Published:Updated:

புதுமை ஆட்டம் பகடை 20

ஜெ.வேங்கடராஜ் சந்தோஷ் குமார்

பிரீமியம் ஸ்டோரி

 ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

##~##

சென்றமுறை சைகை விளையாட்டால் பொழுதைக் கலகலப்பாகக் கழித்தீர்களா? இதோ இன்னொரு வித்தியாசமான விளையாட்டு.

இந்த விளையாட்டின் பெயர், 'ஸ்காட்டேர்கொரீஸ்’ (Scattergories).. இதை இரண்டு முதல் ஆறு நபர்கள் விளையாடலாம். 12 வயதுக்கு  மேற்பட்டவர்கள் விளையாடக்கூடிய, மூளைக்கு வேலைதரும் ஆட்டம் இது.

நீங்கள், ஆறுமுகங்கள்கொண்ட பகடைக் காயைப் பார்த்திருப்பீர்கள். ஸ்காட்டேர்கொரீஸில்  மிகவும்  வித்தியாசமான 20 முகங்கள்கொண்ட பகடைக் காய் இருக்கும். (பார்க்க படம்) ஒவ்வொரு முகத்திலும் ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும்.

மேலும், ஒவ்வொருவரும் தங்களது பதிலை எழுத பேப்பரும், மூன்று பிரிவுகளில் (category) அட்டைகளும் இருக்கும். ஒவ்வோர் அட்டையிலும்,  இரண்டு பிரிவுகளில் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தப் பட்டியலில் சுவாரஸ்யமிக்க 12 பிரிவுகள்  கொடுக்கப்பட்டிருக்கும்.

விளையாடுபவர்களில் ஒருவர், பகடைக் காயை உருட்டி, ஓர் எழுத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். பிறகு, ஒரு பிரிவுப் பட்டியலைத் தேர்வுசெய்து, விளையாட்டைத் தொடங்கலாம். ஒவ்வொருவரும் தேர்வுசெய்த எழுத்தில் தொடங்கும், கொடுக்கப்பட்டிருக்கும் பிரிவுக்குத் தகுந்த பொருள்களின் பெயர்களை எழுத வேண்டும்.  

புதுமை ஆட்டம் பகடை 20

எடுத்துக்காட்டாக, கொடுக்கப்பட்டிருக்கும்   பிரிவு  Vegetables’ என்று வைத்துக்கொள்வோம். ‘R’ என்ற எழுத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால், Radish, Red Banana என்று எழுதலாம். ஆனால், Cauliflower என்றோ, Lady’s finger என்றோ வேறு  எழுத்துகளில் தொடங்கும் பெயர்களை எழுதினால், அது தவறு.

இரண்டு வார்த்தைகள்கொண்ட பெயர்களும் எழுதலாம். அதில் இரண்டு வார்த்தைகளும் கொடுக்கப்பட்ட எழுத்தில் ஆரம்பித்தால், கூடுதல் மதிப்பெண்கள் உண்டு. எழுதுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளாதீர்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தை முடிவுசெய்து, நேரம் முடிந்தவுடன்

புதுமை ஆட்டம் பகடை 20

அனைவரும் எழுதுவதை நிறுத்திவிட வேண்டும்.

பட்டியலில் உள்ள பிரிவுக்கு, நீங்கள் ஒவ்வொருவராக தங்களது விடையை சொல்ல வேண்டும். மற்றவர் எழுதிய விடையை, நீங்கள் எழுதினால், இருவருக்கும் மதிப்பெண்கள் கிடையாது. இவ்வாறாக, அனைத்துப் பிரிவுகளும் வாசிக்கப்பட்டு, மொத்த மதிப்பெண்கள் கணக்கிட்டு, அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டும். கடைசியில், யார் அதிக மதிப்பெண்களுடன் இருக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்.

நினைவாற்றலை அதிகரிக்கும் ஸ்காட்டேர்கொரீஸ் ஜாலியாக விளையாடுங்கள். அடுத்த முறை இன்னும் சுவரசியமான விளையாட்டுடன் சந்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு