Published:Updated:

மாண்புமிகு மாணவன் !

வி.எஸ்.சரவணன் சொ.பாலசுப்ரமணியன்

பிரீமியம் ஸ்டோரி

பவர் பாய்ன்ட் நாயகன்

##~##

''பேசும் புத்தகம் தயாரிச்சிருக்கேன் சார்'' என்று முன்னாள்  ஜனாதிபதி அப்துல் கலாமிடம் அந்தச் சிறுவன் கூறியபோது, அவருடைய கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தன. அந்தச் சிறுவனின் முதுகைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டியிருக்கிறார், கலாம்.

அந்தச் சிறுவன், 8-ம் வகுப்பு படிக்கும் அருண்குமார். கூடுவாஞ்சேரியின் அருகில் உள்ள அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே, தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இருக்கும் பயிற்சிகளை ஓரிரு நாட்களிலேயே முடித்து, ஆசிரியர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பெரிய வகுப்பு மாணவர்களுக்கு கணினி கற்றுக்கொடுப்பதைப் பார்த்து, தானும் கற்றுக்கொண்டு, மூன்றாம் வகுப்பில் கொடுக்கப்படும் ஏ.பி.எல். அறிவியல் கார்டுகளை 'பவர் பாயின்ட்’ ஆகச் செய்துகாட்டினார். நான்காம் வகுப்பில், 'உப்பு நீரில் முட்டை மிதக்கும்’ அறிவியல் பரிசோதனையை அனிமேஷனாகச் செய்து அசத்தினார்.

''எஸ்.எஸ்.ஏ (சர்வ சிக்ஷா அபியான்)யில் கொடுத்த சப்ளிமென்ட்டில் இருக்கும் இயற்கைக் கத்தரிக்காய்க்கும் பி.டி. கத்தரிக்காய்க்கும் இருக்கும் வித்தியாசங்களைப் பவர் பாய்ன்ட் ஆகச் செய்தேன். அதில் நானே பேசிப் பதிவு செய்தேன். அதைத்தான் அப்துல் கலாம் அவர்களிடம் காட்டினேன்'' என்கிறார் அருண்குமார்.

செங்கல்பட்டில் நடந்த அறிவியல் கண்காட்சியில், இவரது பவர் பாய்ன்ட்டுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. அருண்குமாரின் அறிவியல் ஆர்வத்துக்கு ஆசிரியை சித்ராவின் பயிற்சியும் பக்கபலமும் காரணம்.

மாண்புமிகு மாணவன் !

'கனெக்ட்டிங் கிளாஸ் ரூம்’ என்ற திட்டத்தில் அஸ்தினாபுரம் பள்ளியுடன், இங்கிலாந்தில் இருக்கும் இரண்டு பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் அருண்குமாருடன் சகமானவர்களும் சேர்ந்து தயாரித்த பவர் பாய்ன்ட்டை, இங்கிலாந்து  மாணவர் களுக்குப் பாடமாகக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். அருண்குமாரின் ஆர்வமும் முயற்சியும் இவருடைய சாதனை பயணத்தில் பெரும் வெற்றிகளைக் குவிக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு