Published:Updated:

பண்ருட்டியில் கலர் கலாட்டா !

வி.எஸ்.சரவணன் ரா.ராபின் மார்லர்

பிரீமியம் ஸ்டோரி
##~##

 அன்புள்ள விமல்,

நீயும் உன் வீட்டினரும் நலமா? எங்கள் பள்ளியில் ஒரு சூப்பரான நிகழ்ச்சி நடந்துச்சு. அது, சுட்டி விகடன் நடத்தின கலர் கலாட்டா.

அன்னைக்கு எங்க பள்ளி புது மாதிரியா மாறிடுச்சு. வேற பள்ளிகளிலிருந்தும் நிறையப் பேர் வந்திருந்தாங்க. நான் நைஸா இடம் மாறி, விஷாலி பக்கத்தில் உட்கார்ந்துக்கிட்டேன். எங்களுக்குத் தந்த கிட் பேக்கில் கிரயான்ஸ், பெயின்ட், பிரஷ் என பெயின்டிங் பண்றதுக்குத் தேவைப்படும் எல்லாமே இருந்துச்சு.

அப்போ ஒரு அங்கிள் வகுப்புக்கு வந்தார். ''என் பெயர் விஸ்வம்'' என்றவர், ஓவியம் பற்றி பல விஷயங்களைச் சொல்லி, ஓர் ஓவிய ஆசிரியரை அறிமுகம் செஞ்சுவெச்சார். அவர் எங்க வகுப்பு பாபுவை உட்காரவெச்சு, போர்ட்ரெய்ட் வரைவது எப்படி என்பதைச் சொல்லிக்கொடுத்தார்.

அப்புறம், எங்களை வெளியில் அழைச்சுட்டுப் போய் ''நீங்க எதைப் பார்க்கிறீங்களோ, அதை அப்படியே வரைங்க. இதுக்கு பேர், 'அவுட்டோர் டிராயிங்’ '' என்றார். பூச்செடிகள் பக்கமாக தன் சைக்கிளை நிறுத்தியிருந்தார் எங்கள் பள்ளி வாட்ச்மேன். நான் அதை வரைந்தேன்.

பண்ருட்டியில் கலர் கலாட்டா !

போர்ட்ரெய்ட், கேரிகேச்சர் என நிறையச் சொல்லிக்கொடுத்தாங்க. அப்புறம், எல்லோருக்கும் பலூன்களைக் கொடுத்து, அதை வீட்டுக்கு எடுத்துப்போய் ஊதி, அதன் மேல் நியூஸ் பேப்பரை நல்லா ஒட்டி, நாளைக்கு எடுத்துட்டு வாங்கன்னு சொன்னாங்க... இத்துடன் முதல் நாள் பயிற்சிகள் முடிஞ்சது.

பண்ருட்டியில் கலர் கலாட்டா !

அடுத்த நாள், ஒட்டி எடுத்துவந்த பலூனைப் பாதியா வெட்டி பலூன் மாஸ்க் செஞ்சோம்.  ஒருத்தர் ஸ்பைடர்மேன், மற்றவர்கள் புலி, சிங்கம் என்று விதவிதமா செஞ்சு அசத்தினோம்.

அடுத்து, கிளாஸ் பெயின்டிங், வெஜிடபிள் பிரின்டிங், ஸ்டென்சில் கட்டிங், கொலாஜ் வொர்க், ஆயில் பெயின்டிங் எனச் சொல்லிக்கொடுத்தாங்க. கடைசியாகக் கற்றுக்கொடுத்த, களிமண் சிற்பங்கள் செய்றது செம ஜாலி. எங்களோட அம்மாவுக்குத் துணியில் டிசைன் பண்றதுக்கும் சொல்லிக்கொடுத்தாங்க.

கடைசியாக, எங்க எல்லோருக்கும் சர்ட்டிஃபிகேட் கொடுத்தாங்க. சுட்டி விகடன் சார்பாகப் பேசியவர், ''சிறப்பான கல்வியைத் தந்துவரும் பண்ருட்டி, ஜான் டூவி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி இந்த நிகழ்ச்சியை நடத்த எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தது. அதற்காக பள்ளி முதல்வர் வாலன்டினா லெஸ்லி மற்றும் தாளாளர் எம்.வீரதாஸ் இருவருக்கும் நன்றி சொன்னார்''.

விமல், அடுத்த கலர் கலாட்டா நிகழ்ச்சி, ஆகஸ்ட் 24, 25 தேதியில் உன்னோட திருச்சியில், ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடக்குதாம். மிஸ் பண்ணிடாதே!

அன்புடன்,
சஞ்சனா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு