... அதில், ஆடுபவர் தனது எந்தப் பாதத்தை அல்லது, உள்ளங்கையை  எந்த வண்ண வட்டத்தில் வைக்க வேண்டும் என்று முடிவுசெய்ய வேண்டும்.

உடலை முறுக்கும் உற்சாக ட்விஸ்டர்

உதாரணமாக, முதலில் ஆடுபவர், சுழல்காட்டியைச் சுழற்றி, சிவப்பு வண்ணத்தில் வலது கையினை வைக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அடுத்து ஆடுபவர், வேறு ஒரு வண்ணத்தில் ஆரம்பிப்பார். நிறையக் குழந்தைகள் ஆடும்போது... ஒருவர் மற்றொருவர் மேல் சாய்ந்தும், அவரவர் வட்டத்தைத் தொடுவதற்கு முயற்சிப்பார். யார் ஒருவர் கீழே விழாமல் கடைசி வரை ஆடுகிறாரோ, அவரே வெற்றி பெற்றவராவார்.

இந்த விளையாட்டினை மேலும் சுவாரஸ்யமாக்க, வண்ணங்களுக்குப் பதிலாக எண்களையோ, விலங்கு களையோ அல்லது எழுத்துகளையோ உபயோகிக்கலாம்.

உடலை முறுக்கும் உற்சாக ட்விஸ்டர்
உடலை முறுக்கும் உற்சாக ட்விஸ்டர்

ஓர் அணிக்கு நான்கு பேர் என  இரண்டு அணிகளாகப் பிரித்துக்கொண்டு எந்த அணி அதிகமான நேரம் கீழே விழாமல் இருக்கிறார்களோ, அவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்று கூறி,  ஆட்டத்தினை இன்னும் விறுவிறுப்பாக்கலாம்.

சிறுவர்களும் பெரியவர்களும் ஒன்றுகூடி ஆடும்போது சிரிப்பலைகளுக்குப் பஞ்சம் இருக்காது.

அடுத்த இதழில் மற்றும் ஒரு புதிய விளையாட்டுடன் சந்திப்போம்.