Published:Updated:

துளித் துளியாய்...

தண்மதி திருவேங்கடம் கே.குணசீலன்

துளித் துளியாய்...

தண்மதி திருவேங்கடம் கே.குணசீலன்

Published:Updated:
##~##

நம் கையில் பணம் இருந்தால், எந்தப் பொருட்களையும் வாங்கலாம். 100 ரூபாய் இருந்தால், புத்தகம், பொம்மைகள், தின்பண்டங்கள் எனத் தேவைப்படுவதை வாங்க முடியும். ஆனால், அந்த 100 ரூபாயைக் கொடுத்து, 200 ரூபாயை வாங்க முடியுமா? அந்த அதிசயத்தைச் செய்துகாட்டுகிற மேஜிக்தான் முதலீடு.

கிராமத்து வீடுகளில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். இந்த நெல்லை அரிசியாக்கினால் சாப்பிடலாம். ஆனால், எல்லா மூட்டை நெல்லையும் அரிசியாக்க மாட்டார்கள். ஒரு மூட்டை நெல்லை தனியாக எடுத்துவைத்து, விதையாகப் பயன்படுத்திச் சாகுபடி செய்வார்கள். அந்த ஒரு மூட்டை நெல், 100 மூட்டைகளாக மாறும்.

பணமும் அப்படித்தான். நம்மிடம் உள்ள எல்லாத் தொகையையும் செலவழிக்கலாம். அல்லது, கொஞ்சம் சேமித்து, அதை முதலீடு செய்து பணத்தைப் பெருக்கலாம். இப்படிப் பெருக்கிய பணத்தை, செலவுக்கும் சேமிப்புக்கும் அல்லது மேலும் முதலீடு செய்யவும் பயன்படுத்தலாம்.

ஆனால், முதலீடுசெய்ய அடிப்படையாகப் பணம் வேண்டும். கையில் ஒரு தொகை இருந்தால்தான், அதைப் பெருக்கிக் காட்ட முடியும். வெறும் கையால் முழம் போட முடியாது. அந்த அடிப்படைத் தொகைக்காகத்தான் நீங்கள் சேமிக்க வேண்டும்.  

சுட்டிகள் எதிர்காலத்துக்காக எப்படி முதலீடு செய்யலாம்?

பல வழிகள் இருந்தாலும், மிகவும் எளிமையான வழி... சேமித்த பணத்தை அஞ்சலகத்திலோ அல்லது வங்கியிலோ போட்டுவைப்பதுதான். உண்டியலில் போட்டுவைத்தால், அது வெறும் சேமிப்புதான்; முதலீடு அல்ல. எத்தனை வருடங்கள் கழித்து எடுத்துப் பார்த்தாலும் உண்டியலில்

துளித் துளியாய்...

போட்ட பணம் அப்படியேதான் இருக்கும். அதிகமாகி இருக்காது. ஆனால், அஞ்ச லகத்திலோ அல்லது வங்கியிலோ போட்ட பணம் சில வருடங்களில் பெருகி இருக்கும். ஏனென்றால், அங்கே நம் பணத்துக்கு வட்டி கொடுப்பார்கள்.

100 ரூபாயை மாதாமாதம் அஞ்சலகத்தில் சேமித்து வந்தீர்கள் என்றால், ஐந்து வருடம் கழித்து எவ்வளவு ஆகியிருக்கும்? 100ஙீ12ஙீ5=6,000 என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. வட்டித் தொகையுடன் சேர்த்து

துளித் துளியாய்...

7,445.30 கிடைக்கும்.  ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?

மாதம்

துளித் துளியாய்...

100 வீதம் ஆறாம் வகுப்பில் இருந்து சேமிக்க ஆரம்பித்தீர்கள் என்றால், ஐந்து வருடங்களில் 10-ம் வகுப்பு முடிக்கும்போது, 7,500 ரூபாய் கிடைக்கும். இதுவே மாதம்

துளித் துளியாய்...

200-ஐ சேமித்தால், இந்தக் காலகட்டத்தின் முடிவில், 15,000 ரூபாய் கிடைக்கும்.

எல்லா மாதங்களிலும் ஒரே அளவிலான பணம் கையில் சேராது. ஆனால், விசேஷ நாட்கள் உள்ள சில மாதங்களில் அதிகம் கிடைக்கும். அப்போது, அதிகத் தொகையைச் சேமிப்புக்காக ஒதுக்கலாம். சேமிப்பு என்பது உடனடியாக சந்தோஷம் கொடுக்காதுதான். ஆனால், பொறுமையாக இருந்தால் நிச்சயம் நிரந்தர சந்தோஷம் கிடைக்கும்.

அஞ்சலகத்தில் ஐந்து வருட ரெக்கரிங் டெபாசிட் திட்டம் என்று உள்ளது. இதை ஆரம்பிக்க வெறும் 10 ரூபாய் போதும். மாதம்தோறும் 10 ரூபாய் போட்டு வந்தாலே ஐந்து வருட முடிவில்,

துளித் துளியாய்...

744.50 கிடைக்கும். அதாவது 8.30% என்ற விகிதத்தில் வட்டி கிடைக்கும். அதுவே, மாதம் 100 ரூபாயோ அல்லது அதற்கு மேலேயோ சேமிக்க ஆரம்பித்தால், நல்ல தொகை கையில் சேரும்.  

அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதம்தோறும் குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கட்ட வேண்டும்.  ஒரு மாதம் உங்கள் கையில் அதிக தொகை கிடைத்துவிட்டது என்றால், அட்வான்ஸாக பணம் கட்டலாம். அதற்குச் சில சலுகைகளும் கிடைக்கும். அதேபோல், குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கட்டத் தவறினால், அடுத்த முறை கட்டும்போது சிறு அபராதம் கட்ட வேண்டியிருக்கும். தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் கட்டவில்லை என்றால், உங்கள் அக்கவுன்ட் டிஸ்கன்டின்யூ ஆகிவிடும்.  இதை மறுபடியும் தொடர வேண்டும் என்றால், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஆவண செய்ய வேண்டும்.

நீங்கள் வேறு ஊர் மாறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை.  ஓர் அஞ்சலகத்தில் இருந்து இன்னோர் அஞ்சலகத்துக்கு உங்கள் கணக்கை எளிதாக மாற்றிவிடலாம்.

அஞ்சலகத்தில் உங்களது சேமிப்பு ஓர் ஆண்டைத் தாண்டிவிட்டால், நீங்கள் சேர்த்திருக்கும் தொகையில் பாதி அளவு வரை திரும்ப எடுக்க முடியும். இது, ஒரு முறை மட்டுமே. பாதியிலேயே இந்த அக்கவுன்ட் வேண்டாம் என்று நினைத்தால், மூன்று வருடம் தாண்டிய பின்னர், சேமிப்புக் கணக்கை முடித்துக்கொள்ளலாம்.

உலகிலேயே மிகப் பெரிய அஞ்சலக நெட்வொர்க் கொண்டது, நமது இந்திய அஞ்சல் துறை. இந்தியாவில் ஒன்றரை லட்சத்துக்கும் மேலான அஞ்சலகங்கள் உள்ளன. இதில், 90% கிராமப்புறங்களில் உள்ளன. மேலும், உலகிலேயே மிகப் பெரிய, பழமையான நிதி நிறுவனமும் இந்திய அஞ்சல் துறைதான். இங்கு, சுமார் 23 கோடியே 80 லட்சம் சேமிப்புக் கணக்குகள் உள்ளன.

துளித் துளியாய்...

நமக்குக் கிடைக்கும் சிறு தொகையை முதலீடு செய்யும் முறைப் பற்றி அடுத்தடுத்த இதழ்களில் இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

         (சேமிப்போம்...)