Published:Updated:

கூ...கூக்கூ...அறிவியல் !

த.திலீபன் தி.குமரகுருபரன்

பிரீமியம் ஸ்டோரி
கூ...கூக்கூ...அறிவியல் !
##~##

ரயில் என்றாலே குழந்தைகளுக்கு எப்போதும் உற்சாகம்தான். அதிலும் தனக்குள் அறிவியல் தகவல்களுடன் குளுகுளு வசதியுடன் ஒரு ரயில் நம்மைத் தேடிவந்தால், உற்சாகத்துக்குச் சொல்லணுமா?

சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப விஞ்ஞானத் துறையின் கூட்டு முயற்சியால், 'சயின்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்றும் 'பையோடைவர்சிடி ஸ்பெஷல்’ என்றும் அழைக்கப்படும் இந்த ரயில், 16 பெட்டிகளுடன் இந்தியா முழுவதும் சுற்றி வருகிறது.

இந்த அறிவியல் கண்காட்சி  ரயில், அக்டோபர் 2007-ல் தொடங்கப்பட்டது.  இதுவரை இந்தியா முழுக்க 92,000 கி.மீ. கடந்துள்ளது. 94 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். இந்தியாவின் மிகப் பெரிய, அதிக மக்கள் பார்க்கும் அறிவியல் கண்காட்சி இதுதான்.

இந்த ஆண்டு ஏப்ரல் 9 அன்று டில்லியில் உள்ள 'சப்தர்ஜங்’ ஜங்ஷனில் தொடங்கிவைக்கப்பட்டது. அக்டோபர் 28 வரை இந்தியாவின் 62 நகரங்களில் குறிப்பிட்ட நாட்களில் பொதுமக்கள் பார்த்து மகிழலாம். அறிவை வளப்படுத்திக்கொள்ளலாம்.

கூ...கூக்கூ...அறிவியல் !

இந்த ரயில், ஜூலை 27 முதல் 30 வரை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் தொடங்கி மாலை வரை நீண்ட வரிசை. ஆசிரியர்கள்,  பெற்றோர்கள் என செம கூட்டம்!

முதல் பெட்டி, உயிரினங்கள் பற்றியது (ஙிவீஷீபீவீஸ்மீக்ஷீsவீtஹ்). 91,200 விலங்குகள், 41,500 பறவைகள், 50,000 பூச்சிகள் பற்றிய செய்திகளும் படங்களும் காட்சியாக இருந்தன.  ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் ஓர் உயிரினம் அழிந்துவிடும் தகவலை அங்கு அறிந்தபோது வருத்தமாக இருந்தது.

கூ...கூக்கூ...அறிவியல் !

இரண்டாவது பெட்டி, இமயமலையும் அதைச் சுற்றியுள்ள வளங்களையும் பற்றியது. மூன்றாவது பெட்டியில், கங்கை நதியின் வளம், அதைச் சுற்றி இருக்கக் கூடிய மக்கள்தொகை... இப்படி ஒவ்வொரு பெட்டியும் அறிவுப் பெட்டகமாக உள்ளது.

எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெளியே வரும் மாணவ, மாணவிகளிடம்... ''எப்படி இருந்தது கண்காட்சி?'' என்று கேட்க, அவர்கள் உற்சாகத்துடன் சொல்லும் பதில்...

கூ...கூக்கூ...அறிவியல் !

''கூக்கூனு ஒரு புது உலகத்துக்குள் பயணம் செஞ்சுட்டுவந்த மாதிரியே இருக்கு'' என்றார்கள் கோரஸாக.

உங்கள் பகுதிக்கும் இந்த 'அறிவியல் உலகம்’ வரும்போது, மிஸ் பண்ணிடாதீங்க நண்பர்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு